கர்நாடகா, ஆந்திராவில் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய பன்னோக்கு ரயில் வழித்தடத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கர்நாடகா, ஆந்திராவில் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய பன்னோக்கு ரயில் வழித்தடத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பல்லாரி-குண்டக்கல் பிரிவில் மூன்றாவது, நான்காவது ரயில் வழித்தடங்களை அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், 1,264 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் மக்களின் பயணம், சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றிக்கு ஊக்கமளிக்கும்.
கர்நாடகா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களின் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய இத்திட்டம், ரயில்வேயின் தற்போதைய வழித்தடத்தை 46 கிலோமீட்டர் அளவிற்கு அதிகரிக்கும். ஏழு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இத்திட்டத்தால் பயனடைவார்கள். பல்லாரிக் கோட்டை, குமாரசாமி ஆலயம் போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு இத்திட்டம் போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கும்.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம் இரும்புத்தாது, நிலக்கரி, எஃகு, உரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் முக்கிய வழித்தடமாகும். தற்போதைய விரிவாக்கப் பணிகளின் மூலம் 16.22 மில்லியன் டன் அளவுக்கு சரக்குப் போக்குவரத்து அதிகரிக்கும். அத்துடன் இப்பகுதியை மக்களின் வேலைவாய்ப்பும், சுயதொழில் வாய்ப்புகளும் மேம்படும்.

கருத்துகள்