முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரூர் அரசு விழா கலந்து கொண்ட முதல்வர் மக்கள் திரண்டு வரவேற்றனர்

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் கலந்துகொண்ட கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் தேர்தல் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி,




இன்று 10. ஜூலை. 2026  வெள்ளிக்கிழமை, கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், காதப்பாறை பகுதியில் மதியம் 12.00 மணி அளவில் நடைபெற்றது. காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி நிகழ்ச்சி முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக கட்சி மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது.




விரைவுக் குறியீட்டுடன் (QR CODE)  கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்ட 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். வேறு யாருக்கும்  அனுமதி கிடையாது. விரைவு குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான




விரைவு  குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம் என முன் அறிவிப்பும்,  விரைவுக் குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அனுமதிச் சீட்டு இல்லாதவர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் காண அறிவுரை, விரைவு குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கரூரில் 27.9.2025 அன்று நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் 31 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை நேரில் வழங்கினார்.கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் இந்த ஆணைகள் வழங்கப்பட்டன.  கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக அரசியல் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கிய 41 பேர் உயிரிழந்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தகுதியின் அடிப்படையில் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுப் படி தற்காலிகப் பணிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்ட இந்த நிகழ்வின் மூலம் மொத்தம் 31 பேருக்குப் பணி ஆணைகள் வழங்கப்பட்டன, மேலும் விழாவில் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் புதிய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்,  கரூரின் மனவாசி ஊராட்சியில் சுமார் ரூபாய் 1,700 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள தோல் அல்லாத காலணி உற்பத்திக்கு Evergreen Kothari Footwear  தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தத் தொழிற்சாலையின் மூலம் கரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 13,500 இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.   கடந்த காலத்தில் தனியார் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அதிமுக ஆட்சியில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் மற்றும் படுகாயமடைந்த 16 பேருக்கும் அவர்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப தமிழ்நாடு அரசுப் பணி மற்றும் தலா ரூபாய் . 10 லட்சம் இழப்பீட்டுத் தொகையையும் கடந்த காலத்தில் திமுக ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த பணி நியமன ஆணைகள் 2021-ஆம் ஆண்டு மே மாதம் மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு நேரில் வழங்கப்பட்டன. அப்போது யாரும் அரசு வேலை வழங்குவதற்கு தடை கேட்டு நீதிமன்றம் செல்லவில்லை என்பதும், தற்போது பணி வழங்க நீதிமன்றம் சென்ற நிலையில் தற்போது தற்காலிக பணி ஆணை வழங்க வேண்டிய நிலை வந்துள்ளது, காரணம் இறுதி உத்தரவு வரும் முன் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் பிரதிவாதியாக இணைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது."ஓடு.. ஓடு.. ஓடு.. வரான் பாரு வேட்டைக்காரன்" எனப் பாடி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் குறிப்பிட்டுப் பேசிப் பாடியது சமூக வலைத்தளங்களில் வந்து இணையத்தில் வைரலானது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...