தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் அரசு வழக்கறிஞர்கள் Government Pleaders மற்றும் Public Prosecutors நியமனம் செய்வதற்கான பணிகள் தற்போது நிறைவடைகின்றன.
சட்டத்துறையின் செயலாளராக பணியாற்றி வந்த சி.ஜார்ஜ் அலெக்சாண்டர் ஓய்வு பெற்ற நிலையில், மாநில சட்ட ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் செயலாளராக பணியாற்றி வந்த ப.சுமதி புதிய செயலாளராக சமீபத்தில் நியமனம் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தலைமையில் இந்த நியமன செயல்முறைகள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்டன.சிவகங்கை மாவட்டத்தில் 13 அரசு வழக்கறிஞர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்,
நியமனங்கள் அனைத்தும் உரிய சட்ட விதிகளின்படியே எவ்வித முறைகேடுகளுமின்றி நேர்மையான முறையில் நடத்தப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.அரசு வழக்கறிஞர்கள் நியமனம் 100 சதவீதம் நேர்மையாக நடக்கவும்,
இதில் யாராவது பணம் கேட்டாலோ அல்லது முறைகேடுகளில் ஈடுபட்டாலோ உடனடியாக புகார் அளிக்கலாம்" என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்கறிஞர்களின் பணிக்காலம் ஜூன் மாதம் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. புதிய வழக்கறிஞர்கள் நியமனம் ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் பொறுப்பேற்க வேண்டிய சூழலில், தாமதம் மற்றும் முறைகேடு புகார்களால்
புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நியமனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 31 நீதிமன்றங்களுக்கு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால், முதல் கட்டமாக 21 வழக்கறிஞர்களுக்கான அரசாணை மட்டுமே ஜூலை முதல் வாரத்தில் வெளியானது. மீதமுள்ள 10 நீதிமன்றங்களுக்கான நியமனங்கள் தாமதமானதால் நீதிமன்றப் பணிகள் முடங்கின, காலதாமதம் மற்றும் நியமனப் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. தொடக்கத்தில் 31 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு காவல்துறை சார்பாக புலனாய்வு விசாரணையும் முடிந்த நிலையில், தகுதிப் பட்டியல் மாற்றப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் 17 வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்தனர்.
மாநில அளவிலான வழக்குகள்:தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுவதாகக் தவறான தகவல் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் த.வெ.க விழுப்புரம் வழக்கறிஞர் ஞானசௌந்தரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இருப்பினும், இந்த நியமனங்கள் சட்டப்படி தகுதியின் அடிப்படையில் தான் நடைபெறுவதாகத் தமிழ்நாடு அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. லஞ்சம் கேட்பதாக வழக்கு தொடர்ந்த அந்த வழக்கறிஞர், சொத்த கட்சி பிரச்சனை சார்பாக த.வெ.கவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் லஞ்சம் மற்றும் லாவண்யங்களுக்கு அப்பார்பட்டு கடந்த 30 ஆண்டுகளில் நடந்த ஊழல் இல்லாமல் புதுமையான முறையில் பல மாவட்டங்களில் பட்டியல் வந்துள்ளதை நீதிமன்றமே பாராட்டும் நிலை, இத்தனை வருடமாக ஊழல் காரணமாக பணி பெற்ற பலர் அவதூறு செய்வது கண்டறியப்பட்டது,
































கருத்துகள்