கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக திமுக ஆட்சியில் ஆர். காந்தி பதவி வகித்தார். இவர் தி.மு.க சார்பில் இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டவராவார் இவர் கடந்த திமுக ஆட்சியில் தமிழக கைத்தறித் துறையில் இலவச வேட்டி-சேலைத் திட்டத்தில் அமைச்சராக இருந்த ஆர். காந்தி மற்றும் அவர் மகன் வினோத் காந்தி ஆகியோர்
தமிழக நெசவாளர்களிடம் கொள்முதல் செய்வதற்குப் பதிலாக, ராஜஸ்தானிலிருந்து தரம் குறைந்த துணிகளை இறக்குமதி செய்து, அவற்றை ரகசியமாகச் சலவை செய்து கொல்கத்தாவில் விற்பனை செய்யும் 'ஸ்கேம்' நடைபெறுவதாகக் கூறும் புகார்கள் அதிர்ச்சியூட்டுவதாகும், அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் துணிகளை மக்களுக்கு விநியோகிக்காமல், அவற்றை ரகசியமாகச் சலவை செய்து கொல்கத்தாவில் விற்பனை செய்யும் சம்பவமும் நடைபெற்றள்ளதாம்.
இலவச வேட்டி-சேலை திட்டத்தில் ரூபாய் .60 கோடி மோசடி நடந்துள்ளதாகப் புகார்கள் நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலியைச் சுரண்டி, இடைத்தரகர்கள் கோடிகளில் புரளும் இந்த அவலத்தை அரசு கண்டும் காணாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகளை விநியோகிக்காமல், ராஜஸ்தானிலிருந்து பாலியஸ்டர் துணிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அந்த துணிகளில் 78 சதவீதம் பாலியஸ்டர் கலந்திருப்பதாகவும், இது இயற்கை பருத்தி நாரின் தரத்திற்கு மாறானது என்றும் குற்றம்சாட்டப்படுகிறத
இந்த விவகாரம் குறித்து பல அமைப்புகள் பலமுறை புகார்களை அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைச்சர் காந்தி தனது மகன் வினோதுடன் இணைந்த இந்த மோசடியில் இந்த ஊழல் மூலம் கிடைக்கும் பணம் அமைச்சரின் குடும்பத்திற்கு செல்வதாகவும் புகார்கள் எழுந்தன.
நெசவாளர்கள் தங்களின் பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டு வருமானம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம், சில அதிகாரிகளின் சுயநலத்திற்கு பயன்படுத்தப்படுவது வேதனையானது. இந்த ஊழல் குறித்து உடனடி விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டின் தற்போதைய கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சராக எம். விஜய்பாலாஜி பதவி வகித்து வருகிறார். இவர் த.வெ.க சர்பில் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராவார், அதே போல மற்றுமொரு ஊழல் சிஎம்டிஏ 3,500 கோடி கடனும், சென்னை மாநகராட்சி ஊழலும்.
மழைநீர் வடிகால் டெண்டர் 24 மணி நேரத்தில்; கழிப்பிடம் சீரமைப்பு என்ற பெயரில் ஒரு ஷீட்டுக்கு 500 ரூபாய்; பார்க்கிங் வசூலில் முறைகேடுகள் அதிகார மிரட்டல் - சென்னை மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏவில் நடந்த ஊழல்.
சென்னை மாநகரின் வளர்ச்சிக்குப் பொறுப்பான சிஎம்டிஏ (CMDA) ரூபாய் 3,500 கோடி ரூபாய் கடன் சுமையில் தத்தளிப்பதற்கு முக்கியக் காரணம், ஊழல் கொள்ளைக்காரராக விமர்சிக்கப்படும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ரா. இவருக்கும் அமைச்சர் பி. கே.சேகர் பாபுவுக்கும் இடையே நடக்கும் 'கட்டிங்' போட்டியால் நிர்வாகம் சீரழிந்தது. விவகாரம் முற்றியதும், அன்சுல் மிஸ்ரா லாவகமாகத் தப்பித்து டெல்லி எய்ம்ஸ்-க்கு டெபுடேஷனில் சென்றுவிட்டார்.
சிஎம்டிஏ அலுவலகத்தைப் புதுப்பிக்க மட்டும் ரூபாய் 3 முதல் 4 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நன்றாக இருந்த அலுவலகத்தை புதுப்பித்து பணத்தை வீணடித்த நிகழ்வு நடந்துள்ளது. இன்னொருபுறம், சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் ஒப்பந்தங்கள் வெறும் 24 மணி நேர துரித டெண்டர் முறையில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கப்படுகின்றன. பொதுக் கழிப்பிடச் சீரமைப்பு என்ற பெயரில் ஒரு ஷீட்டுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் செலவு காட்டிப் பணத்தைச் சுருட்டுகிறார்கள். பார்க்கிங் வசூலில் நடக்கும் முறைகேடு மாநகராட்சியால் சம்பளம் கூட வழங்க முடியாத நிதி நெருக்கடிக்குக் காரணம் இத்தகைய ஸ்கேம்களே.
CMDA இன்று ரூபாய் 3,500 கோடி கடன் சுமையில் தத்தளிக்கிறது. கடந்த மே மாதம், அன்சுல் மிஸ்ரா நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு மாதகாலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டெபுடேஷனில் சென்று விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் சென்ற பின்னரும், CMDA-வின் நிதி நிலைமை மேம்படவில்லை; மாறாக கடன் சுமை அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சியில் நிலவும் ஊழல்கள் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வருகின்றன. மழைநீர் வடிகால் ஒப்பந்தங்கள் துரித டெண்டர் முறையில் வழங்கப்படுவதாகவும், அதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. 24 மணி நேரத்தில் டெண்டர் முடிக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் வழங்கப்படுவது வழக்கமான நடைமுறை அல்ல என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் தலையிட்டு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. CMDA-வின் கடன் சுமை குறைக்கவும், மாநகராட்சியில் நிலவும் ஊழல்களை ஒழிக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில், சென்னை மாநகரின் வளர்ச்சி மேலும் பாதிக்கப்படும்; மக்களின் அடிப்படை தேவைகள் புறக்கணிக்கப்படும்.







கருத்துகள்