வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா
டிசம்பர் மாதம் நாடு திரும்பி நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்,
1971- ஆம் ஆண்டு வங்காள தேச விடுதலைப் போரில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உயர் நீதிமன்றம் மீண்டும் கொண்டு வந்தது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந்த சூழலில், தகுதி அடிப்படையிலேயே அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறி பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடங்கினர்.
போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறி, பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சுமார் 1,400-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இரும்புக்கரத்துடன் ஆட்சியிலிருந்த பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை, சில வாரங்களில் மாணவர்கள் நடத்திய போராட்டம் வீழ்த்தியது. பிரதமர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயற்சி செய்ததால், தனி விமானத்தில் பயணித்து இந்தியாவில் தஞ்சமடைந்தார் ஷேக் ஹசீனா.மாணவர் போராட்டங்களின் போது, அவர்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாகக் கூறி, பங்களாதேஷின் சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் கடந்த நவம்பர் மாதம் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. மட்டுமல்லாமல், ஷேக் ஹசீனா மீது 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், டிசம்பர் மாதம் வங்காள தேசம் திரும்பி நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டுள்ளதாக ஷேக் ஹசீனா அறிவித்துள்ளார். பங்களாதேஷில் தற்போது
தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசு, தங்களது அவாமி லீக் கட்சியினரைக் கடுமையாக ஒடுக்கி வருவதாகவும், தனக்கு நேரிடும் மரணம் தனது பெற்றோரின் ரத்தம் சிந்திய சொந்த மண்ணிலேயே நிகழ வேண்டும்என விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். கைது செய்தாலோ, கொன்றாலோ கவலையில்லை என்றும் ஹசீனா ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். வங்காள தேச அரசு தன்னைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியாவிற்குத் தொடர்ந்து கடிதங்களை அனுப்பி வருவதால், இந்தியா தன்னை அனுப்பும் முன்பே தான் நாட்டை நோக்கிப் புறப்படுவதாகக் கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு முதல் ஷேக் ஹசீனாவிற்கு புதுடெல்லி புகலிடம் அளித்துள்ளதால் இந்தியா -பங்களாதேஷ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. தற்போது ஷேக் ஹசீனா மற்றும் அவாமி லீக் தலைவர்கள் தாமாகவே முன்வந்து வங்காள தேசம் திரும்ப முடிவு செய்திருப்பது, டெல்லிக்கு இருந்த ஒரு பெரிய தூதரக தர்மசங்கடத்தைக் குறைக்குமென்றும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவைச் சீராக்க வழிவகுக்குமென்றும் அரசியல் நிபுணர்கள் கருதும் நிலை உள்ளது .




கருத்துகள்