தமிழ்நாடு நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமனம்.
தலைமை செயலாளர் சாய் குமார் இன்று பிறப்பித்த உத்தரவில், ”ஐஏஎஸ் விதிகள் 1954, விதி 4(2)-ன் கீழ், நில நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையர் என்ற தற்காலிகப் பதவி ஒரு வருட காலத்திற்கு அல்லது தேவை முடியும் வரை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு பணியிலிருந்து தமிழ்நாடு மாநிலப் பணிக்கு திரும்பியுள்ள ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் புதிதாக உருவாக்கப்பட்ட நில நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையர் பதவியில் நியமிக்கப்படுகிறார்,
ஓராண்டுக்கு உருவாக்கப்பட்டுள்ள இப்பதவியை, தலைமைச் செயலாளர் கேடர் பதவிக்கு இணையானதாக அரசு அறிவிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1992 ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானி, கடந்த பிப்ரவரியில், தமிழ்நாடு அரசு பணியிலிருந்து மத்திய அரசு பணிக்கு சென்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


கருத்துகள்