விரிவான மறுவாழ்வு மூலம் யாசகர்கள் இல்லாத இந்தியாவை நோக்கிய உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் ஸ்மைல் திட்டம்
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், பாதிக்கப்படக்கூடிய சமூகத்தினரின் சமூக மற்றும் பொருளாதார மறுவாழ்வை கண்ணியத்துடனும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகளுடனும் உறுதி செய்வதற்காக விளிம்புநிலை தனிநபர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவுக்கான ஆதரவு (SMILE) திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, யாசகர்களுக்கான விரிவான மறுவாழ்வுத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மறுவாழ்வு, திறன் மேம்பாடு, கல்வி, சுகாதாரம், ஆலோசனை மற்றும் பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றின் மூலம் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாடு முழுவதும் 216 நகரங்களில் ஸ்மைல் யாசகர்கள் மறுவாழ்வுத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 2030-31 நிதியாண்டுக்குள் மொத்தம் 295 நகரங்களை திட்டத்தின் கீழ் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2026-31 நிதியாண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட நிலையான நிதிக் குழுவின் முடிவின்படி, பெருநகரங்கள் மற்றும் மத, சுற்றுலா மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று அவர் கூறினார். இந்தத் திட்டத்தின் கீழ் 35,000 பேருக்கு மறுவாழ்வு அளிகக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், இதுவரை 10,200-க்கும் மேற்பட்ட யாசகர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மீதமுள்ள இலக்கை 2030-31 நிதியாண்டுக்குள் படிப்படியாக அடையத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

கருத்துகள்