கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு
கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சியின் போது ஆண், பெண் கலைஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆண் கலைஞர்கள் பைஜாம அல்லது வேட்டி, சட்டை அணிந்திருந்த வேண்டும், பெண் கலைஞர்கள் சேலை, தாவணி, அல்லது மேலாடையுடன் கூடிய சுடிதார் அணிந்திருக்க வேண்டும் என நீதிபதி ஆணையிட்டுள்ளார்.
கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுவருகிறது. இந்த மனுக்களை விசாரணை செய்து உரிய நிபந்தனைகளுடன் நீதிபதிகள் அனுமதி வழங்கிவருகிறனர்.
இந்த நிலையில் தஞ்சை வளப்பக்குடி கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வளப்பக்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேரடி கருப்பசாமி கோயில் குடமுழுக்கு விழா 24-ம் தேதி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரியிருந்தோம். ஆனால் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். எனவே இந்த கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சியின் போது ஆண், பெண் கலைஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து ஐகோர்ட் மதுரை கிளைகோயில் திருவிழாக்களில் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஆண் மற்றும் பெண் கலைஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், வளப்பக்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேரடி கருப்பசாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி எல். விக்டோரியா கௌரி இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.நீதிமன்றம் விதித்துள்ள முக்கிய கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் பின்வருமாறு: கலைஞர்களுக்கான ஆடை கட்டுப்பாடுஆண் கலைஞர்கள்: பைஜாமா அல்லது வேட்டி மற்றும் சட்டை அணிந்திருக்க வேண்டும்.பெண் கலைஞர்கள்: சேலை, தாவணி அல்லது மேலாடையுடன் கூடிய சுடிதார் மட்டுமே அணிய வேண்டும்.குழந்தைகள்: முழு உடலையும் மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும்.எந்தவொரு கலைஞரும் பொது மேடைகளில் ஆபாசமான ஆடைகளை அணியக் கூடாது. நடனம் மற்றும் பாடல்களுக்கான தடைகள்எதிர்காலத் தூண்களான இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் மனநிலையைப் பாதிக்கும் இரட்டை அர்த்தப் பாடல்களைப் பாடக் கூடாது.முகம் சுளிக்கும் வகையிலோ அல்லது ஆபாசமாகவோ மேடைகளில் நடனமாடக் கூடாது.பெண்கள் கண்ணியக் குறைவாகச் சித்தரிக்கப்படக் கூடாது.மேடைகளில் அரங்கேறும் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் நமது பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் மட்டுமே அமைய வேண்டும். நேரக் கட்டுப்பாடு மற்றும் பிற விதிகள்ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை மாலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மட்டுமே நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கோயில் திருவிழாக்கள் என்பது மக்களை விலக்கி வைக்கும் கருவி அல்ல, அது ஒட்டுமொத்த கிராம மக்களையும் ஒன்றிணைக்கும் சமூக வழிபாட்டு நிகழ்வு என்று நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.



கருத்துகள்