கோவில் திருப்பணி அனுமதிக்கு ரூபாய் ஒரு லட்சம் லஞ்சம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகில் உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில் மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற ஆலயம் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ வன்மீகநாதர் கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இப் பணியை நாகப்பட்டினம் ஒப்பந்ததாரர் மதியழகன் மேற்கொள்கிறார். இந்த நிலையில் திருப்பணி தொடர்பான அனுமதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக மதியழகனிடம் தஞ்சாவூர் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமியை அனுகி அனுமதி கேட்ட போது ரூபாய் .1 லட்சம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர்
தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார் அவர்கள் ஆலோசனைப்படி
தஞ்சாவூர்: கோவில் திருப்பணி செய்யும்,ஒப்பந்தக்காரரிடம் அரசு சாட்சி முன்னிலையில் ரூபாய் ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய, தஞ்சாவூர் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் அவருக்கு புரோக்கராகச் செயல்பட்டு வந்த அவரது தோழி இருவரையும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் லஞ்சம் பெற்ற கையுடன் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மண்டல ஹிந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையராக ஜோதிலட்சுமி அவரது புரோக்கராக செயல்படும் கிரிஜா வாயிலாக வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மதியழகன் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை, அறநிலையத்துறை அலுவலகத்தில் ஜோதிலட்சுமி, கிரிஜா ஆகியோரிடம் லஞ்சமாகக் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, துணைக் கண்காணிப்பாளர் அன்பரசன் தலைமையிலான குழுவினர் லஞ்சம் பெற்ற இருவரையும் கைது செய்தனர்.
மேலும், ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் சோதனை செய்தனர். கிரிஜா என்பவர், இணைஆணையரின் தோழி. அவருக்கு புரோக்கராக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. அதன் பின்னர்
கைது செய்யப்பட்ட ஜோதிலட்சுமியின் வீடு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பிலோமினாநகர் பகுதியிலுள்ளது. அந்த வீட்டிலும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தி பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்தீபாம்பாள்புரம் மங்களாம்பிகை சமேத வன்மீகநாதர் கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்த 600 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் கோவில் 700-800 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி 'தீபாரண்யம்' என்ற அடர்ந்த வனமாக இருந்தது. தஞ்சாவூர் ஆட்சி செய்த மராட்டிய மன்னர் ஷஹாஜியின் தாயாரான தீபாம்பாள் பாயி ராணி, இங்கு வேதியர்களுக்கு ஒரு குடியிருப்பை ஏற்படுத்தி, சிவபெருமானுக்கு இந்தக் கோவிலை எழுப்பினார். அவரது நினைவாகவே இவ்வூர் "தீபாம்பாள்புரம்" என்றானது








கருத்துகள்