பழனி ஸ்ரீ தண்டாயுதபணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த புகாரில்,
ஏற்கனவே சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அதே விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மாவட்ட பதிவாளர் சசிகலாவையும் தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்
பழனி கோயில் நிலப் பதிவு முறைகேடு தொடர்பான புகாரில் நடைபெற்று வரும் விசாரணை தீவிரமடைந்துள்ளது சமூக வலைதளப் பதிவுக்காக குற்ற வழக்கு பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம், சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகளுக்காக தேவையற்ற குற்ற வழக்குகளைப் பதிவு செய்வதை காவல்துறையினர் தவிர்க்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில், தனிநபர் அவதூறுகளுக்கு சிவில் சட்டத்தின் கீழ் அவதூறு வழக்கு மட்டுமே தொடர முடியுமே தவிர, கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்வது முறையாகாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு பரப்பியதாக வினோத் சூர்யா மீது பொது அமைதியை குலைப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலப்பதிவு குறித்த முதலாவது பர்வை:- D.சேதுபதி ,K.வெள்ளதுரை எனும் இரண்டு பேர் ஏப்ரல் 10-ஆம் தேதி ஸ்ரீ தண்டபானி ஆலய மடத்துக்குச் சொந்தம்மென்று சொல்லப்படுற நிலத்தோட விற்பனை பத்திரத்தை பதிவு செய்ய உத்திரவிட வழக்கு தொடுக்க அதில் எதிர்மனுதாரர்களில் ஒருவர் "The sub registrar".
பார்வை 2 :-ஸ்ரீ தண்டபானி மடம் அந்த ரெண்டு பேர் வழக்கு தொடுத்து ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வாங்கின தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்ய அதிலும் எதிர்மனுதாரர் The subregistrar" ஒரு வருடமாக திமுக ஆட்சியில் அந்த இடத்தை பதிவு செய்யக் கூடாதுனு பல கடிதம் மாவட்ட மற்றும் துணைப் பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பபட்டிருக்கிறது, ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நிலத்தை பதிவு பண்ணனும் சொல்றவனுக்கும் respondent "Sub registrar"தான்,அதை எதிர்த்து முறையீடு போன தண்டபானி மடத்துக்கும் respondent "sub registrar"தான்.அப்போது இதோட முழு விவரங்களும் எல்லாருக்கும் தெரியும் அப்படி இருந்தும் இந்த இடைப்பட்ட காலத்துல எப்படி அந்த நிலம் பதிவு செய்யப்பட்டுச்சு? தவறு நடந்துச்சுனா எங்க நடந்துச்சு? எப்படி நடந்துச்சு? யாரெல்லாம் இதுக்கு பின்னால் இருக்கிறார்கள்! என்பதே இதில் எழு வினா,? அதேபோல் சென்னை பெருநகர மாநகராட்சியில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாக 4 மூத்த அலுவலர்கள் உட்பட 6 பேர் சஸ்பெண்ட்; போலி ரசீது, லஞ்சம், வேலை வாய்ப்பு மோசடி உள்ளிட்ட புகார்களில் துறை ரீதியான விசாரணை மற்றும் வழக்குப்பதிவு!
சென்னை பெருநகர மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு மற்றும் முறைகேடு புகார்களுக்கு ஆளான 4 மூத்த அலுவலர்கள் உட்பட 6 பேரை மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெறுதல், பொது நிதியை தவறாகப் பயன்படுத்துதல், போலி ரசீது சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கும், வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அலுவலர்கள்
1.டாக்டர் தேவிகலா (மண்டல சுகாதார அலுவலர்): ரூபாய் .9 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வாங்கியதில் போலியான ரசீதுகளை சமர்ப்பித்து முறைகேடு செய்ததாகப் புகார். கடந்த ஜூலை மாதம் 9-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
2.ஆனந்தராவ் (உதவிப் செயற்பொறியாளர், மாதவரம் மண்டலம்): புதிய கட்டிடம் ஒன்றின் உரிமையாளரிடம் ரூபாய் .2.5 லட்சம் லஞ்சம் கேட்ட புகாரில் ஜூலை மாதம் 10-ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
3.சிவ பொற்கொடி (மூத்த பூச்சியியல் வல்லுநர்): மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ஒரு இளைஞரிடம் ரூபாய் .6 லட்சம் பெற்றதாகப் புகார். இவர் மீது குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
4.பாஸ்கர் (சாலைப் பணியாளர், கோடம்பாக்கம்): முறையான அனுமதி பெற்றிருந்த கட்டட உரிமையாளரை, கட்டடத்திற்குப் பூட்டி சீல் வைப்பதாக மிரட்டி ரூபாய் .50,000 லஞ்சம் பெற்றதாகப் புகார்.
5.துர்கா (பில் கிளார்க்) மற்றும் அவரது கணவர் கண்ணன் (NULM பணியாளர்): ராயபுரம் மண்டலத்தில் இயந்திரவியல் துறை ஒப்பந்ததாரரிடம் பில்களை அனுமதிப்பதற்காக லஞ்சம் கேட்டதாகப் புகார்
மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன், ஊழல் தொடர்பாக எந்த அலுவலரும் சமரசம் செய்யப்பட மாட்டார் என்று தெளிவுபடுத்தியுள்ளார். "எந்த அலுவலராவது லஞ்சம் அல்லது பிற சட்டவிரோதமான பணம் கோரினால், அதை நேரடியாக எனது கவனத்திற்கு கொண்டு வரலாம். கடுமையான துறைரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் விஷயத்தில் சமரசம் இல்லை என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் லஞ்சம் மற்றும் முறைகேடு புகார்களில் சிக்கிய 6 அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தவெக அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகும். குறிப்பாக, முறைகேடு செய்தது, ஊழல் மனநிலையை வெளிப்படுத்துகின்றன. இந்த நடவடிக்கை மற்ற அலுவலர்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமையும். இருப்பினும், இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஒரு சில அலுவர்களை பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது; மாநகராட்சியில் ஊழல் வேரறுக்கப்பட வேண்டும்.






கருத்துகள்