முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரபல பின்னணிப் பாடகி ஜமுனா ராணி காலமானார்

தமிழ்த் திரையுலகில் பிரபல பின்னணிப் பாடகி ஜமுனா ராணி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று 30-07-2026) காலமானார். 



அவருக்கு வயது 88. கல்லஹள்ளியில் அவரது இறுதிசடங்குகள் இன்று நடந்தன.

ஆந்திரப்பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜமுனா ராணி. வரதராஜுலு  திரௌபதி தம்பதிக்கு மகளாக 1938-ஆம் ஆண்டு மே மாதம் 17-ஆம் தேதி பிறந்தார். அவர் குடும்பமே இசைக்குடும்பம். அவருடைய தாயார் திரௌபதி வீணை இசைக் கலைஞர். பெண்களை மட்டுமே கொண்ட ஒரு வாத்தியக்குழுவை அக் காலத்திலேயே நடத்தி வந்துள்ளார்.

ஏழு வயதில் பாட வந்த ஜமுனா ராணியின் முதல் பாடல் சித்தூர் நாகய்யாவின் 'தியாகய்யா' என்ற தெலுங்குப் படத்தில் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து தமிழில் மாடர்ன் தியேட்டர்ஸின் 'கல்யாணி' படத்தில் 'சக்ஸஸ் சக்ஸஸ்', 'ஒன் டூ த்ரீ' ஆகிய இரண்டு பாடல்களைப் பாடினார்.

தொடர்ந்து டி. எம். சௌந்தர்ராஜனுடன் இணைந்து 'வளையாபதி' என்ற படத்தில் இடம் பெற்ற 'குலுங்கிடும் பூவில் எல்லாம்' என்ற பாடலை, முதல் டூயட் பாடலாக பாடினார். எஸ்.தட்சிணாமூர்த்தியின் இசையில் இடம் பெற்ற அந்த பாடலை பாடும்போது ஜமுனாராணியின் வயது 13.


அவரை இந்தியா முழுக்க கொண்டு சேர்த்த பாடல் சி.ஆர். சுப்பராமனின் இசையில் 'தேவதாஸ்' படத்தில் சின்ன வயது பார்வதிக்காக இவர் பாடிய 'ஓ தேவதாஸ்' பாடல் தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்கள மொழிகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார். தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் பின்னணிப் பாடகியான கே. ஜமுனா ராணி இசை உலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர்.புகழ்பெற்ற பாடல்கள்:"நான் சிரித்தால் தீபாவளி" (நாயகன்)"ஆசையும் என் நேசமும்" (குலேபகாவலி)"யாரடி நீ மோகினி" (உத்தம புத்திரன்)"பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்" (பாசமலர்)"செந்தமிழ் தேன்மொழியாள்" (மாலையிட்ட மங்கை)"மாமா மாமா மாமா" (குமுதம்)  கலைத்துறையில் இவரது பங்களிப்பைப் பாராட்டி தமிழக அரசு இவருக்கு மதிப்புமிக்க கலைமாமணி விருது (1998) மற்றும் அறிஞர் அண்ணா விருது (2002) வழங்கி கௌரவித்துள்ளது. பாடகி ஜானகியைத் தொடர்ந்து பாடகி ஜமுனா ராணியும் தற்போது  மறைந்துவிட்டார், குயில்கள் மரிக்க மரிக்க. காடு நிசப்தம் 

தேனை இழைபிரித்துப் பனியில் பாதுகாத்த குரல் ஜமுனா ராணி பாடல் கேளாத இன்றைய தலைமுறை இழந்த தலைமுறை

ராணி சம்யுக்தாவில் ‘சித்திரத்தில் பெண் எழுதி’ என்ற சோகப் பாடலில் ஜமுனா ராணியின் குரல் கண்ணீருக்கு உருவம் தந்திருக்கும்

மன்னாதி மன்னனில் ‘காவிரித் தாயே’ பாடலில் அவர் விம்மல்கூட ஒரு சங்கதி பாடியிருக்கும்

கவலை இல்லாத மனிதனில் ‘காட்டில் மரம் உறங்கும் கழனியிலே நெல் உறங்கும்’ பாடலில்

இரவின் சௌந்தர்யம் இழைந்து இழைந்து படிந்திருக்கும்

கறுப்புப் பணத்தில் ‘பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்’ பாடலில்

ஒருகோடிப் பெண்களின் வலியை ஒருகுரல் ஏந்திவரும்

நம்மைவிட்டுப் போய்விட்டது நகலெடுக்க முடியாத குரல்

50-களில் பிறந்து 60-களில் வளர்ந்தவர்கள் பூமியில் பாக்கியவான்கள்

போய் வாருங்கள் என்றும் குரலாய் வாழும் குயிலே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...