தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக தவெக பேச்சாளர் லயோலா மணி நியமனம்..
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவருக்கான நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்னிலையில் லயோலா மணிக்கு நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் சி ஜோசப் விஜய்தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு இணைச் செயலாளரான லயோலா மணி ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, அரசியல் பயணத்தைத் தொடங்கியவர்
தி.மு.க ஆட்சியில் பாடநூல் கழக தலைவராக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டு செயல்பட்டார்.தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் இதற்கான பணி நியமன ஆணையை லயோலா மணியிடம் நேரில் வழங்கினார்.
இந்த நியமனம் மூன்று ஆண்டுகள் காலத்திற்கு வழங்கப்பட்டது.
இதற்கு முன்பு திமுக ஆட்சிக் காலத்தில் இந்தப் பொறுப்பில் திண்டுக்கல் ஐ. லியோனி இருந்து வந்தார்,
இந்த அமைப்பின் தலைவராக லயோலா மணி மேற்கொள்ளவிருக்கும்
பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்களைத் தயாரித்தல், அச்சிடுதல் மற்றும் தங்குதடையின்றி விநியோகம் செய்வதைக் கண்காணிப்பது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, காலணிகள், புத்தகப் பை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பொருட்களை உரிய நேரத்தில் கொள்முதல் செய்து வழங்குவது. ஆகும் அதற்கு மாதம் மதிப்பூதியமாக ரூபாய் 25,000 மற்றும் ஒரு தனி உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் மற்றும் சிற்றூந்து ஓட்டுநர் உள்ளிட்ட வசதிகள் அரசு சார்பாக வழங்கப்படும்.



கருத்துகள்