முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொள்ளாச்சியில் கே.அண்ணாமலை நடத்திய பிரமாண்டம் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாடு,

பொள்ளாச்சியில் கே.அண்ணாமலை தலைமையில் நடத்திய பிரமாண்டம்



'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில், 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாடு, பொள்ளாச்சி வட்டம் ஆச்சிப்பட்டியில் இன்று மாலை, 4:00 மணிக்கு, நடந்தது; அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். மாநாட்டு பந்தல் முகப்பு பகுதி, ஆழியாறு அணை, தென்னை மரங்கள் போன்று படங்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தன.



அரங்குக்குள், 20 ஆயிரம் நபர்கள் வரை அமரும் படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வெளியிலிருந்து பார்க்கும் வகையில், 'எல்.இ.டி.,' திரைகள் அமைக்கப்பட்டன. மாலை, தமிழர் பண்பாடு கலாச்சாரம் கலந்த விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. கே.அண்ணாமலை, 'வீ த லீடர்ஸ்' அமைப்பு துவங்கிய பின்னர் , அவரது தலைமையில் பொள்ளாச்சியில் முதல் மாநாடு நடந்தது. இதனால், மாநிலம் முழுவதுமிருந்து, முன்னணி அமைப்பினர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டன. பொள்ளாச்சியில் நடந்த வீ த லீடர்ஸ் அமைப்பின் மாநாட்டில் போதைப்பழக்கத்திற்கு எதிராக ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





வீ த லீடர்ஸ்' அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் :

முதல்: .ஒவ்வொரு ஜூலை மாதமும் 'ஒயிட் பேண்ட்' மாதம்; போதை பயன்படுத்த மாட்டேன் என்று ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும்

இரண்டு :.பள்ளி, கோவில் அருகே செயல்படும் டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்ற வேண்டும்


மூன்று :-.கள்ளச்சந்தை போதைப்பொருள் விற்பனையை தடுத்து நிறுத்தவேண்டும்   நான்கு:- .மாவட்டம் தோறும் போதை தடுப்புக்குழு உருவாக்க வேண்டும்

ஐந்து:- .புதிய மனமகிழ் மன்ற பார்களுக்கு உரிமம் வழங்கக் கூடாது

ஆறு :-.போதைப்பொருள் ஒழிப்பில் தேசிய முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும்


எனபது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றிய பின்  தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதன் பின் செயலி வெளியீடு நடந்தது,   




  
"பாஜகவின் மீது எனக்கு கோபம் இருந்ததா எனக் கேட்டால், இருந்தது; இறுமாப்புடன் எப்போதும் சொல்வேன் நான் ஒரு தேசியவாதி

எனது மதத்தையும், சாதியையும் வீட்டில் வைத்துவிட்டு வருகிறேன்; எல்லா காலத்திலும் மதத்தை தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை

ஜாதி, மதத்தை வைத்து இத்தனை ஆண்டுகள் அரசியல் செய்து பட்டதுபோதும்; அந்த சாக்கடை அரசியல் நமக்கு வேண்டாம்.". கே. அண்ணாமலை

 வீ த லீடர்ஸ் அமைப்பின் மொபைல்போன் செயலியை அண்ணாமலை வெளியிட்டார். மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் மாநாடு முடிந்த பின் பொறுப்பாக சேர்களை அடுக்கி வைத்து விட்டு கீழே இருந்த குப்பைகளை குப்பை தொட்டியில் போட்ட காட்சிகளும் நிகழ்ந்தது ஜாதி,மதங்களைக் கடந்து ஒரு தமிழனாக ஒரு இந்தியனாக அரசியல் செய்ய கே.அண்ணாமலை அழைப்பு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. "யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இந்த அமைப்பு அரசியல் கட்சியாக மாறும். சரியான எண்ணிக்கையும் சரியான தலைவர்கள் வரும்போது நிச்சயமாக கட்சியாக மாறும். இன்று நமக்கு சேவை பணிகள் நிறைய இருக்கு." - அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்

அண்ணாமலை தெளிவாக தான் ஒரு தேசியவாதியும், ஹிந்துத்துவவாதியும். ஆனால், பாஜக மீது தனக்கு கோபம் இருப்பதாகவும், அதிலிருந்து விலகி இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.


நேரடியாக இன்றைய ஆளும் கட்சியான தவெக முன்னெடுக்கும் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர்களை மையப்படுத்திய அரசியலுக்கு எதிராக, ஓபிசி அரசியலை கையில் எடுத்திருக்கிறார் கே.அண்ணாமலை.

மாயாவதி ஒரு தேர்தலில் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தார். ஆனால், ஓபிசி வாக்குகளை ஒருங்கிணைக்காததால், பின்வந்த காலங்களில் அரசியலில் இருந்தே காணாமல் போனார். இதை உணர்ந்த கே.அண்ணாமலை, அந்த அரசியல் அணுகுமுறையை தற்போது கையில் எடுத்திருக்கிறார்.


அவரது கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றிருந்தாலும், தான் "ஜாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்டவன்" என்பதை உணர்த்தும் விதமாக, எந்தக் கொங்கு சமூகத் தலைவரையும் முன்னிலைப்படுத்தாமல், தன்னுடன் பாஜகவில் பயணித்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை முன்னிறுத்தியுள்ளார். இதன் மூலம், தான் ஜாதிய அரசியல் செய்யவில்லை என்பதை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார்.

2009-ஆம் ஆண்டு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் கட்சி சுமார் 25 லட்சம் வாக்குகளைப் பெற்றது. எனவே தற்போது பொள்ளாச்சியில் நடத்தியது போல, கே. அண்ணாமலை மற்ற எட்டு மண்டலங்களிலும் வெற்றிகரமாக இதுபோன்ற கூட்டங்களை நடத்தினால், நிச்சயமாக 20 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது.


தூய சக்தி என்று ஆட்சிக்கு வந்தாலும், லாட்டரிகளையும் மற்றும் குட்காகளையும் முன்னிறுத்தி தற்போது முதல்வர் சி. ஜோசப் விஜய் மேற்கொண்டு வரும் அரசியல் அணுகுமுறையைத் தவிர்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

கே.அண்ணாமலையும் ஊழலுக்கு அப்பாற்பட்ட நேர்மையான அரசியலையே முன்னிறுத்துகிறார். திமுக மற்றும் அதிமுகவுக்கு எதிரான அலையை முதலில் உருவாக்கியது அவர்தான். ஆனால், அதை பாஜக ஏற்காததால் சந்தர்ப்பம் காரணமாக சி. ஜோசப் விஜய் அறுவடை செய்தார். தற்போது, அந்த இடத்தை மீண்டும் கைப்பற்ற கே.அண்ணாமலை களத்தில் இறங்கியிருக்கிறார்.

2031 ல் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கே அண்ணாமலை சொல்வதன் மூலமாக ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்கிறார். மறுபுறம், உதயநிதியை முன்னிறுத்தி "திராவிடம்" என்ற அடையாளத்தை மையமாக வைத்து திமுக தனது அரசியல் பயணத்தைத் தொடரும்.




திக்கற்ற நிலையில் இன்னும் யார் யாரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதை விட, யாரையெல்லாம் கட்சியில் இணைத்து எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கத்தை பலப்படுத்துவது என்பதை எடப்பாடி கே பழனிசாமியால் சிந்திக்க இயலாது , மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு அதிமுகவுக்கு இல்லை இன்றைக்கும் எம்.ஜி.ஆரின் வாக்கு வங்கி ஆட்சியை அமைப்பதற்குப் போதுமான வலிமையை விஜயை நோக்கி திரும்பியுள்ளது. அதை தவெக நோக்கிப் பயணிப்பதே அவர்களின் சரியான அரசியல் அணுகுமுறையாக இருக்கும்.

எல்லோரும் சுதாரித்துக்கொள்ள வேண்டிய காலமாக தற்போதைய தமிழ்நாடு அரசியல் களம் மாறியுள்ளது. அண்ணாமலை தற்போது பிற்பட்ட 64 ஜாதி சமூகத்தின் கூட்டுத் தலைவராக காலம் தற்போது உறுவாக்குகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...