HR & CE சட்டம் பிரிவு 8(2) 1(a) படி 1.4.1960 ற்கு முன் 60 ஆண்டு காலம் அதை அனுபவிப்பவர்கள் நிபந்தனையின்றி பட்டா பெறலாம்.
தமிழ்நாடு வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிந்து ஆலயங்கள் வெறும் வழிபாட்டுத் ஸ்தலங்கள் மட்டுமல்ல,
அவை தமிழர்களின் கலை, பண்பாடு, வாழ்வியல் மற்றும் கலாச்சாரம் கலந்த பொருளாதாரத்தின் உன்னத அடையாளங்களாகும். இத்தகைய போற்றுதலுக்குரிய திருக்கோவில்களின் வருமானத்தில் இருந்து, ஹிந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகச் செலவுகளுக்காக ஆண்டுதோறும் பன்னிரண்டு சதவீதத்தை நிர்வாகக் கட்டணமாக வசூலிக்கிறது. இந்தத்தொகை, 1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையச் சட்டத்தின் பிரிவு 96-ன் கீழ் உருவாக்கப்பட்டுள்ள 'ஹிந்து சமய மற்றும் அறக்கட்டளைகளின் நிர்வாக நிதி' என்ற கணக்கில் சேர்க்கப்படும். நிதியை ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையரே முழுமையாக நிர்வகிக்கிறார்.
HR & CE சட்டம் வகுத்துள்ள விதிகளின்படி, இந்த நிதியைக் கொண்டு துறையின் அன்றாடச் செலவுகள், அலுவலர்கள் மற்றும் பணி ஊழியர்களின் ஊதியங்கள், இதர சலுகைகள் போன்ற நிர்வாக ரீதியான செலவினங்களை மட்டுமே மேற்கொள்ள முடியும்; வேறு எந்தவொரு காரியத்திற்கும் இதைப் பயன்படுத்த சட்டத்தில் இடமில்லை.
ஆனால், கடந்த காலங்களில் இந்த நிர்வாக நிதி அதன் உண்மையான நோக்கத்தை மீறி, சட்டத்திற்குப் புறம்பான பல்வேறு இதர காரியங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்பட்ட புகார்களும் தொடர்ந்து எதிரொலித்தன. இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு மிக முக்கியமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அண்மையில் வழங்கியது.
டி. ஆர். ரமேஷ் என்பவரால் தொடரப்பட்ட வழக்கை (W.P. (MD) No. 34090 of 2025) விசாரித்த மாண்புமிகு நீதியரசர்கள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் ஆர். பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஹிந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்த சட்டப் பிரிவுகளை மிகத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் விளக்கியுள்ளது.
சட்டப்பிரிவு 96 மற்றும் பிரிவு 92(4)- ஐ சுட்டிக்காட்டியுள்ள உயர் நீதிமன்றம், இந்த நிர்வாக நிதியிலிருந்து எடுக்கப்படும் தொகையானது, அரசுத் தரப்பில் இந்தத் துறைக்காக மேற்கொள்ளப்பட்ட உண்மையான நிர்வாகச் செலவுகளை அரசாங்கத்திற்குத் திரும்பச் செலுத்துவதற்கும், அரசிடமிருந்து பெற்ற கடன்களை அடைப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று திட்டவட்டமாகக் கட்டளையிட்டுள்ளது.
இந்த இரண்டு காரணங்களைத் தவிர, ஆணையருக்குத் தனது விருப்பப்படி இந்த நிதியை வேறு எந்த நோக்கத்திற்காகவும் செலவழிக்க எவ்வித அதிகாரமும், சட்டப்பூர்வமான உரிமையும் கிடையாது என்று நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பு ஆன்மீகப் பெருமக்களிடையேயும், கோவில் சொத்துக்கள் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்புபவர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தத் தீர்ப்பின் பின்னணியில், தமிழ்நாடு அரசு உடனடியாகச் செயல்பட்டு, கடந்த காலங்களில் சட்ட விதிகளுக்குப் புறம்பாக இந்த நிர்வாக நிதியிலிருந்து திசைதிருப்பப்பட்டு செலவழிக்கப்பட்ட ஒட்டுமொத்தப் தொகையையும் கண்டறிந்து, அதனை மீண்டும் அதே நிர்வாக நிதி கணக்கிலேயே முழுமையாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது. அதுமட்டுமன்றி, தற்போதைய சூழலில் ஹிந்து சமய அறநிலையத்துறை தனது உண்மையான நிர்வாகச் செலவுகளைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமான தொகையைக் கோவில்களிடம் இருந்து கட்டணமாகப் பிழிந்தெடுப்பது அநீதியானது என்ற விவாதமும் எழுந்துள்ளது.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர்,மற்றும் சம்பந்தப்பட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் உடனடியாகத் தலையிட்டு, தற்போது கோவில்களின் ஆண்டு வருமானத்திலிருந்து வசூலிக்கப்படும் பன்னிரண்டு சதவீத நிர்வாகக் கட்டணத்தை, வெறும் நான்கு சதவீதமாகக் குறைத்து நடப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்தப் பக்தர்களின் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இறைவனின் சொத்து இறைவனின் பணிகளுக்கும், ஆலயப் புனரமைப்புக்கும் மட்டுமே பயன்பட வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் நிலைநாட்டியுள்ளது. கோவில் நந்தவனங்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பு என்பது கோவில் நிதியை முறைப்படுத்துதல் சார்பாக கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிதியை வேறு எந்தவொரு பொதுப் பணிகளுக்கும் அல்லது அரசு திட்டங்களுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. நந்தவனப் பராமரிப்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் ஓய்வெடுக்கும் வகையிலும், இறைவனுக்குத் தேவையான மலர்கள் கிடைக்கும் வகையிலும் நந்தவனங்களை முறையாகப் பராமரிக்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளைகளில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டு ஏற்கனவே இரண்டு தீர்ப்பு உள்ள நிலையில் தற்போது பல வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.நந்தவனம் மற்றும் கோவில் நிலங்கள் தொடர்பான கூடுதல் வழிகாட்டுதல்கள் கோவில் சொத்துக்கள் மற்றும் கிராம நத்தம் நிலங்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது பல்வேறு நீதிமன்றங்களின் நிலைப்பாடாக உள்ளது.மதுரையை சேர்ந்த ஜெய வெங்கடேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவில்களில் நந்தவனம் அமைக்கப் பட்டு அதில் செடிகள், பூந்தோட்டம் ஆகியவை வைக்கப் பட்டு இருக்கும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்கு ஓய்வு எடுப்பார்கள்.
ஆனால் ஒரு சில பிரசித்தி பெற்ற கோவில்களில் மட்டுமே நந்தவனம் முறையாக பராமரிக்கப் பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு உள்ளது. பூந்தோட்டங்களில் இருந்து பறிக்கப் படும் பூக்கள் வைத்து கோவிலில் உள்ள சாமிகளுக்கு தரிசனம் செய்யப் படும்.கோவில்களில் உள்ள மரங்கள், குளங்கள் மற்றும் நந்தவனத்தை பாதுகாக்க ஊழியர்களை நியமித்து முறையாக பராமரித்து பக்தர்களுக்கு உபயோகிக்கும் வகையில் வழி வகை செய்ய வேண்டும். நந்தவனங்களை பாதுகாத்தால் கோவில்களில் அதிகப் படியான பக்தர்கள் வந்து செல்வர்.கோவில்களில் உள்ள அரிய வகை மரங்கள் பாதுகாக்கப்படும். எனவே, தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் இருக்கும் நந்தவனங்களை பராமரித்து, முறையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து, பூச்செடிகள் மற்றும் மரங்களை பாதுகாத்து பராமரிப்பதற்கு பாதுகாவலர்களை நியமிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப் பட்டு உள்ளது. தற்போது அறநிலையத்துறை அமைச்சர் தொகுதி சார்ந்த திருப்பராய்துறை நந்தவனம், ஆக்கிமிப்பை நீதிமன்றம் உத்தரவு இருந்தும் அதன் குத்தகைதரரரான ஸ்ரீ ராமகிருஷ்ண தபோபனம் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும், கரூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நான்கு கோயில்களுக்குச் சொந்தமான 3,085 ஏக்கர் நிலங்கள்,சுமார் ரூபாய் 25,000 கோடி மதிப்புடையவை எனக்கூறப்படும் நிலங்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை மூலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்துள்ளன.இது கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தில் உண்மை நிலையை, சட்டரீதியாக பலர் புரிந்துகொள்வது அவசியம்.
அனைத்து நிலங்களும் "திருக்கோவில் சொத்துகள்" என்றல்ல; அதில் சம்பளம் அம்பலம் உம்பலம் என பல முறை உண்டு பெரும்பாலானவைதவறான புரிதலில் தவறான விமர்சனம்.
ஆலயங்களில் பணியாற்றுபவர்களுக்கு பேரரசராலும் இதர ஜமீன்களாலும், சில தர்மகர்த்தாக்களாலும், அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு வருவதற்கு முன்பு பல தனியார் மடாலயம் மற்றும் தேவஸ்தானங்களாலம் மான்யமாக கொடு்கப்பட்ட நிலங்கள் இனாம் மற்றும் இருவார தர்மாசன நிலங்கள் அல்லது பூமிகள்.அவைகள் ஆலயத்திற்கு அறநிலையத்துறை வாங்கியதல்ல, ஆலயத்தில் உள்ள கடவுள் வழிபாடு ஆறுகாலப் பூஜைக்கு தனியார் வழங்கிய நிலங்களை வேற்று மதத்தை சார்ந்த யாரும் வாங்கிக் கொடுத்ததல்ல. அந்த நிலங்களை ஒழுங்குபடுத்த முன்னாள் காங்கிரஸ் முதல்வர் கு.காமராஜர் அரவக்
குறிச்சி.MLA,.சதாசிவம்,காங்கயம்.MLA K.G.பழனிசாமிக் கவுண்டர் ஆகியோர் கொண்ட கமிட்டியை அமைத்தார்.அந்தக் கமிட்டி பரிந்துரையின் படி “ தமிழ்நாடு இனாம் கமிஷன் போர்டு மூலம் ரத்து மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல் சட்டம் 1963 (Act 30/1963) ஐ அமல்படுத்தியது 29.01.1964 ல் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று 5.2.1964 அன்று அரசாணையாக வெளி யிடப்பட்டது.
மேற்படி சட்டம் பிரிவு 8(2) 1(a) படி 1.4.1960 ற்கு முன் 60 ஆண்டு காலம் அதை குத்தகை முறையில் அனுபவிப்பவர்கள் நிபந்தனையின்றி வருவாய் வரி செலுத்த பட்டா பெறலாம். 1.4.1960 க்கு முன் 12 ஆண்டு காலம் அனுபவித்திருந்தால் நிபந்தனையுடன் பட்டா பெறலாம்.
அதற்காக மண்டல வாரியாக தமிழ்நாடு அரசு “Special Settlement Thasildar” எனும் ASO “ நியமித்து முறையான விசாரணை நடத்தி ரயத்துவாரி பட்டாக்களை வழங்கியது. பட்டா பெற்ற விவசாயிகள் பெரும் பொருட்செலவில் அதை மராமரத்து செய்து 50 ஆண்டுகளுக்கு மேலாக சர்வில்லங்க சுத்தியாய் அனுபவித்து வருகிறார்கள்.
அவைகள் கோவில் உபயம் மற்றும் மானியம் இனாம் நிலங்கள் அல்ல. முந்தைய தி.மு.க.அரசு கோவில் நிலத்தோடு சேர்த்து பட்டா பெற்ற முந்தைய இனாம் நிலங்களையும்”0”செய்து பத்திரப் பதிவை நிறுத்தியிருந்தது. அதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள்.அதை நீக்கி விவசாயிகளின் உரிமையை காப்பாற்றியுள்ளது. அதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த அரசாணையால் கோயமுத்தூர் ,திருப்பூர்,ஈரோடு மாவட்டங்களில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளை காப்பாற்ற வேண்டுமென பல கோரிக்கை
இனாம் வழக்குகளை 50 ஆண்டுகளாக நடத்தி வரும் நபர்கள் கருத்து
இருந்த போதிலும் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் இதை அனுமதிக்கிறதா என்பதே எழுவினா?








கருத்துகள்