தேசத்தின் உயிர்நாடி விவசாயம் அடுத்தபடியாக நெசவு மானம் காக்கும் மாண்பு கொண்ட கைத்தறித் தொழிலையும், நெசவாளர் பெருமக்களின் உழைப்பையும்
போற்றும் வகையில். 1905 ஆம் ஆண்டு துவங்கிய சுதேசி இயக்கத்தின் தொடர்ச்சியாக, 2015 ஆம் ஆண்டு முதல் தேசிய கைத்தறி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தற்போது 12 ஆவது தேசிய கைத்தறி தினம் இன்று "தேய்ந்த மிதிக்கு தெரிந்திருக்கும் நெய்தவன் சேய்கள் வளர்ந்த செழிப்பு"...... இதன் .விளக்கம்:
"தேய்ந்த மிதிக்கு தெரிந்திருக்கும்" – நெசவு செய்யும்போது தறியின் மிதிக்கட்டையை அதாவது பெடலை கால்களால் மாறி மாறி மிதித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு நெசவாளர் தன் வாழ்நாள் முழுவதும் அந்தத் தறியிலேயே அமர்ந்து கால்களால் மிதித்து மிதித்து, அந்த மரக்கட்டையே தேய்ந்து போயிருக்கும். காஞ்சிபுரம் சென்றால் கால் ஆட்டிக் கொண்டு சாப்பிடலாம் என்பதன் அர்த்தமும் இதுதான்,
"நெய்தவன் சேய்கள் வளர்ந்த செழிப்பு" – அந்த மிதிக்கட்டை சும்மா தேயவில்லை; தன் பிள்ளைகளை அல்லது சேய்களை நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும், அவர்கள் பசி இல்லாமல், செழிப்பாக வளர வேண்டும் என்பதற்காக அந்தத் தந்தை சிந்திய வியர்வையாலும் உழைப்பாலும் தேய்ந்தது.
நெசவாளர்களின் கடின உழைப்பையும், ஒரு தந்தை தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத் தன் உடலையும் தறியையும் தேய்த்துக் கொள்ளும் தியாகத்தையும் இந்த இரண்டு வரிகள் உணர்வு கலந்து சொல்கிறது அதேபோல் திருவள்ளுவர் "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு." என்கிறார். இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையிலும், நாட்டின் பாரம்பரியமான கைத்தறித் தொழிலையும், நெசவாளர்களின் உழைப்பையும் கௌரவிக்கும் நோக்கிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. முதன்முதலில் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. சுதேசி தொடர்பு: 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவு கூரும் வகையில் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. பொருளாதாரம்: நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் லட்சக்கணக்கான நெசவாளர்களுக்கு கைத்தறி துறை வாழ்வாதாரம் அளிக்கிறது. பாரம்பரியமிக்க கைத்தறித் தயாரிப்புகளைப் பாதுகாக்க உதவுகிறது."Vocal for Local" எனும் உள்நாட்டுப் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்) மற்றும் "Make in India" திட்டங்களை ஊக்குவிக்கிறது. நெசவாளர்களின் திறமையை உலகிற்கு வெளிப்படுத்தவும், அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும் வழிவகுக்கிறது.1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் நாள் கொல்கத்தாவில் முறையான 'சுதேசி இயக்கம்' தொடங்கப்பட்டதில் வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணித்து, இந்தியப் உள்நாட்டுத் தயாரிப்புகளை, குறிப்பாக கைத்தறி ஆடைகளை ஆதரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில், இந்திய அரசு 2015 இல் ஆகஸ்ட் 7 ஐ தேசிய கைத்தறி தினமாக அறிவித்தது, முதலாவது தேசிய கைத்தறி தினத்தை 2015, ஆகஸ்ட்மாதம் 7 ஆம் தேதியில் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் தொடங்கி வைத்தார். நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபடும் லட்சக்கணக்கான நெசவாளர்களின் பங்களிப்பைப் பாராட்டுதல். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, 'உள்நாட்டுத் தயாரிப்புகளுக்குக் குரல் கொடுப்போம்' (Vocal for Local) என்ற கொள்கையை முன்னெடுத்தல். இந்தியாவின் 5000 ஆண்டுகள் பழமையான கலாச்சார நெசவுப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்தல். என்பனவாகும் நமக்கு இன்று வாசிக்கக் கிடைத்த முன்னால் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் எழுதிய கடைசித் தறியில் கண்டாங்கி சேலை" நூல் என்பது தமிழ்நாடு புகழ்பெற்ற கைத்தறி பாரம்பரியமான செட்டிநாட்டு மற்றும் சின்னாளப்பட்டி கண்டாங்கி சேலைகளின் கதையையும், நெசவாளர்களின் வாழ்வியலையும் பேசும் தலைப்பாகும். மேலும் இது நேர்மையான முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உ. சகாயம் எழுதிய நூல் காரைக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாகத் தயாரிக்கப்படும் கண்டாங்கி சேலைகள், அதன் தடித்த பருத்தி இழை, தனித்துவமான கட்டங்கள் (Checks) மற்றும் துடிப்பான வண்ணக் கரைகளுக்கு பெயர் பெற்றவை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, செட்டிநாடு பகுதிகளில் இச்சேலைகள் பாரம்பரியமாக கைத்தறியில் நெய்யப்படுகின்றன.சிறப்புப் பெயர்க் காரணம்: சேலையின் உடல் முழுவதும் காணப்படும் பெரிய கட்டங்கள் அல்லது கோடுகளே 'கண்டாங்கி' என்ற பெயரைப் பெறக் காரணமாக அமைந்தன.புவிசார் குறியீடு (GI Tag): இக்கலை மரபு அழியாமல் காக்க காரைக்குடி தறி கூட்டுறவுச் சங்கம் எடுத்த முயற்சியால் கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் 12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில், HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சி, "வெற்றித் தறி" விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தைத் தொடங்கி வைத்து, சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர் விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார். சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி பகுதியில் வாழும் நெசவாளர்களால் இது பிரத்யேகமாக நெய்யப்படுகிறது. இதற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு (GI Tag) வழங்கியுள்ளது. தடிமனான பருத்தி நூல் (Coarse Cotton), பெரிய கட்டங்கள் (Checks) மற்றும் பிரகாசமான வண்ணக் கரைகளைக் (Borders) கொண்டு இது நெய்யப்படுகிறது போதிய வருமானம் இல்லாததால் தற்கால நெசவாளர்கள் வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர். "கடைசித் தறி" என்ற வார்த்தை, இந்த பாரம்பரிய கலை மறைந்துவிடக் கூடாது என்ற ஆதங்கத்தையும், அதை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது.









கருத்துகள்