தமிழ்நாட்டில் ஏ.எஸ்.பி. நிலையில் உள்ள 15 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து உத்தரவு,
தமிழ்நாட்டில் ஏ.எஸ்.பி. நிலையில் உள்ள 15 ஐ.பி.எஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் க. மணிவாசன ஆகஸ்ட் 31, 2026 இனறு உத்தரவு. காவல்துறை நிர்வாகக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முக்கிய இடமாற்றத்தின் மூலம் ஏ.எஸ்.பி அந்தஸ்தில் உள்ள பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களின் முக்கிய உள்கோட்டங்களுக்கும் மற்றும் மாநகரக் காவல் சரகங்களுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி ஊரக ஏ.எஸ்.பியாக அஞ்ஜித் நாயர், பட்டுக்கோட்டை ஏ.எஸ்.பியாக அன்கிதா நியமனம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஏ.எஸ்.பி-யாக இருந்த ஆஷிஷ் புனியா, மதுரை மாநகர் அண்ணா நகர் சரக ஏ.எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தின் ஊமச்சிகுளம் உள்கோட்டத்திற்கு புதிய ஏ.எஸ்.பி-யாக தனு சிங் பொறுப்பேற்க உள்ளார்.
நேகா IPS - ராமநாதபுரம் உதவி காவல் கண்காணிப்பாளர், அஷ்வினி IPS - திருச்செங்கோடு துணைப்பிரிவு, ஆஷிஷ் பூனியா IPS - மதுரை அண்ணா நகர் பகுதி (இவர் இதற்கு முன்பு காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்தார் )ராகுல் கோபால் IPS - திருவண்ணாமலை
நீல் சர்மா IPS - கோவில்பட்டி துணைப்பிரிவு, மஞ்சிபா IPS - திண்டுக்கல் தாணு சிங் IPS - மதுரை ஊமச்சிகுளம் துணைப்பிரிவு, பிஸ்வஜித் பாண்டா IPS - திருநெல்வேலி தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறப் பகுதிகள் உட்பட மொத்தம் 13 மாவட்ட மற்றும் மாநகர காவல் எல்லைகளில் இந்த அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.



கருத்துகள்