மேற்கு வங்காள மாநிலம் பிர்பூம் மாவட்டம் தாராபீத் நகரில் 17 ஆகஸ்ட் 2026 அன்று அதிகாலை ஒரு தனியார் ஹோட்டலில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டதில் 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்
மற்றும் பலர் படுகாயமடைந்துள்ளனர். தாராபீத் காளி கோயில் அருகே உள்ள நான்கு மாடி ஹோட்டலின் தரைத்தளத்தில் அதிகாலை 4:30 முதல் 5:00 மணியளவில் திடீரென தீப் பிடித்தது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதிகாலை நேரத்தில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்ததால், நச்சுப் புகை வேகமாக பரவி மூச்சுத்திணறல் ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களாவர்.
தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து ஏணிகள் மூலம் கட்டிடத்தில் சிக்கியிருந்த 22 பேரை பத்திரமாக மீட்டனர் காயமடைந்தவர்கள் உடனடியாக ராம்பூர்ஹத் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹோட்டல் நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்து, முறையான தீயணைப்பு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேற்குவங்க மாநிலம் பிர்பூமில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்
மேற்குவங்காள மாநிலம் பிர்பூமில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் . 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது;
"மேற்குவங்க மாநிலம் பிர்பூமில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் .2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் .50 ஆயிரமும் வழங்கப்படும்."





கருத்துகள்