நேபாளத்தின் தேசிய சுற்றுலா வாரியம் மற்றும் காவல்துறையின் தகவல்களின்படி,
இந்தப் பேரிடரில் பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆன்மீகப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியர்கள்: 160 முதல் 280-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் (கும்பகோணம், சென்னை மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட) தொடர்பின்றி கண்டறிய முடியாத நிலையில் தவிக்கின்றனர்.
அமெரிக்கா (65+ பேர்), சீனா (கியிரோங் பகுதி), உக்ரைன் (53 பேர்), மலேசியா (51 பேர்), ஆஸ்திரேலியா (35 பேர்), பிரிட்டன் (33 பேர்), கனடா (25 பேர்) மற்றும் ரஷியா, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். தொலைத்தொடர்புகள்
துண்டிக்கப்பட்டதாலும், சாலைகள் சேதமடைந்ததாலும் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ பட்டியல்கள் தொடர்ந்து சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
புது தில்லியில் தமிழ்நாடு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு ஆகியோர், தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி வெங்கட்நாராயணா, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரி ஜெயா IAS மற்றும் அயலகத் தமிழர் நல ஆணையர் சதீஷ் IAS ஆகியோருடன் இணைந்து, வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி IAS சை சந்தித்து நேபாளத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். நேபாளத்திற்குச் சென்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கும் திருப்பி அழைத்து வருவதற்கும் இந்திய அரசுடன் இணைந்து தேவையான உதவிகளை ஒருங்கிணைப்பது குறித்தும் இந்தச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக உயர்வான நிலையில் மாயமான 1,500 பேரைத் தேடும் பணி தீவிரம் ,
வள்ளுவர் வாக்கில் "பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சாலமிகுத்துப் பெயின்" இது தற்போது காலநிலை மாற்றம் தரும் தாக்கம்.
மனித உயிர்களும் உடைமைகளுமான விலை. கார்பொரேட் தயவா என்பது நமது கருத்து, தமிழ்நாடு கும்பகோணத்திலிருந்து நேபாளம் சென்ற ஆன்மிகக் குழுவில் வெள்ளத்தில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட 21 பேர் மட்டுமே பத்திரமாக புது தில்லி வந்து சேர்ந்தனர்.
தமிழ்நாட்டிலிருந்து சென்ற அமைச்சர்கள் குழுவினர் 21 பேரையும் சந்தித்து சென்னைக்கு அனுப்பி வைக்கின்றனர். புது தில்லியிலிருந்து இன்று இரவு 8 மணிக்கு டில்லி விமான நிலையத்திலிருந்து சென்னை புறப்பட்டார்கள்.
இவர்கள் இன்று காலை நேபாளத்திலிருந்து விமானம் மூலம் புது தில்லி வந்து அங்கு பத்திரமாக தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அப்போது அவர்களை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தமிழ்நாடு பாஜகவின் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் வரவேற்றனர் இவர்கள் அனைவரும் 8 மணிக்குப் புறப்பட்டு சென்னை வந்தடைவார்கள் எனலாம்,
நேபாளத்திலிருந்து இந்தியா திரும்பியவர்களின் விவரங்கள் கடவுச்சீட்டில் கண்டுள்ள படி பெயர்கள் :-
1.சிவரஞ்சனி முத்துநாதன்,
2.கற்பகம் ராஜமோகன். மாறன் கோவிந்தசாமி,
4 சாந்தி மாறன்,
5.முத்துக்குமரேசன் ராமலிங்கம் நவு கபீர்தாஸ்,
7.விஜயபுவனேஸ்வரி விஸ்வநாதன்,
8.மைதிலி முத்துக்குமரேசன்,
9.தியாகராஜன் ரத்தினம்,
10.கிருபாகரி பாலசுப்ரமணியம்,
11.வள்ளிநாயகி சிவகுமார்,
12.சத்ய ஜெயராமன்,
13.திருமாவளவன் கோவிந்தராசு,
14.கனகசபை நடேசபிள்ளை,
15.ராதை கனகசபை,
16.ரத்தினகுமார் குஞ்சிதபாதம்,
17.பூங்குழலி பொன்னம்பலம்,
18.பழனியப்பன் மாணிக்கப்பெருமாள்,
19.கலைமதி பழனியப்பன்,
20.ரகுநாதன் முனிராஜ்,
21.கனகசபை நடேச பிள்ளை.
மேலும் இந்தியர்கள் 288 பேரைக் காணவில்லை என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் கூறியுள்ளது.

























































கருத்துகள்