தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முழுமுறைப்படுத்துதல் சட்டம் 2018 விதி 10-ன் படியும், சட்டம் 23, விதி எண் 11ன் படியும் மழலையர் பள்ளியின் அனுமதி மற்றும் அங்கீகாரம் முக்கியம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முழுமுறைப்படுத்துதல் சட்டம் 2018 விதி 10-ன் படியும், சட்டம் 23, விதி எண் 11ன் படியும் மழலையர் பள்ளியின் அனுமதி மற்றும் அங்கீகாரத்தை
கடந்த 3-3-2025 முதல் திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டது. சென்னை தனியார் மழலையர் பள்ளி விவகாரத்தில் வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தமிழகத்தில் பல மழலையர் பள்ளிகள், அனுமதியின்றி நடந்து வருகின்றன; அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும்' எனக் கோரப்பட்டது. அதன்படி வகுக்கப்பட்ட இளம் மழலையர் பள்ளி விதிகள் :-
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான பிளே ஸ்கூல் துவங்குவதற்கான புதிய விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதுகுறித்த அரசு அறிவிப்பில், “இளம் மழலையர் பள்ளிகள் எனப்படும் பிளேஸ்கூல் விதி தொகுப்பு-2015 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் https://share.google/DZI1Fl3aDxkz43x9R அமலுக்கு வந்ததில் இருந்து 6 மாதத்துக்குள் இந்த பள்ளிகளுக்கான அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். விதிகளில் கூறப்பட்டுள்ள தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றால், அந்த பள்ளிகளை மூட உத்தரவிடப்படும்.
அங்கீகாரம் அளிப்பது மற்றும் புதுப்பித்தலுக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி தான் பொறுப்பு அதிகாரி. இந்த அங்கீகாரம் 3 ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும். அதன் பின்னர் மீண்டும் புதுப்பிக்க வேண்டும். விதிகளுக்கு முரணாக நடந்து கொள்ளும் பள்ளிகளின் அங்கீகாரத்தை திரும்பப்பெற அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.
இந்த பள்ளி கட்டிடங்கள் சொந்த கட்டிடமாகவோ, 5 ஆண்டுகளுக்கு குறையாமல் குத்தகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடமாகவோ இருக்க வேண்டும். அவை கான்கிரீட் கட்டிடங்களாகவும், சுற்றுச்சுவருடன் இருக்க வேண்டும். வகுப்பறை குழந்தைகளின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு தரைதளத்தில் மட்டும் இருக்க வேண்டும்.
வகுப்பறை கதவுகள், ஜன்னல்கள் எளிதில் தீப்பிடிக்காத பொருட்களாலும், வெளிப்பக்கம் திறப்பதாகவும் இருக்க வேண்டும். வகுப்பறைகளுக்கு 2 நுழைவுவாயில்கள் இருக்க வேண்டும்.
கழிவறை, குடிநீர், விளையாட்டு மைதானம் ஆகியவை சரியான முறையில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். குப்பைத்தொட்டி, அதிக ஒலி எழுப்பும் போக்குவரத்து சாலைகள், தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றின் அருகே பள்ளிகள் இருக்கக்கூடாது. பள்ளி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் இருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் அதிலும் பெண் ஆசிரியர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட வேண்டும். ஆசிரியை பிளஸ் 2 படித்து, டி.டி.எட், டி.எட், ஹோன் சயின்ஸ் ஆகியவற்றுக்கான பட்டயப்படிப்பு படித்து இருக்க வேண்டும் அல்லது ஹோம் சயின்சில் பட்டம், பி.எட், குழந்தைகள் படிப்புக்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 ஆம் தேதியுடன் 1 வயது 6 மாதத்தினை பூர்த்தி செய்த குழந்தைகளை மட்டுமே சேர்க்க வேண்டும். பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் வயது 1 வயது 6 மாதம் முதல் 5 வயது 6 மாதம் வரை இருக்கலாம். ஒரு வகுப்புக்கு 15 குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். குழந்தைகள் அனுமதிக்கான நுழைவுத்தேர்வு எழுத்து வடிவிலோ, வாய்வழியாகவோ இருக்கக்கூடாது
பள்ளி நடக்கும் ஒவ்வொரு பகுதி நேரமும் 3 மணி நேரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு பகுதி நேரத்தில் படிக்கும் குழந்தைகள் அடுத்த பகுதி நேரத்தில் சேர்க்கக்கூடாது. காலை 9.30 மணிக்கு முன்பாக பள்ளிகளை திறக்கக்கூடாது. மாலை 4.30 மணியுடன் நிறைவு செய்துவிட வேண்டும்.
பெற்றோர்களின் ஒப்புதலின்படி, பள்ளியில் குழந்தைகளுக்கு உணவு, சிற்றுண்டிகள் வழங்கப்பட வேண்டும். முதலுதவிப் பெட்டி உள்ளிட்ட மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். குழந்தைகள் தண்டிக்கப்பட்டால், அந்தப் பள்ளி மீது குற்ற நடவடிக்கையும் எடுக்கப்படும். பள்ளி, பேரூந்துகள், வேன் மற்றும் ஆட்டோக்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். வாகனங்களின் பராமரிப்புகளை அடிக்கடி பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். ஓட்டுநருடன் ஒரு உதவியாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மற்ற மாவடடங்களில் இந்த உத்தரவு அமல்படுத்தும் முன் சிவகங்கை மாவட்டத்தில் துவங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் ஆனால் இது மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டிய நிலையில் தற்போது சிவகங்கை பாவட்டத்தில் துவக்கம். ஆகவே அனுமதி பெறாமல் விதிகளை மீறி செயல்படும் கீழ்காணும் இளம் மழலையர் பள்ளிகள் தனது பள்ளி செயல்பாடுகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி, தொடர்ந்து பள்ளியை நடத்தக்கூடாது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 18(4) மற்றும் 18(5)-ன்படி அனுமதி பெறாமல் தொடர்ந்து பள்ளியினை நடத்துவது குற்றவியல் சட்ட விதி மீறல் ஆகும். தொடர்ந்து பள்ளி செயல்படுவது கண்டறியப்பட்டால் பள்ளி நிர்வாகத்தின் மீது சட்டப்படி கடுமையான குற்றவியல் நடவடிகக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஸ்கூபி கிட்ஸ் பள்ளி, காரைக்குடி, கற்பிப்போம் மழலையர் பள்ளி, காரைக்குடி, காரைக்குடி கிட்ஸ் ஸ்கூல், பணங்குடி, காரைக்குடி, வி.டி. கிண்டர்கார்டன், காரைக்குடி, எஸ்.கே.ஒய் கிட்ஸ் பள்ளி, திருப்பத்தூர், சாஸ்த்தா கிட்ஸ் பள்ளி, காரைக்குடி, யூகே கிட்ஸ் இன்டர்நேசனல் ஸ்கூல், காரைக்குடி, கிட்ஸ் ஸ்கூல், காரைக்குடி, ஜீனியஸ் கிட்ஸ் ஸ்கூல், காரைக்குடி, இன்டல் கிட்ஸ் ஸ்கூல், காரைக்குடி, சாமி மீனாள் கிட்ஸ் ஸ்கூல், காரைக்குடி, கேரியன்ஸ் ப்ளே ஸ்கூல், சிங்கம்புணரி, கிரீன் பார்க் ப்ளே ஸ்கூல், கண்டனூர், சிசு வித்யாலாயா பள்ளி, காரைக்குடி, ஹேப்பி கிட்ஸ் ப்ளே ஸ்கூல், காரைக்குடி மற்றும் குட்வில் ப்ளே ஸ்கூல், மானாமதுரை. ஆகியவை இதில் அடங்கும்
எனவே, மேற்கண்ட அனுமதியின்றி செயல்படும் 16 பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மேற்கண்ட பள்ளிகளில் சேர்க்க வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் .ப.ஆகாஷ், அறிவித்துள்ள நிலையில் இது குறித்து வந்த தமிழ்நாடு உத்தரவுகளைக் காணலாம். eb2f4c8f-fe85-4f06-b7eb-07682e30a5ef.pdf blob:https://fcraonline.gov.in/eb2f4c8f-fe85-4f06-b7eb-07682e30a5ef இந்த அரசாணையை வைத்துத் தான் தெரிவித்துள்ளார். மேலும் நீதிமன்றம் வழங்கிய உத்தரவும், இனி மாநிலம் முழுவதும் இந்த நடவடிக்கையை மற்ற மாவட்ட ஆட்சியர்கள் தரப்பிலும் துவங்க வேண்டிய நிலை வரலாம்,














கருத்துகள்