முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எஸ்ஆர்எம் அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் உரை

சென்னை எஸ்ஆர்எம் அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் போன்றவை எதிர்காலத்தை வடிவமைக்கும்: குடியரசு துணைத்தலைவர்

வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் இளைஞர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு: குடியரசு துணைத்தலைவர்

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், சென்னைக்கு அருகிலுள்ள செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் இன்று (16.08.2026) கலந்துகொண்டார். அப்போது, ​​'தேசமே முதன்மையானது - தேசமே முக்கியமானது' என்ற கொள்கையின் அடிப்படையில், தங்கள் அறிவு, திறன்கள், புதுமைச் சிந்தனைகள் ஆகியவற்றைத் நாட்டைக் கட்டமைக்கப் பயன்படுத்துமாறு பட்டம் பெறும் மாணவர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

மாணவர்களிடையே உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், பட்டமளிப்பு விழா என்பது வெறும் பட்டங்களைப் பெறும் நிகழ்வு மட்டுமல்ல என்றார். இது பல ஆண்டுகால விடாமுயற்சி, ஒழுக்கம், கற்றல் ஆகியவற்றைக் கொண்டாடுவதோடு, பொறுப்புணர்வையும், சேவையுடன் கூடிய வாழ்நாள் பயணத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

 செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள், குறைக்கடத்தி ஆராய்ச்சி, ரோபோட்டிக்ஸ், உயிரித் தொழில்நுட்பம், நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் செலுத்தி வரும் கவனத்தை அவர் சுட்டிக்காட்டினார். இத்துறைகள் எதிர்காலப் பொருளாதாரங்களையும் சமூகங்களையும் வடிவமைக்கும் என்றும் அவர் கூறினார்.

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக் கூடிய, தொழில்துறையை வலுப்படுத்தக் கூடிய, நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கக் கூடிய, நடைமுறைத் தீர்வுகளாக ஆராய்ச்சியை மாற்றுவதில் எஸ்ஆர்எம் அறிவியல், தொழில்நுட்ப நிறுவனம் செலுத்தும் முக்கியத்துவத்தை குடியரசு துணைத்தலைவர் பாராட்டினார். சமூகம் பயன்பெறும் போதுதான் ஆராய்ச்சிகள் அதன் உயர்ந்த நோக்கத்தை அடைகிறது என்று அவர் கூறினார்.

சரியான முடிவுகளைத் தரும்போதும், சமூகத்தில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தும்போதும், மக்களுக்கான நடைமுறைப் பலன்களாக மாறும்போதும் ஆராய்ச்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கதாக அமைகிறது என்று குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார்.

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தில், இப்போது பட்டம் பெறும் மாணவர்கள் ஒரு முக்கிய கட்டத்தில் அடியெடுத்து வைப்பதாக திரு சி பி ராதாகிருஷ்ணன் கூறினார். வளர்ச்சியடைந்த, புதுமையான, அனைவரையும் உள்ளடக்கிய, தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வைக்கும், தேசத்தைக் கட்டமைப்பதிலும் பங்களிக்குமாறு ஒவ்வொரு இந்திய இளைஞருக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

கொவிட்-19 பெருந்தொற்றை இந்தியா சமாளித்த விதத்தை நினைவு கூர்ந்த குடியரசு துணைத்தலைவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்கியதாகக் கூறினார். மனிதாபிமான அடிப்படையிலான இந்த உதவியை வணிகமயமாக்க இந்தியா முயற்சிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் தடுப்பூசி உதவிக்கு நன்றி தெரிவித்த கென்ய நாடாளுமன்றத் தலைவருடனான உரையாடலை நினைவு கூர்ந்த அவர், பல மேற்கத்திய நாடுகள் ஏழை நாடுகளுக்கு இது போன்ற ஆதரவை வழங்கவில்லை என்று குறிப்பிட்டார். இந்தியாவின் முயற்சிகள் மனிதகுலத்தைப் பாதுகாக்க உதவியதாகக் கூறிய அவர், அமைதி, வளர்ச்சி, மனிதகுலத்தின் நலனுக்காக இந்தியா உறுதியுடன் நிற்கிறது என்பதை மீண்டும் எடுத்துரைத்தார்.

நாடு முழுவதும் மருத்துவ வசதிகளும் மருத்துவக் கல்வியும் மக்களைச் சென்றடையும் வகையில், எய்ம்ஸ் நிறுவனங்கள் நாடு முழுவதும் இருக்க வேண்டும் என்று பிரதமர் தன்னிடம் கூறியதாகக் குடியரசு துணைத்தலைவர் தெரிவித்தார்.

2014-ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் உயர்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள விரிவாக்கத்தை அவர் சுட்டிக்காட்டினார். இக்காலகட்டத்தில் 16 ஐஐஐடி-கள், 8 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 8 ஐஐஎம்-கள், 7 ஐஐடி-கள், 2 ஐஐஎஸ்இஆர்-கள், ஒரு என்ஐடி, 12 எய்ம்ஸ் நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இப்போது இந்தியாவில் 1,425-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள், 54,000 கல்லூரிகள், 16,850 தனித்துவமான கல்வி நிறுவனங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை எண்ணிக்கை 2014-15-ல் 1.57 கோடியாக இருந்த நிலையில், 2023-24-ல் 2.24 கோடியாக, 42.2 சதவீதம் வரை அதிகரித்துள்ளதை திரு சி பி ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். பட்டமளிப்பு விழாக்களில் பட்டங்களையும் பதக்கங்களையும் பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வரவேற்கத்தக்க முன்னேற்றம் என்று அவர் கூறினார்.

இந்தியாவின் மிகப்பெரிய பலம் அதன் மக்கள் எனவும், குறிப்பாக அதன் இளைஞர்கள் என்றும் குடியரசு துணைத்தலைவர் கூறினார். பட்டம் பெறும் மாணவர்களிடம் தமது செய்தியைப் பகிர்ந்துகொண்ட அவர், "எதிர்காலத்திற்காக உங்களை தயார்படுத்திக்கொள்ளாதீர்கள்; எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில் உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்," என்று கூறினார்.

போதைப்பொருள் வர்த்தகம் குறித்த தகவலைப் பகிர்ந்துகொண்டதற்காகத் தமிழ்நாட்டில் மாணவர் ஒருவர் அண்மையில் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாகக் குடியரசு துணைத்தலைவர் கூறினார். தனது சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை இழந்தது போன்ற உணர்வை அது தமக்கு ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

அனைத்து வகையான போதைப் பழக்கங்களிலிருந்தும் விலகி இருக்குமாறு மாணவர்களை அவர் வலியுறுத்தினார். அத்துடன், கவனச்சிதறலுக்குப் பதிலாக ஒழுக்கத்தையும், சோதனைகளுக்குப் பதிலாக நோக்கத்தையும், எளிதான குறுக்குவழிகளுக்குப் பதிலாகச் சிறப்பான செயல்பாட்டையும் தேர்ந்தெடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

பட்டம் பெரும் மாணவர்களின் அறிவு, புதுமை, கடின உழைப்பு ஆகியவை இந்தியாவின் முன்னேற்றம், பாதுகாப்பு, செழிப்புக்கு பங்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அரசியலமைப்பு விழுமியங்களைக் கடைப்பிடிக்கவும், பன்முகத்தன்மையை மதிக்கவும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தவும், குறுகிய சுயநலத்தை விடப் பரந்த தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிக்கவும் அவர் மாணவர்களை வலியுறுத்தினார்.

அறிவு, கடமை, கருணை, சேவை ஆகிய காலத்தால் அழியாத இந்திய விழுமியங்களைத் தங்களோடு கொண்டு செல்லுமாறு பட்டம் பெற்றவர்களை அவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், குடியரசு துணைத்தலைவர், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் வாகன வணிகப் பிரிவுத் தலைவர் திரு ஆர் வேலுசாமிக்கு கௌரவப் பட்டத்திற்கான சான்றிதழை வழங்கினார். மேலும், பட்டதாரிகளுக்குப் பதக்கங்கள், தரவரிசைச் சான்றுகள், பட்டங்களை வழங்கிக் கௌரவித்தார். அத்துடன், பட்டம் பெறுவோரிடையேயும் மாணவர்களிடையேயும் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியையும் அவர் ஏற்கச் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளம் மாநிலங்களின் ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், எஸ்ஆர்எம் அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் டாக்டர் டி ஆர் பாரிவேந்தர், இணை வேந்தர் (நிர்வாகம்) டாக்டர் ரவி பச்சமுத்து, இணை வேந்தர் (கல்விசார்) டாக்டர் பி சத்யநாராயணன், துணைவேந்தர் டாக்டர் சி முத்தமிழ்செல்வன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...