மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், 31-ஆவது தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு மாமல்லபுரம் அருகில் கோவளம் பகுதியில் 2026 ஆகஸ்ட் 20, ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது.
மாநாட்டிற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் துணைத் தலைவராக செயல்படுகிறார். மாநாடு காலை 10:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை சுமார் 4 மணி நேரம் நடைபெறும், மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 19 இன்று புதன்கிழமை இரவு சென்னை வந்து சேர்ந்தார் சென்னைக்கு தெற்கில் சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள மாமல்லபுரம் அருகில் கோவளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கூட்டம் நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, துணைத் தலைவர்: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், உறுப்பினர்கள்: தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பாணடிச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சர் மற்றும் துணைநிலை ஆளுநர். மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் உள்துறைச் செயலாளர்கள் மற்றும் மத்திய அரசின் முக்கிய அதிகாரிகள். கலந்து கொள்ளும் நிலையில் விவாதிக்கப்படும்
முக்கிய அம்சங்களாக மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் மாநில எல்லை மற்றும் தண்ணீர் பகிர்வுக்கு முக்கியமாகத் தமிழ்நாடு - கர்நாடகா இடையேயான காவிரி நீர் பகிர்வுப் பிரச்சினை குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது. நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தென் மாநிலங்களின் கவலைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம். தொழில்துறை முதலீடுகள், உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், கடலோரப் பாதுகாப்பு மற்றும் மாநில காவல்துறையினருக்கு இடையேயான ஒருங்கிணைப்பு.பேரிடர் மேலாண்மை: பருவமழை மற்றும் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வதற்கான கூட்டு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படலாம், மாநாட்டை முன்னிட்டு சென்னை விமான நிலையம், கிழக்கு கடற்கரை சாலை (ECR) மற்றும் மாமல்லபுரம் பகுதிகளில் ஐந்து அடுக்குப் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களை பார்வையிட பொதுமக்களுக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதியம் 3:00 மணி வரை தற்காலிகத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள்