ரூபாய் .38.79 லட்சம் விபத்து இழப்பீட்டுத் தொகை மோசடி நீதிமன்ற ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறைத் தண்டனை !
கள்ளக்குறிச்சியில் விபத்து இழப்பீட்டுத் தொகையான ரூபாய் .38.79 லட்சத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில், நீதிமன்ற பெண் ஊழியர் அறிவுச்செல்விக்கு 37 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்பட்ட அவரது மகன் மற்றும் உறவினருக்கு தலா 22 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இந்தத் தண்டனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மோசடித் தொகை ரூபாய் .38.79 லட்சம்!நீதிமன்ற ஊழியர் அறிவுச்செல்விக்கு 37 ஆண்டுகள் சிறை!
மகன் மற்றும் உறவினருக்கு தலா 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை! விதித்து தீர்ப்புகள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தொகையை (MCOP வழக்குகளில் ) போலி ஆவணங்கள் மற்றும் நீதிபதியின் போலிக் கையெழுத்து மூலம் மோசடி செய்த முன்னாள் நீதிமன்றப் பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கள்ளக்குறிச்சி முதன்மை துணை நீதிபதி சுரேஷ்குமார் நடத்திய திடீர் ஆய்வின் போது இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து CB-CID காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் பின்வரும் தண்டனைகளை வழங்கி தீர்ப்பளித்துள்ளது:
அறிவுச்செல்விக்கு : 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 30,000 அபராதம். வரதராஜன் மற்றும் தமிழரசன்: தலா 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 17,000 அபராதம்
இந்த வழக்கில் தொடர்புடைய செந்தில்குமார் என்பவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.











கருத்துகள்