திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டம் செல்லையா மகன்
எட்வர்ட் (வயது 49). இவர் தனது விவசாய நிலத்திற்கு மேக்குடி கிராமத்திலுள்ள மாங்குளத்திலிருந்து வண்டல் மண் அள்ளுவதற்கு நீர்வளத்துறை அலுவலகத்தில் அனுமதி கேட்டிருந்தார். அதுதொடர்பாக புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பிரிவு-1 பணி ஆய்வாளரான லோகநாதன்(வயது 41) என்பவரை நேரில் அணுகிய போது, அவர் அனுமதி வழங்க ரூபாய் .4 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத எட்வர்ட், அது குறித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊழல் தடுப்புக் மற்றும் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் கொடுத்தார். அதன் பேரில், ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பொறி வைத்து பிடிக்கத் திட்டமிட்டு அதற்கு நடவடிக்கை எடுத்தனர்.அதன்படி,
திருச்சிராப்பள்ளி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் வைத்து எட்வர்டிடம் இருந்து அரசு சாட்சிகள் முன்னிலையில் ரூபாய் .4 ஆயிரத்தை லஞ்சமாக வாங்கிய லோகநாதனை ஊழல் தடுப்புக் க்கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜரபடுத்தப்பட்டு சிறையில் சேர்த்தனர்,





கருத்துகள்