முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கபினியிலிருந்து வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறப்பு நாளை மறுநாள் மேட்டூர் வந்தடையும்

கபினி அணையிலிருந்து வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கு வினாடிக்கு 15,675 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 


கபினி அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு இன்று ஆகஸ்.1 ல் 10,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட காட்சி!

இன்னும் 2 அல்லது 3 நாட்களில் இந்தத் தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடையும்!  "இயற்கை யாருக்கும் சொந்தமானதல்ல.." கர்நாடக அணைகள் நிரம்பி வருகின்றன, இந்த நேரத்தில் அதிக நீரைத் தேக்கினால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவோம்..! ''தமிழ்நாட்டிற்கு எதிரான கடையடைப்பு அறிவிப்பை திரும்ப பெறுக..''  என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தகவல் "கபினி அணை நிரம்பி வருகிறது. அணை நிரம்பியதும் நீரை வெளியேற்ற வேண்டும்; அதைத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே, நீரை வெளியேற்றக் கூடாது என்று போராடும் முடிவைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்," என கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் . வேண்டுகோள்.

 




"கபினி அணையின் நீர் இருப்பு குறித்த தகவல்களை நீர்வளத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு மணி நேரமும் வழங்கி வருகின்றனர். 

அணைக்கு வரும் நீரின் அளவு (வரத்து) 40,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இயற்கை யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல; இயற்கையின் விருப்பப்படியே நாம் வாழ்கிறோம்.

 நாம் நீரை வெளியேற்றக் கூடாது என்று முடிவெடுத்தாலும் கூட, அணை நிரம்பும்போது அந்த நீரைத் தடுத்து நிறுத்த முடியாது.


 போராட்டக்காரர்கள் நீர் வெளியேற்றப்படும் இடத்திற்குச் செல்லக் கூடாது. நீரின் வேகத்தில் நீங்கள் அடித்துச் செல்லப்படலாம்; யாரும் நீருக்கு அருகில் சென்று படுத்துக்கொள்ளக் கூடாது

தமிழ்நாட்டிற்கு நீர் திறக்கப்படக் கூடாது என்பதற்காகப் போராட்டம் மற்றும் 'பந்த்' (வேலைநிறுத்தம்) நடத்தப்போவதாக நமது நண்பர்கள் கூறுகிறார்கள். ஒரு போராட்டத்திற்குப் பின்னணி அல்லது நியாயமான காரணம் இருக்க வேண்டும்.

 ஜனநாயக அமைப்பில் அனைவரின் போராட்டமும் மதிக்கப்படுகிறது. ஆனால், இப்போது போராட்டத்திற்கான அவசியமில்லை. சட்ட நடைமுறைகள் பாதிக்கப்படக் கூடாது; மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படக் கூடாது.

 மக்கள் அனைவரும் இந்த மாநிலத்தில் தான் வசிக்கிறோம்; அனைவரையும் நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளோம். தமிழ்நாடு உட்பட நாம் அனைவரும் ஒரே நாட்டின் குடிமக்கள்." 

பங்காரப்பா, எஸ்.எம். கிருஷ்ணா, சித்தராமையா மற்றும் எச்.டி.தேவே கவுடா ஆகியோரின் ஆட்சிக் காலங்களிலும், சிக்கல்கள் எழுந்தபோது அன்றைய சூழலுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கப்பட்டன. நாங்கள் செய்தது சரி, அவர்கள் செய்தது தவறு என்று நாங்கள் கூறவில்லை.

 தமிழ்நாட்டிற்கு 177 டிஎம்சி (TMC) தண்ணீரை விடுவிக்க உத்தரவு உள்ளது. உச்ச நீதிமன்றமும் இதற்கு ஆதரவு அளித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை நாம் மதிக்க வேண்டும். அதே சமயம் நமது விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும். எங்கள் அரசு விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. இந்த உத்தரவு இரு மாநிலங்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்," என கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் தற்போது தகவல் .காவிரி நீர் பகிர்வு விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார்  விதான சௌதாவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்வர் டாக்டர் ஜி. பரமேஸ்வரா, அமைச்சர் ராமலிங்க ரெட்டி, தலைமைச் செயலாளர் ஷாலினி ரஜ்னீஷ், தலைமை வழக்கறிஞர் சசிகரன் ஷெட்டி, கூடுதல் தலைமைச் செயலாளர்கள் துஷார் கிரிநாத், கௌரவ் குப்தா, ராஜேந்திர குமார் கட்டாரியா, டிஜிபி சலீம், காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.சவாலான காலகட்டம்..

காவிரியில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா தண்ணீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவு

காவிரி ஒழுங்காற்று குழு (CRA) பரிந்துரையின்படி வினாடிக்கு 3500 கன அடி வீதம் 15 நாட்கள் திறக்கவேண்டும்.

ஏற்கனவே தண்ணீர் திறக்க முடியாது என்று மறுத்துவரும் முதலமைச்சர் டி. கே.சிவக்குமார் நேற்று வரை பிடவாதம் காட்டிய நிலையில் இன்று இயற்கை மழை பொழிவு கபினி அணை நிரம்பி வரும் நிலையில், அவரது பிடிவாதம் மாறியது, கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறார். 

தமிழ்நாடு  முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கர்நாடகா வருவதாக சொல்லி சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.

ஆனால் விஜயின் கர்நாடக பயணம் பற்றி தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை.  

தமிழ்நாட்டில் காவிரி வறண்டு போய் உள்ளதால் விவசாயம் கேள்விக்குறியானதோடு குடிநீர் பிரச்சினையும் தலைதூக்கி வரும் அவலம்.

விருந்தும், வந்து சேரும் வினையும்..

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு காவிரியில் கர்நாடக அரசு 15 நாட்களுக்கு வினாடிக்கு 3500 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும்.

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால பருவ மழை பொழிவு தரவுகளின் அடிப்படையில் தான் இந்த உத்தரவு.

கர்நாடக அணைகளில் தற்போது உள்ள நீர் இருப்பையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மேம்போக்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்று சொல்லவே முடியாது. 

அப்படிப்பட்ட உத்தரவை மீறினால், அது உச்ச நீதிமன்றத்தின் அவமதிப்பு.

கர்நாடகாவில் விவசாயிகள் உண்மை நிலை தெரியாமல் கொந்தளிப்பு, தண்ணீர் திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கேள்விக்குறியாகும் என்றெல்லாம் சொல்லி அப்பீல் போய் காலத்தை இழுப்பார்கள்.

இதற்கு முன் இந்த மாதிரி நிலைமை ஏற்பட்டபோது உச்ச நீதிமன்றம் கர்நாடகாவின் கருத்தை மறுத்து முதலில் தண்ணீர் திறந்து விடுங்கள் என்று எச்சரித்து செயல்படவும் வைத்திருக்கிறது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் இப்போது ஒரு வித்தியாசமான சூழ்நிலை.

தண்ணீர் திறக்கப்படும் நிலை வருகிற போது இரண்டு விஷயங்கள் உருவாகலாம். 

தாங்கள் போய் பேச்சுவார்த்தை நடத்தி வற்புறுத்தியால் தான் தண்ணீர் திறந்திருக்கிறார்கள் என்று தவெக காங்கிரஸ் கூட்டணி அரசு தரப்பில் சொல்லலாம். ஆனால் அதற்கு இயற்கை விட வில்லை 

இன்னொன்று," நீங்கள் வந்து கேட்டு நாங்கள் மதித்து  தண்ணீர் திறந்து விட்டது மாதிரி கர்நாடக மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க மேகதாதுவில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்று சர்வ சாதாரணமாக கர்நாடகா வலைக்குள் இழுக்கலாம். 

காவிரி நீர் என்பது  மன்னர் காலங்களைத் தாண்டி, ஆங்கில பிரிட்டிஷ் காலத்தைக் கடந்து சுதந்திர இந்தியா பிறந்து முக்கால் நூற்றாண்டு ஆகியும் சுழன்று சுழன்று அடித்துக் கொண்டிருக்கிற ஒரு சமாச்சாரம்.

விளம்பரம், விளையாட்டு, அதீத தன்னம்பிக்கை இதையெல்லாம் தூக்கி வீசி விட்டு அணுக வேண்டிய விஷயம்தான், எட்டரை கோடி தமிழ் மக்களின் வாழ்வாதாரமான  காவிரி.

காவிரி டெல்டா மாவட்டங்களை மட்டுமல்ல, பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களால் தென் மாவட்டங்களுக்கும் அவ்வளவு ஏன் கொள்ளிடம் - வீராணம் ஏரி வழியாக சென்னைக்கு கூட காவிரி வந்து கொண்டிருக்கிறது..

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், தமிழ்நாட்டிற்கு தினசரி 3,500 கன அடி (cusecs) வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) உத்தரவை தற்காலிகமாக அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், கர்நாடகாவில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழ்நிலை காரணமாக, ஆகஸ்ட் 3ஆம் தேதி பெங்களூரு வரவிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை தனது பயணத்தை தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் நேற்று வெளியிட்டுள்ள முக்கியக் கருத்துக்கள் :

தமிழக முதலமைச்சரின் பயணத்தை தள்ளி வைக்கக் கோரிக்கை

சூழல் சரியில்லை: காவிரி நீர் ஒழுங்குமுறை समिति (CWRC) மற்றும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளுக்கு எதிராக கர்நாடகாவின் மாந்தியா போன்ற பகுதிகளில் தீவிரப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

 இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவது சரியாக இருக்காது என்பதால், ஆகஸ்ட் 3 அன்று திட்டமிடப்பட்ட சந்திப்பை தள்ளிவைத்துவிட்டு, அமைதியான சூழ்நிலை திரும்பியதும் பேசலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அனைத்துக் கட்சிக் கூட்டம் (ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி அடுத்தகட்ட நடவடிக்கை: காவிரி நீர் விவகாரத்தில் மாநிலத்தின் அடுத்தகட்ட சட்டப் போராட்டங்கள் மற்றும் முடிவுகள் குறித்து விவாதிக்க ஆகஸ்ட் மாதம் 2 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பெங்களூருவில் உள்ள தனது ‘கிருஷ்ணா’ இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். 

சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை: சட்ட வல்லுநர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 

அணைகளின் நீர் இருப்பு நிலவரம்  நீர் வரத்து அதிகரிப்பு: கர்நாடக காவிரி படுகையில் உள்ள அணைகளுக்கு கடந்த சில நாட்களாக நீர் வரத்து அதிகரித்திருப்பது சற்று நிம்மதியளிப்பதாகக் கூறியுள்ளார்.



அணைகளின் கொள்ளளவு: தற்போதைய நிலவரப்படி ஹாரங்கி அணை 95 சதவீதம் கபினி அணை 83 சதவீதம் ஹேமாவதி 67 சதவீதம் மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணை 36 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளதாகத் தரவுகளை வெளியிட்டுள்ளார். 

மேகேதாட்டு அணை விவகாரம் தமிழ்நாட்டிற்குத்தான் லாபம்: காவிரியின் குறுக்கே கர்நாடகா திட்டமிட்டுள்ள மேகேதாட்டு சமன்படுத்துதல் அணைத் திட்டம் (Mekedatu project), கர்நாடகாவை விட தமிழ்நாட்டிற்குத்தான் அதிகப் பயன் தரும் என்றும், மின்சார உற்பத்திக்கு மட்டுமே கர்நாடகா இதைப் பயன்படுத்தும் என்றும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

கர்நாடக மக்களின் குடிநீர்த் தேவையையும், விவசாயிகளின் நலனையும் காப்பதே தங்களது அரசின் முதன்மைக் கடமை என்றும் முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தனது செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.அப்போ அதே 400 கன அடித் தண்ணீரை திறக்கலாமே. 

கொள்ளளவைத் தாண்டி வெள்ளப் பெறுக்கில் வெளியேறிய வெள்ள நீர்.

அணை உள்ள தமிழ்நாடு விவசாயிகளுக்கும் இதே மனநிலை தான் உள்ளது.

அணைகள் தான் முதல் பேரழிவு.வன அனுமதி: மத்திய வனத்துறையின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட (Stage I & Stage II) வன அனுமதிகள் பெறப்படவில்லை.

சுற்றுச்சூழல் & வனவிலங்கு அனுமதி: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் (EC) அனுமதியும், தேசிய வனவிலங்கு வாரியத்தின் (NBWL) அனுமதியும் பெறப்படவில்லை.





காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA): விரிவான திட்ட அறிக்கைக்கான (DPR) ஒப்புதல் நிலுவையில் உள்ளது.

தொழில்நுட்ப அனுமதிகள்: மத்திய நீர் ஆணையம் (CWC) மற்றும் மத்திய மின்சார ஆணையம் (CEA) ஆகியவற்றின் இறுதித் தொழில்நுட்ப அனுமதிகள் இல்லை.

நீதிமன்ற வழக்குகள்: உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (NGT) தமிழ்நாடு அரசு மற்றும் 'பூவுலகின் நண்பர்கள்' உள்ளிட்ட சூழலியல் அமைப்புகள் தொடுத்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இத்தனை சட்டப்பூர்வ அனுமதிகளையும் பெறாமல் கர்நாடக அரசால்

ஆக்குவது பெரும் கஷ்டம் அழிப்பது ரொம்ப சுலபம்.. ஆகவே மேகதாட்டு அணையை கர்நாடகா தனித்து முடிவு செய்து கட்டமுடியாது தடுக்க முடியாது இயற்கை மழை தற்போது கபினி நிரம்பி காவிரியில் மூன்று நாளில் தண்ணீர் மேட்டூர் அணை வந்து சேரும்.

தவெக காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு  இயற்கை செய்த கொடை இனி அரசு இதன் தொடர்ச்சி செய்யப் போகிறது, என்பதே மக்கள் எதிர்பார்ப்புகளாகிறது,அமைச்சர் புஸ்ஸிஆனந்தின் இரு துறைகளுக்கு ஒரு செயலர்: ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக பணியாற்றி வந்த பிரசாந்த் எம்.வட்னாரை நீர்வளத்துறை செயலராக பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், ஊரக வளர்ச்சித் துறை செயலர் பொறுப்புகளையும் கூடுதலாக கவனிப்பார் என அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நீர்வளத்துறை செயலாளராக இருந்த சத்யபிரதா சாகு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...