ரூபாய் .50,000 லஞ்சம் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் கைது
சவுடு மண் எடுப்பதற்கு அனுமதி வழங்குவதற்காக, ரூபாய் .50,000 லஞ்சம் வாங்கிய பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவணப் பெருமாள் கைது செய்யப்பட்டார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியராக (RDO) சரவண பெருமாள் பணிபுரிந்து வருகிறார். சவுடு மண் எடுப்பதற்கு வருவாய் கோட்டாட்சியர் தான் முறைப்படி அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அனுமதி கோரி மனுச் செய்தவவரிடம், ரூபாய் .50 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என சரவண பெருமாள் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர், இராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். இன்று காலை அவர்கள் அறிவுறுத்தலின்படி மனுதாரர் அரசு சாட்சியுடன் பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவிய ரூபாய் .50 ஆயிரம் பணத்தைக் கொண்டு சென்று கொடுத்தார். அதை கோட்டாட்சியர் சரவணப் பெருமாள் வாங்கியபோது, மறைந்திருந்து கண்காணித்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். லஞ்சம் வாங்குவதற்கு உடந்தையாக இருந்த கோட்டாட்சியரின் அரசு ஓட்டுநர் சுந்தருரும் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்,தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்தபிறகு, அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. லஞ்சம் கேட்டால் எங்களிடம் புகார் சொல்லுங்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை பிரத்யேக வாட்ஸ்அப் எண் (94981 80936) அறிவித்து பிரசாரம் செய்கிறது. அப்படியிருந்தும், துணை கலெக்டர் அந்தஸ்திலான வருவாய் கோட்டாட்சியர், லஞ்சம் வாங்கி பணம் பெற்ற கையுடன் பிடிபட்டிருப்பது, கடந்த ஆட்சியில் இல்லை ஆகவே அரசு லஞ்சம் பெறும் அலுவலர்கள் மத்தியில் பெரும் பயம் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மை

கருத்துகள்