80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 78 வீரதீரச் செயல்களுக்கான விருதுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாதுகாப்புப் படைகள், மத்திய ஆயுதக் காவல் படைகளின் வீரர்களுக்கு, மறைவுக்குப் பின் வழங்கப்படும் 13 விருதுகள் உட்பட, 78 வீரதீர விருதுகளுக்கு குடியரசுத் திருமதி திரௌபதி முர்மு அங்கீகரித்து ஒப்புதல் அளித்துள்ளார்.
அவையாவன: மறைவுக்குப் பின் வழங்கப்படும் 7 விருதுகள் உட்பட 9 கீர்த்தி சக்ரா விருதுகள்;
கூடுதல் சௌரிய சக்கரா 1;
மறைவுக்குப் பின் வழங்கப்படும் 1 விருது உட்பட 19 சௌரிய சக்ரா;
5 கூடுதல் சேனா பதக்கங்கள்;
மறைவுக்குப் பின் வழங்கப்படும் 5 பதக்கங்கள் உட்பட 36 சேனா பதக்கங்கள்;
3 நவ் சேனா பதக்கங்கள்;
5 வாயு சேனா பதக்கங்கள் .2026-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 20 காவல் அதிகாரிகளுக்கு இந்தியக் குடியரசுத் தலைவரின் (ஜனாதிபதி) பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தகைசால் சேவைக்காக 3 பேருக்கும், சிறந்த சேவைக்காக 17 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் தமிழக அரசின் முதலமைச்சர் காவல் பதக்கங்களும் 15 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றவர்கள் விவரம்தகைசால் சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் (3 பேர்):கே. ராமச்சந்திரன் (கூடுதல் எஸ்.பி, லஞ்ச ஒழிப்புத்துறை, விருதுநகர்)ஜே. விஜய் ஆனந்த் (கூடுதல் எஸ்.பி, 'க்யூ' பிரிவு சி.ஐ.டி, சென்னை)எஸ். குமார் (உதவி கமாண்டண்ட், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை)சிறந்த சேவைக்கான பதக்கம் (17 பேர்):எம். சோமசுந்தரம், கே. சிவசங்கர், பி. கோவிந்தராஜு உள்ளிட்ட 17 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.முதலமைச்சர் காவல் பதக்கங்கள் (15 பேர்)புலனாய்வில் சிறந்து விளங்கியமைக்காக (10 பேர்):சி. ஜெயஸ்ரீ, என். தமிழரசி, கே. அழகராஜ், என். தனுசியா (துணை காவல் கண்காணிப்பாளர்கள்) மற்றும் ஆய்வாளர்கள்.பொதுப் பணியில் சிறந்து விளங்கியமைக்காக (5 பேர்):வி. சசி மோகன் (டி.ஐ.ஜி), டி. சண்முகபிரியா (எஸ்.பி) மற்றும் பிற காவல்துறை அதிகாரிகள்.இப்பதக்கம் பெறுபவர்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூபாய் . 25,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.ரயில்வேயில் சிறந்த சேவைக்கான பதக்கங்களை குடியரசுத் தலைவர் வழங்கினார்
2026-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் தருமதி திரௌபதி முர்மு, ரயில்வே காவல் படை/ ரயில்வே பாதுகாப்பு படை, அதிகாரிகள், பணியாளர்களுக்கு, சிறப்புச் சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கம், தகுதி சேவைக்கான பதக்கம் ஆகியவற்றை வழங்கி கௌரவித்துள்ளார்:
சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றவர்கள்:
1.திரு ராஜேஷ் லால், உதவிப் பாதுகாப்பு ஆணையர், ரயில்வே வாரியம்
சிறப்பான சேவைக்கான பதக்கம்:
1.திரு சத்ய பிரகாஷ், முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், வடகிழக்கு ரயில்வே
2.திரு சி. எஸ். செங்கப்பா, உதவிப் பாதுகாப்பு ஆணையர், தெற்கு ரயில்வே
3.திரு கிருஷ்ண குமார் மிஸ்ரா, உதவிப் பாதுகாப்பு ஆணையர், வடகிழக்கு ரயில்வே
4.திரு விவேக் வர்மா, உதவிப் பாதுகாப்பு ஆணையர், வட மத்திய ரயில்வே
5.திரு மோனி தாரோ, ஆய்வாளர், ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை
6.திரு வருண் பிரசாத் லஹேரி, ஆய்வாளர், ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை
7.திரு எச்.கே. தொட்டையா, உதவி ஆய்வாளர், தென்மேற்கு ரயில்வே
8.திரு கைலாஷ் பிரசாத், உதவி ஆய்வாளர், வடகிழக்கு ரயில்வே
9.திரு நரேஷ் குமார், உதவி ஆய்வாளர், வடக்கு ரயில்வே
10. ஸ்ரீ குரு பிரசாத் நாகரிகந்தி, உதவி ஆய்வாளர், தெற்கு மத்திய ரயில்வே
11. திரு ராம் பிரசாத் மீனா, உதவி ஆய்வாளர் (எம்டி), ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை
12. திரு இ அருண் மோலி, உதவி ஆய்வாளர், தெற்கு ரயில்வே
13. திரு விகாஸ் குமார், உதவி ஆய்வாளர், வட மத்திய ரயில்வே
14. ஸ்ரீ நிராஜ் அஹ்லாவத், உதவி ஆய்வாளர், வடக்கு ரயில்வே
15. திரு சங்கர் சிவசுவாமி எட்லே, தலைமைக் காவலர், மத்திய ரயில்வே
மேலும் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான சங்கீத புரஸ்கர் விருது மற்றும் அகாடமி விருதுகளை 115 கலைஞர்களுக்கு, டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று வழங்கி சிறப்பித்தார்.அந்த வரிசையில் தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர் வாகை சந்திரசேகருக்கு சங்கீத நாடக அகாடமி விருதை வழங்கி கௌரவித்தார். நாடகம் மற்றும் கலைத்துறைக்கு இவர் ஆற்றிய ஒட்டுமொத்த பங்களிப்பைப் பாராட்டி இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
விருது பெற்ற பின் பேசிய வாகை சந்திரசேகர், இந்த விருதை தமிழ்நாட்டில் வாழும் அனைத்து நாடகக் கலைஞர்களுக்கும் சமர்ப்பிப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.1980களில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தனது யதார்த்தமான மற்றும் தனித்துவமான நடிப்புத் திறமையால், குணச்சித்திர கதாபாத்திரங்கள் முதல் வில்லன்கள் வரை பலதரப்பட்ட வேடங்களில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, ஒரு அழியாத முத்திரையைப் பதித்தார்.
கலைத்துறைக்கு இவர் ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டி, 1991ம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது. 2002 ஆம் ஆண்டு வெளியான 'நண்பா நண்பா' திரைப்படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.கலைத்துறை மட்டுமல்லாமல் அரசியலில் கால்பதித்தார் வாகை சந்திரசேகர். திமுக சார்பில் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் திறம்படப் பணியாற்றினார். தற்போது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.



கருத்துகள்