தமிழ்நாடு புனித ஜார்ஜ் கோட்டையில் 80 வது சுதந்திர தினம் தேசியக் கொடியை ஏற்றும் முதல்வர் சி. ஜோசப் விஜய்
தமிழ்நாடு புனித ஜார்ஜ் கோட்டையில் 80 வது சுதந்திர தினம் தேசியக் கொடியை ஏற்றும் முதல்வர் சி. ஜோசப் விஜய்
தமிழ்நாடு புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சராக தேர்வான பின் முதல்முறையாக சி. ஜோசப் விஜய் அங்கு நடைபெறும் 80-வது சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியேற்றி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். தலைமைச் செயலகம் சார்பில் இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பு வெளியிடப்பட்டு, விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் (தலைமைச் செயலகம்) நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் காலை 9:00 மணிக்கு தேசியக் கொடியேற்றி, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திர தின உரையாற்றுவார்.
அதனைத் தொடர்ந்து தகைசலான தமிழர் விருதுகள் மற்றும் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை வழங்குவார்.விழா நிகழ்ச்சி நிரல் விவரங்கள்காலை 8:55 மணி: முதலமைச்சர் கோட்டை கொத்தளத்திற்கு வருகை தருதல்.காலை 9:00 மணி: தேசியக் கொடி ஏற்றிவைத்தல் மற்றும் மலர் தூவுதல்.காலை 9:05 மணி: காவல்துறை மற்றும் முப்படை அணிவகுப்பு மரியாதை ஏற்பு.காலை 9:15 மணி: சுதந்திர தின உரை நிகழ்த்துதல்.காலை 9:45 மணி: அரசின் பல்வேறு விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்குதல்.காலை 10:15 மணி: கலை நிகழ்ச்சிகள் மற்றும் நிறைவு விழாதமிழ்நாடு அனைத்து அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைத் தொடக்கத்தில் பாடுவது கட்டாயம் என்று முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சுதந்திர தினம் உள்ளிட்ட அனைத்து விழாக்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் . அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும்.தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாட்டுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சுதந்திர தினவிழாக் கொடியேற்ற நிகழ்ச்சிசுதந்திர தின விழாவில் ‘வந்தே மாதரம்’ பாடல் சென்னை உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை
மத்திய அரசின் “Har Ghar Tiranga Campaign 2026” அறிவுறுத்தலின்படி, தேசியப் பாடலான “வந்தே மாதரம்” பாடலின் 150-வது ஆண்டு நினைவையொட்டி, சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடுவது மற்றும் இசைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை முதன்மை அமர்வு, மதுரை கிளை, தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டல மையங்கள், மாவட்ட நீதித்துறை அலகுகள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச நீதித்துறை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் சுதந்திர தின விழாக்களில் ‘வந்தே மாதரம்’ இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிகளின் வரிசை 1.தேசியப் பாடல் – “வந்தே மாதரம்” பாடல் / இசை 2.தேசியக் கொடி ஏற்றுதல் 3.தேசிய கீதம் என்ற வரிசையில் நிகழ்ச்சிகள் நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ( REGISTRAR GENERAL )
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் (REGISTRAR GENERAL) அவர்கள் உடனடியாக CIRCULAR - ஜ திருத்தி தமிழ்தாய் வாழ்த்து பாடலோடு சுதந்திர தின விழாவைத் துவங்க வழக்கறிஞர் சங்கம் வேண்டுகோள் !
சுதந்திர தின விழாவில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இடம்பெற வேண்டும் என MMBA கோரிக்கை !
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நடைபெற உள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் மற்றும் இசை இடம்பெற வேண்டும் என, மதுரை கிளை சென்னை உயர்நீதிமன்ற பார் அசோசியேஷன் (MMBA) சார்பில் பதிவாளர் பொதுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள R.O.C.No.1162-A/2026/D1/D4/F/J/PROTOCOL/D1(MB) சுற்றறிக்கையில், சுதந்திர தின விழாவின் நிகழ்ச்சி வரிசையாக: ‘வந்தே மாதரம்’ தேசியக் கொடி ஏற்றுதல், தேசிய கீதம், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் இடம்பெறவில்லை என MMBA தனது பிரதிநிதித்துவத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ முதலாவது நிகழ்வாகப் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு G.O.Ms.No.531, Public Department, dated 12.08.2026 மூலம் உத்தரவிட்டுள்ளதாகவும் MMBA குறிப்பிட்டுள்ளது.
மேலும், ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ என்பது தமிழ்மொழி, பண்பாடு மற்றும் தமிழகத்தின் அடையாளத்துடன் தொடர்புடைய முக்கியமான மரியாதைக்குரிய பாடல் என்றும், தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடலுக்கான மரியாதைக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்றும் MMBA தனது கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
தேசியத்திற்கான மரியாதையும், தமிழ்மொழி மற்றும் தமிழகத்தின் பண்பாட்டு அடையாளத்திற்கான மரியாதையும் சமமான கண்ணியத்துடன் தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ள MMBA, சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலை இடம்பெறச் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் 30 கோவில்களில் நடைபெரும் சுதந்திர தின விழாவில் : அமைச்சர்கள் பங்கேற்பு
ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சென்னையில் உள்ள 30 முக்கியக் கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் பொது சமபந்தி விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், வடபழனி முருகன் கோவிலிலும், நீர்வளத்துறை அமைச்சர், என.ஆனந்த் வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோவிலிலும், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா, மயிலாப்பூர் மாதவபெருமாள் கோவிலிலும், அமைச்சர் கீர்த்தனா கபாலீஸ்வரர் கோவிலிலும், அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும், அமைச்சர் நிர்மல்குமார் பாரிமுனை காளிகாம்பாள் கோயிலிலும், அமைச்சர் டி.கே.பரபு பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலிலும் பங்கேற்கிறார்கள்.










கருத்துகள்