சேலத்தில் ராகினி என்ற பெண் மற்றும் அவரது கணவருடன் இணைந்து,
பணத்தாசை பிடித்த பொதுமக்களிடம் ரூபாய் 800 கோடி வரை பெரும் பண மோசடி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த விவகாரத்தின் முக்கியப் பின்னணிகள் குறித்துக் காண்போம் ரூபாய் 1 லட்சம் முதலீடு செய்தால், அதற்கு மாதந்தோறும் ரூபாய் 8,000 வட்டி தருவதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளனர். இந்தத் தம்பதி முக்கியமாக உள்ளூர் தொழிலதிபர்களையும், பெரிய முதலீட்டாளர்களையும் மட்டுமே குறிவைத்து கச்சிதமாக இந்த மெகா மோசடியை அரங்கேற்றியுள்ளனர்,
நிறுவனத்திற்கு AF3, AF4 போன்ற சிறப்பு உரிமங்கள் (Licenses) வாங்குவதாகக் கூறி முதலீடுகளைப் பெற்றுள்ளனர். தற்போது இந்த மெகா மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகார் அளித்தும், காவல்துறையில் வழக்குப் பதியாமல் காலம் தாழ்த்தி வருவதாகலும் மக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த வழக்கில் காவல் துறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரக் குற்றப்பிரிவின் (EOW) தலையீடு, மற்றும் PMLA சட்டம் மூலம் அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்த கூடுதல் அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால் விரைவில் நடக்கும். முதலீட்டாளர்களிடம் ரூபாய் 1 லட்சம் கொடுத்தால், அதற்கு மாதந்தோறும் ரூபாய் 8,000 வட்டி தருவதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டியுள்ளனர்,
இந்தத் தம்பதியினர் குறிப்பாக உள்ளூர் மற்றும் சேலத்தைச் சுற்றியுள்ள முக்கிய தொழிலதிபர்களை மட்டுமே இலக்காகக் கொண்டு மோசடி மற்றும் திருட்டு வேலையை கச்சிதமாக செய்து விட்டு தப்பியுள்ளனர், அவர்கள் குறித்து உளவு அமைப்புகள் கண்காணிக்கத் தவறியதால் இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர், ஆரம்பத்தில் கூறியபடி சில காலம் சிலருக்கு வட்டிப் பணத்தைக் கொடுத்து நம்பவைத்துப் பின்னர் அவர்கள் மூலம் MLM மோசடி போல பல நூறு கோடிகளைத் திரட்டி ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் இந்த மெகா மோசடி குறித்து காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், இன்னும் வழக்கு பதிவு செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வருகிறது. பல நூறு கோடிகளை ஏமாற்றிய இந்தத் திருட்டுத் தம்பதி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, தங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த போலி நிறுவனம் Profitever Traders (Profit Ever Trader என அழைக்கப்பட்ட ஒரு போலி நிறுவனம் சேலத்தில் சிறு வணிகம் மற்றும் சேவை வழங்குநராகவும் . நிதிச் சேவைகள், பொருட்கள் வர்த்தகம் மற்றும் பங்குச் சந்தை வர்த்தக ஆதரவை வழங்குவதாகவும் . அழகாபுரம் பெரியபுத்தூர் மற்றும் ரெட்டியூர், சேலம், தமிழ்நாடு - 636004 முகவரியில் ஆன்லைன் பங்கு வர்த்தகம், கமாடிட்டி டெரிவேட்டிவ் புரோக்கிங், மற்றும் உள்ளூர் நிதி ஆலோசனை நிறுவனங்கள் என விளம்பரம் செய்து இந்த மோசடியை நிகழ்த்தியுள்ளதாகத் தகவல் வருகிறது. இந்த நிலையில் இது குறித்து இன்னும் விரிவான தகவல் வந்ததும் நமது வாசகர்களுக்கு நமது செய்திக் குழு சிறப்பு செய்தியாக வழங்கும், கடந்த காலத்தில் நடந்த அனுபவ் தேக்கு மர மோசடி, ஈமு கோழி மோசடி, நியோ மேக்ஸ் நில மோசடி போல, பண முதலீடு வட்டி ஆசை என்பது முதலீடு செய்து ஏமாத்த மக்கள் முதலுக்கே மோசமானது தான் வேடிக்கை.














கருத்துகள்