80 ஆவது சுதந்திர தினம் டெல்லி செங்கோட்டையில் பிரதமரும், சென்னை ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் முதல்வரும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை
இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் இன்று 15 ஆகஸ்ட் 2026 டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 13-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வரலாற்று சாதனை
சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக, செங்கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றுவதற்கு முன்பாக நமது தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த முறை விழா முழுவதும் 'வந்தே மாதரம்' மையக் கருப்பொருளாக இருந்தது பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றியவுடன், இந்திய விமானப்படையின் இரு Mi-17 ஹெலிகாப்டர்கள் செங்கோட்டை மற்றும் அங்கு கூடியிருந்த மக்கள் மீது மலர்களைத் தூவி மரியாதை செலுத்தியது, 21 குண்டுகள் முழங்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட '105mm லைட் ஃபீல்ட்' துப்பாக்கிகள் மூலம் 21 குண்டுகள் முழங்கப்பட்டு தேசியக் கொடிக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது,
இந்த ஆண்டு விழா "வளர்ந்த இந்தியா 2047-க்கான யுவ சக்தி" (Youth Power for Viksit Bharat) என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்டது சக்தி கி சப்த தாரா எனும் 7 சீர்திருத்தங்கள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க உற்பத்தி, விவசாயம், தொழில்நுட்பம், கதி-சக்தி, ரக்ஷா சக்தி, பசுமைப் பொருளாதாரம் மற்றும் இந்தியாவின் மென் ஆற்றல் ஆகிய 7 முக்கிய துறைகளில் கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் உறுதியளித்தார் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 5,000 சிறப்பு விருந்தினர்கள் இந்நிகழ்ச்சியைக் காண அழைக்கப்பட்டிருந்தனர் Greater காஷ்மீர் 2,500 NCC கேடட்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து 'வந்தே மாதரம்' என்ற வார்த்தையை மனித சங்கிலி வடிவில் உருவாக்கிக் காட்டினர்.
அதேபோல் இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை ஒட்டி, தமிழ்நாட்டில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முதன்முறையாகத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்று அவர் கொடியேற்றும் முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு கொடியேற்றுவதற்கு முன்பாக, தமிழ்நாடு காவல்துறையினரின் கம்பீரமான சிறப்பு அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் முதலமைச்சரின் பெற்றோர்களான திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர், நடிகை த்ரிஷா, தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் முன்னிலையில் கலந்துகொண்டனர்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து சாதனை படைத்தவர்களுக்கு தகைசால் தமிழர் விருது, ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது மற்றும் கல்பனா சாவ்லா விருது போன்ற பல்வேறு மாநில அரசு விருதுகளை முதல்வர் வழங்கி கௌரவித்தார். தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கியது அவர் முன்னாள் நாடாளுமன்ற மக்களவை மூத்த உறுப்பினர், கிருஷ்ணசாமியின் மாமனார் வினாயகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,
கிருஷ்ணசாமியின் சம்பந்தி பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ். கிருஷ்ணசாமி மகள் டாக்டர் சௌமியா அனபுமணி பாமக சடடமன்றக் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத் தற்போது நடாளுமன்ற மக்களவைஉறுப்பினர், மருமகன் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தற்போது நடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இவர் தகைசால் தமிழர் விருதுக்கு தகுதியான தலைவர் என்பதில் மாற்றில்லை. தேசியக் கொடியை ஏற்றிய பின் உரையாற்றிய
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், "மக்களை லஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து காப்பாற்றுவது கூட உண்மையான விடுதலைக்குச் சமமானது தான்" என தனது உரையில் குறிப்பிட்டார். முன்னாள் முதல்வர் 1974-ல் மத்திய அரசுடன் போராடிப் பெற்ற உரிமையின் படி, சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் வழக்கம் உருவானது. அந்த வரிசையில், சென்னை கோட்டையில் கொடியேற்றும் 7-வது தமிழ்நாடு முதலமைச்சர் என்ற பெருமையை சி. ஜோசப் விஜய் பெற்றுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த புலனாய்வு மற்றும் பொதுச்சேவைக்காக தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 15 அதிகாரிகளுக்குத் தமிழ்நாடு முதல்வரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு 8 கிராம் தங்கப் பதக்கமும், ரூபாய் . 25,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. விருது பெற்றவர்கள் புலனாய்வில் சிறந்து விளங்கியோர்: சி. ஜெயஸ்ரீ, என். தமிழரசி, கே. அழகராஜ், என். தனுசியா, எஸ். லதா, எம். சித்ரா, ஆர். வினிதா, ஜி. மகாலட்சுமி, வி. கோமதி மற்றும் எஸ். விஜயகுமார்.பொதுச்சேவையில் சிறந்து விளங்கியவர்களில் வி. சசிமோகன் (DIG), டி. சண்முகபிரியா (SP), சி.எம்.ஆர். மணிமொழியன், கே. மதன் மோகன் மற்றும் எம். ரவிக்குமார். ஆகியோர் ஆகும்.








































கருத்துகள்