முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் Bitcoin மோசடியில் பணமிழந்த மக்களின் பரிதாபங்கள்

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் Bitcoin மோசடி 'இரட்டிப்பு லாபம்' என ஆசை வார்த்தையில்


ஆயிரக்கணக்கானோர் ஏமாற்றம் - கோடிக்கணக்கில் பறிபோனது பணம் 




"FQL EXCHANGE", "fqlin.com", "V.G INVESTMENT" ஆப்கள் மூலம் மக்களை ஏமாற்றிய சதுரங்க வேட்டை பாணி மோசடி கும்பல்; ஏஜெண்ட் ஒருவர் கைது - ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் பரிதவிப்பு!

 மதுரை மாவட்டம் மேலூர் சுற்றியுள்ள கட்டையம்பட்டி, கோட்டநத்தாம்பட்டி, அ.வல்லாளப்பட்டி, அய்யாப்பட்டி, மேலவளவு உள்ளிட்ட பகுதிகளில், 'இரட்டிப்பு லாபம்' என்ற ஆசை வார்த்தையில் ஆயிரக்கணக்கான மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த மோசடியில் ஏஜெண்டுகள் மூலம் மக்களை அணுகி, FQL EXCHANGE, fqlin.com, V.G INVESTMENT போன்ற ஆப்களை பதிவிறக்கம் செய்ய வைத்து, பின்னர் ஆப் முழுவதுமாக முடக்கப்பட்டதால், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர் 

மேலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏஜெண்டுகள், மக்களை அணுகி ரூபாய் .50,000 பணத்தை பெற்றுக்கொண்டு, அவர்களின் மொபைலில் FQL EXCHANGE அல்லது fqlin.com அல்லது V.G INVESTMENT என்ற ஆப்களை பதிவிறக்கம் செய்தனர். பின்னர், அந்த ஆப்பில் விபரங்களை பகிர்ந்ததும், செலுத்திய 50,000 ரூபாய்க்கு 500 Bitcoin மற்றும் போனஸாக 20 காயின் சேர்த்து 520 காயினாக ஏஜென்ட் மூலம் செலுத்தப்பட்டது.

 குறிப்பிட்ட நாட்களுக்கு புதிதாக சேர்ந்தவர்களுக்கு விளையாட்டு போன்ற சிக்னல்கள் அனுப்பப்பட்டன. அவற்றை OK செய்தால் 10 முதல் 20 காயின் வழங்கப்படும் என்றும், 45 நாட்களுக்கு பிறகு, முதலீடு செய்த ரூபாய் .50,000 பணத்தை இரட்டிப்பாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஏஜெண்டுகள் கூறியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் லட்சங்கள் முதல் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்துள்ளனர் என்ற ஆசை வார்த்தையை கூறி, மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றியுள்ளனர்.

தற்போது இந்த ஆப் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அதில் முதலீடு செய்த ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் செய்வதறியாது பரிதவித்து வருகின்றனர். தங்களது கடும் உழைப்பில் சேர்த்த பணத்தை இழந்து, கடனில் மூழ்கியுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதனிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு ஆய்வாளர் மற்றும் மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி, ஏஜெண்ட் ஒருவரை கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பொதுமக்களில் சிலர், இந்த மோசடி குறித்தும், ஏஜண்டுகள் மீது நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டுத்தருமாறு கூறி, மேலூர் அரசு கலைக் கல்லூரி முன்பாக ஒன்று கூடி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் செல்ல முயன்றனர். அங்கு வந்த மேலூர் காவல்துறையினர், மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியதுடன், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்

FQL EXCHANGE, fqlin.com, V.G INVESTMENT போன்ற ஆப்களில் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளிக்கலாம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.FQL மோசடி (FQL Exchange / VG Investment) என்பது அதிக லாபம் தருவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றும் ஒரு ஆன்லைன் போலி முதலீட்டு (Trading App) மோசடி ஆகும். தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை இந்த மோசடி குறித்து மக்களுக்குத் தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். இந்த மோசடி எவ்வாறு நடக்கிறது  இதிலிருந்து தப்பிப்பது எப்படி FQL மோசடி செயலியில் சேர முதலில் ரூபாய் 54,000 முதல் ரூபாய் 1,08,000 வரை பணம் கட்டச் சொல்கிறார்கள். மேலும், மற்றவர்களைச் சேர்த்தால் கூடுதல் கமிஷன் தருவதாகக் கூறி, இதனை ஒரு 'எம்.எல்.எம்' அல்லது பொன்சி  திட்டம் போல நடத்துகின்றனர். இந்த ஆப் மூலம் தினமும் 4 முதல் 5 முறை சிக்னல்கள் அனுப்பப்பட்டு, அதைப் பயன்படுத்தினால் டாலர்களில் அதிக லாபம் கிடைப்பது போல போலியான கணக்குத் திரையைக் காண்பிப்பார்கள். உங்களது கணக்கில் பெரும் லாபம் இருப்பது போல் காட்டும், ஆனால் அந்தப் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்ற (Withdraw) முயலும் போது, கணக்கை முடக்கிவிட்டு மேலும் வரி அல்லது கட்டணம் என்ற பெயரில் கூடுதல் பணம் கேட்பார்கள். எச்சரிக்கை எந்தவொரு உண்மையான பங்குச்சந்தை அல்லது கிரிப்டோ வர்த்தகத்திலும் "100 சதவீதம் உறுதியான லாபம்" தர முடியாது. அவ்வாறு யாராவது கூறினால் அது 100 சதவீதம் மோசடி. இந்த ஆப்ஸ்கள் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகாரப்பூர்வமாக இருக்காது. வாட்ஸ்அப் (WhatsApp) அல்லது டெலிகிராம் (Telegram) லிங்க்குகள் மூலமாக மட்டுமே பதிவிறக்கம் செய்யச் சொல்வார்கள், முதலீட்டுத் தொகையை நிறுவனத்தின் பெயரில் வாங்காமல், வெவ்வேறு நபர்களின் பெயர்களில் உள்ள சாதாரண வங்கிக் கணக்குகளுக்கு (Money Mule Accounts) அனுப்பச் சொல்வார்கள். அந்த மோசடி நபர்கள் மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் FQL (Future Quest Logistics / Future Net) என்ற பெயரில் ஆன்லைன் மொபைல் ஆப் மற்றும் கேம்கள் மூலம் பெரிய அளவில் பண மோசடி நடந்து வருகிறது. கிராமப்புற எளிய மக்களைக் குறிவைத்து, பகுதி நேர வேலை (Part-time job) அல்லது முதலீட்டிற்கு அதிக லாபம் தருவதாகக் கூறி இந்த மோசடி அரங்கேற்றப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) உத்தரவின் பேரில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏமாந்த நபர்கள் பணத்தாசை பிடித்தவர்கள் பணம் பறிபோனதால் தற்போது தவிக்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...