தவெகவின் செய்தித் தொடர்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமனம் இவர் 3 ஆண்டுகள் இந்தப் பதவி வகிப்பார்.
சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பதவி ஹிந்துக்கள் அல்லாத சிறுபான்மையினர் சமூகங்களின் பிரச்னைகளை நேரடியாக அரசுக்கு எடுத்துச் செல்லும் ஒரு பாலம்.சிறுபான்மையினர் சமூகங்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் அமைப்பே தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம். சிறுபான்மையினர் மீதான புகார்களை விசாரித்தல், அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளை உறுதி செய்தல், சமூக நீதி தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மேற்கொள்கிறது. பெலிக்ஸ் ஜெரால்டு தமிழ்நாட்டில் ஊடகவியலாளர் மற்றும் யூடியூபர் Red Pix 24x7 யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.
இவர் சன் டிவி, என்டிடிவி மற்றும் சத்யம் டிவி யில் பணியாற்றியுள்ளார்.'ரெட் பிக்சு' (RedPix) செய்திச் சேனலின் நிர்வாக ஆசிரியராகச் செயல்பட்டார். 2024 ஆம் ஆண்டில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சவுக்கு சங்கருடன் கைது செய்யப்பட்டார். 2025 ஆம் ஆண்டில் கரூரில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தவறான தகவல் பரப்பியதாகக் கூறி சென்னை சைபர் கிரேப்ட் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். தற்போது ஆகஸ்ட் 2026 ல் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக அரசு இவரை நியமித்தது






கருத்துகள்