அனைத்து மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்கான மாநில அளவில் அனைத்துக் கட்சிகளின் நாடளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது
கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் அழைப்பு விடுத்த நிலையில், “அதற்கு முன்பாக, கர்நாடக அரசு மேகேதாது அணை கட்ட முனைப்புக் காட்டும் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” என திமுக நிபந்தனை விதித்தது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடூ அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டில் திமுக இப்போதும் உறுதியாக இருக்கிறது. எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும், தடுமாற்றமும் இல்லை.
நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் அலுவல் அட்டவணையில் தொகுதி மறுவரையறை மசோதா அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்று திமுக-வுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எந்தக் கட்சிக்குமில்லை.
முறையற்ற தொகுதி மறுவரையறையால் இந்திய அளவில் ஏற்படவுள்ள ஆபத்தை முதன்முதலாக எடுத்துரைத்து, அதற்கெதிரான வலுவான கருத்தை உருவாக்கி, ஒருமித்த குரல்களை ஒன்றிணைத்ததே திமுக-வும், எங்கள் தலைவரும் தான் என்பதை நாடறியும்.
சென்னையில் இதற்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தைக் கூட்டி, பாதிப்புக்குள்ளாகும் அனைத்து மாநிலங்களையும் ஓரணியில் திரட்டி, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்து, இந்த விவகாரம் குறித்து தேசிய அளவில் விவாதிக்க வைத்தோம்.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை உச்சக்கட்டத்தில் இருந்தபோதே, “தேர்தல் கூட எங்களுக்குப் பிறகுதான்; தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்திருக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்ப்பது தான் எங்களது முதல் பணி” எனப் பிரகடனம் செய்தோம்,
எனவே, இவற்றின் அடிப்படையில், தற்போதைய அரசு ஆகஸ்ட் 8 ஆம் தேதி அன்று அழைப்பு விடுத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்திலும் திமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டு, எங்களது கருத்தைத் தெரிவிப்பதில் எங்களுக்குத் தயக்கம் இல்லை.
ஆனால், அதற்கு முன்பாக, கர்நாடக அரசு மேகேதாது அணை கட்ட முனைப்புக் காட்டும் விவகாரம் குறித்து விவாதிக்கவும், தமிழ்நாடு உள்ள கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற நிபந்தனையைத் தமிழ்நாடு அரசிடம் திமுக முன்வைக்கிறது.
புதுக் கூட்டாளியான காங்கிரஸின் மனம் புண்படும் என்பதால் மேகேதாது விவகாரத்தில் கள்ள மவுனம் காத்துக்கொண்டு, ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக மட்டும் கூட்டம் கூட்டுவதை ஏற்க முடியாது.
தொகுதி மறுவரையறையின் காரணமாக தமிழ்நாட்டு பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படக் கூடாது. பாதிக்கப்பட்டால் அதைத் தடுக்கும் முன்னணிப் படையாகக் திமுக இருக்கும். அதேநேரத்தில், இன்றைய சூழலில் காவிரி உரிமையை மீட்பதும், மேகேதாட்டு அணையைத் தடுப்பதும் மிக மிக முக்கியமானவை.
தமிழ்நாடு ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்த வேண்டிய அவசிய அவசரம் இப்போது எழுந்துள்ளது. இந்த நேரத்தில் தவெக அரசு ‘டேக் டைவர்ஷன்’ அரசியலை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தொகுதி மறுவரையறை பணிகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு நாடாளுமன்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “மத்திய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை பணிகள் மற்றும் அதனால் தமிழகத்துக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, மாநில எம்.பி.க்களின் கலந்தாய்வுக் கூட்டம் (சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது. இதற்கு முதல்வர் தலைமை வகிப்பார்.
இதற்கான அழைப்பிதழ் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தமிழ்நாடு சார்ந்த அனைத்து நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது” என கூறப்பட்டது.
தமிழ்நாடு
புதிய பாராளுமன்ற தொகுதிகள் (உத்தேசமாக)
1) திருத்தணி, 2) திருவள்ளூர், 3) சென்னை வடக்கு, 4) சென்னை கிழக்கு, 5) சென்னை மத்திய, 6) சென்னை தெற்கு, 7) சென்னை மேற்கு, 8) தாம்பரம், 9) செங்கல்பட்டு, 10) காஞ்சிபுரம், 11) வேலூர், 12) திருப்பத்தூர், 13) ராணிப்பேட்டை, 14) திருவண்ணாமலை,
15) வந்தவாசி அல்லது ஆரணி, 16) திண்டிவனம், 17) விழுப்புரம், 18) கள்ளக்குறிச்சி, 19) கடலூர் 20) சிதம்பரம், 21) ஓசூர், 22) கிருஷ்ணகிரி, 23) தர்மபுரி, 24) சேலம், 25) மேட்டூர், 26) ராசிபுரம், 27) நாமக்கல், 28) ஈரோடு, 29) கோபிசெட்டிபாளையம், 30) திருப்பூர், 31) தாராபுரம் அல்லது பழனி, 32) பொள்ளாச்சி, 33) கோயம்பத்தூர் கிழக்கு, 34) கோயம்பத்தூர் மேற்கு, 35) நீலகிரி 36) கரூர், 37) பெரம்பலூர், 38) அரியலூர் அல்லது லால்குடி, 39) திருச்சிராப்பள்ளி, 40) தஞ்சாவூர், 41) கும்பகோணம், 42) மயிலாடுதுறை, 43) நாகபட்டினம், 44) திருவாரூர், 45) புதுக்கோட்டை, 46) சிவகங்கை, 47) இராமநாதபுரம், 48) தூத்துக்குடி, 49) திருச்செந்தூர், 50) திருநெல்வேலி, 51) நாங்குநேரி அல்லது கன்னியாகுமரி, 52) கன்னியாகுமரி அல்லது நாகர்கோவில், 53) தென்காசி, 54) சிவகாசி, 55) விருதுநகர், 56) தேனி, 57) மதுரை கிழக்கு, 58) மதுரை மேற்கு, 59) திண்டுக்கல், ஆகும். தொகுதி மறுவரையறை - தமிழ்நாடு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் தொடங்கியது ஆனால் தவெக சார்ந்த கூட்டணிக் கட்சிகளான
காங்கிரஸ் கட்சி சார்பாக ப.சிதம்பரம் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட
காங்கிரஸ் கட்சியின் 12 எம்.பி-க்களும் பங்கேற்பு
விசிக - 2, இந்திய கம்யூனிஸ்ட் - 2, மார்க். கம்யூனிஸ்ட் - 2 எம்.பி.க்கள் பங்கேற்பு
தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க எம்பிக்கள் பங்கேற்கவில்லை..
தி.மு.க.வின் 30 எம்.பிக்கள் உட்பட 38 எம்.பிக்கள் பங்கேற்கவில்லை
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், தேமுதிக எல்.கே.சுதீஷ் பங்கேற்கவில்லை
டெல்லியில் இருப்பதால் பங்கேற்க இயலவில்லை -என தேமுதிக உறுப்பினர் எல்.கே.சுதீஷ் தகவல்
வெளிநாட்டில் இருப்பதால் கூட்டத்திற்கு வர முடியவில்லை -என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தகவல்
அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி நிர்மல் குமார், ராஜ்மோகன் பங்கேற்பு
மடைமாற்றும் அரசியலுக்கு துணை போக மாட்டோம் - என அ.தி.மு.க தரப்பில் தகவல்
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 57 எம்.பி.க்களில் 19 பேர் கூட்டத்தில் பங்கேற்பு
தாக்கல் செய்யப்படாத மசோதாவிற்கு எதற்கு கூட்டம்? - என அ.தி.மு.க தரப்பில் கேள்வி எழுப்பினர், தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, மநீம கட்சிகளின் மொத்தம் 37 எம்.பி.க்கள் புறக்கணித்துள்ளனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக, முஸ்லிம் லீக் கட்சிகளின் 19 எம்.பி.க்கள் மட்டும் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் மொத்தம் 57 எம்.பி.க்களில் 37 பேர் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர்காங்கிரஸ் கட்சியின் 12, விசிக 2, சிபிஐ2, சிபிஎம் 2, மதிமுக-1, முஸ்லிம் லீக்-1 எம்.பி.க்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் சுதா எம்.பி.கர்நாடகாவில் கட்சி நிகழ்ச்சியில் இருப்பதால் பங்கேற்க இயலவில்லை எனப் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் எடுத்த முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை








கருத்துகள்