நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் லஞ்சம் வாங்கிய காவல் சார்பு ஆய்வாளர் கைது.
தனிநபர் மீதான குற்ற வழக்கை அவருக்கு சாதகமாக முடித்து வைக்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நாமக்கல் மாவட்டம் நல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கெங்காதரன், (வயது 47), ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் அருகில் நல்லுார் பக்கம் நடந்தை சாலப்பாளையத்தைச் சேர்ந்த சௌமியாராஜ், வயது 30; விவசாயம் செய்து வருகிறார். அவரது நிலத்தின் பக்கத்து நிலத்துக்காரர் முத்துசாமியுடன், நில ஆக்கிரமிப்பு தொடர்பாக அடிதடி வாய்த் தகறாறு ஏற்பட்ட காரணமாக, நான்கு மாதங்களுக்கு முன், நல்லூர் காவல் நிலையத்தில் புகார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடர்பாக, சில தினங்களுக்கு முன், சௌமியாராஜை அழைத்த காவல்துறை சார்பு ஆய்வாளர் கெங்காதரன், வழக்கை சாதகமாக முடித்து வைக்க, 30,000 ரூபாய் லஞ்சமாகத் தரும்படி கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத சௌமியாராஜ், நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் செய்தார். அவர்கள் அறிவுரையின் படி, நேற்று ஆகஸ்ட் 11 ஆம் தேதி மாலை நல்லுார் காவல் நிலையத்தில் வைத்து, ரசு சாட்சி முன்னிலையில் பினாப்தலீன் இரசாயன பொடி தடவிய பணத்தை, சார்பு ஆய்வாளர் கெங்காதரனிடம் சவுமியாராஜ் கொடுத்துவிட்டு சைகை செய்த நிலையில் அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிபபு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காவல்துறை சார்பு ஆய்வாளர் கெங்காதரனை லஞ்சம் பெற்ற கையுடன் கைது செய்தனர். பின் விசாரணை நடத்தி, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்,

கருத்துகள்