மக்கள்தொகை கணக்கெடுப்புப் படிவத்திலேயே ஜாதிகளின் பட்டியலை சேர்க்க மாநில காங்கிரஸ் தலைவர் பிரதமரருக்கு கடிதம்
தெலங்கானா மாநில அரசு செய்ததுபோல்,
மக்கள்தொகை கணக்கெடுப்புப் படிவத்திலேயே ஜாதிகளின் பட்டியலை வழங்கி,
அதில் அவரவர் ஜாதியைத் தேர்ந்தெடுக்கச் சொன்ன போதுதான் துல்லியமான, உண்மையான தரவுகள் கிடைக்கும்.” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், விருதுநகர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ப.மாணிக்கம் தாகூர் பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் 9 ஆகஸ்ட் 2026 ஆம் தேதி அன்று, 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பிற்கான முறையியல் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியவர். அதில்
SECC 2011-ல் பின்பற்றப்பட்ட “திறந்த வகை” (Open Column) அணுகுமுறையின் காரணமாக, 1931ஆம் ஆண்டு பதிவான 4,147 ஜாதிப் பதிவுகளுடன் ஒப்பிடுகையில், 46 லட்சம் ஜாதிப் பதிவுகள் உருவாகின. இவ்வளவு துண்டு துண்டான தரவுகள் உருவானதால், அவற்றைப் பயன்படுத்த முடியாதவை என அரசே குறிப்பிட்டது.
இதை நாம் மீண்டும் செய்யக்கூடாது. 2027ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்: முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு, குறியீடுகளுடன் கூடிய ஜாதிப் பட்டியல்கள் எழுத்துப்பிழை மற்றும் உச்சரிப்பு வேறுபாடுகளால் ஏற்படும் பிழைகளைத் தவிர்க்க ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்துவமான குறியீடுகள்
அரிதாகப் பதிவாகும் ஜாதிப் பெயர்களுக்கு டிஜிட்டல் சரிபார்ப்பு ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும்.
தெலங்கானாவின் SEEEPC மாதிரியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சமூக நீதிக்கு அறிவியல் ரீதியாகத் துல்லியமான, நம்பகமான தரவுகள் அவசியம்.எனவே, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை பெயரளவுக்கு நடத்தாமல், அறிவியல் ரீதியாகவும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் மிகச் சிறப்பாக நடத்த வேண்டும். இதற்கு தெலுங்கானா அரசின் மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, பிரதமருக்கு எழுதியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.






கருத்துகள்