முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்சிராப்பள்ளி காவல்துறை பயிற்சிப் பள்ளி முதல்வர் கு.ராமச்சந்திரனுக்கு குடியரசுத் தலைவர் தகை சால் பதக்கம்

திருச்சிராப்பள்ளி காவல்துறை பயிற்சிப் பள்ளி முதல்வருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்!  கு.ராமச்சந்திரன், த/பெ.குழந்தைவேலு 03.03.2026 ஆம் தேதி முதல் திருச்சிராப்பள்ளி காவல்துறை பயிற்சிப் பள்ளியில் முதல்வராக பணியாற்றுகிறார்.

இதற்கு முன்னர் 13.07.2022 ஆம் தேதி முதல் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் சென்னை நகர சிறப்பு பிரிவு-1, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி அயல்பணியாக விருதுநகர் பிரிவில் பணியாற்றியுள்ளார். இதற்கு முன்னர் இதே பிரிவில் சிவகங்கை, புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் காவல் துணைக்கண்காணிப்பாளராகவும்,


மேலும் திருச்சிராப்பள்ளி மாநகரக் காவல்துறை நுண்ணறிவுப் பிரிவிலும், ஸ்ரீரங்கம் சரக சட்டம் & ஒழுங்கு பிரிவிலும் காவல்துறை உதவி ஆணையராகவும் பணியாற்றியுள்ளார், புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் கிராமத்தில் பிறந்து பள்ளி படிப்பை (வாராப்பூர் மற்றும் TELC புதுக்கோட்டை ) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், கல்லூரி படிப்பை புதுக்கோட்டை மன்னர் கல்லூரியிலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் (B.com & M.com) முடித்துள்ளார்.

01.03.1996 ஆம் தேதியன்று நேரடி சார்பு-ஆய்வாளராக பணியில் சேர்ந்து ஓராண்டு பயிற்சி மற்றும் 6 மாதம் செய்முறை பயிற்சியை முடித்த பின்னர் திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பல்வேறு காவல்நிலையங்களில் பணிபுரிந்துள்ளார். அப்போது மிகச்சிறப்பாக பணிபுரிந்து, கள்ளச்சாராயங்களை முற்றிலுமாக ஒழித்தும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் பணிபுரிந்தும், அப்போதைய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர்அதிகாரிகளின் வெகுமதியையும் பாராட்டையும் பெற்றுள்ளவர் 04.04.2005 ஆம் தேதி காவல்துறை ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்று, தேனி மாவட்டத்தில் பணிபுரிந்து, பின்னர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் ஜனவரி 2006 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை மதுரை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டையில் பணியாற்றியும், 18.01.2016 ஆம் தேதியன்று காவல்துறை துணைக்கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிவகங்கை, திருச்சிராப்பள்ளி மற்றும் விருதுநகரில் பணிபுரிந்தும், கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளராக விருதுநகரில் பணிபுரிந்தும்


மொத்தம் 47 அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மீது லஞ்சம் கேட்டுப் பெற்ற குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்து, அவர்களை பொறி வைத்து பிடித்துக் கைது செய்துள்ளார். மேலும் அந்த கால கட்டத்தில் லஞ்சம் வாங்குவதாக சந்தேகிக்கப்படும் சந்தேக அரசு அலுவலர்களின் மீது மொத்தம் 57 கண்காணிப்பு அறிக்கைகள் அனுப்பி நடவடிக்கைகள் எடுத்துள்ளவர் அரசு அலுவலகங்கள் 13 இடங்களில் திடீர் சோதனை நடத்தியுள்ளார். மேலும் 32 பொறி வைப்பு வழக்குகள் இவரது நேரடி மேற்பார்வையில் நடைபெற்றுள்ளது. திடீர் சோதனையின் போது முறையாகக் கணக்கு காண்பிக்கப்படாத பணம் மொத்தம் ரூபாய் .48,23,400/- ம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 104 பொறி வைப்பு வழக்குகள் மற்றும் 22 திடீர் சோதனை வழக்குகளில் எதிரிகளை கைது செய்வதற்கு மற்ற புலன் விசாரணை அதிகாரிகளுக்கு மிகவும் உதவியாக இருந்துள்ளார்.



மேற்கண்ட கால கட்டங்களில் இவர் லஞ்சப் புகார் தொடர்பாக அரசு அலுவலர்கள் மீது முறையே முதல்நிலை விசாரணை, விரிவான விசாரணை மற்றும் பல குற்ற வழக்குகளில் சிறப்பான விசாரணை மற்றும் புலன் விசாரணை மேற்கொண்டு மொத்தம் 123 வரைவு இறுதி அறிக்கைகள் தயார் செய்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞச ஒழிப்புத் துறை இயக்ககத்திற்கு அனுப்பியுள்ளார்.

இதற்கிடையில், இவர் பிப்ரவரி 2018 முதல் ஜூன் 2021 வரை திருச்சிராப்பள்ளி மாநகரக் காவல்துறை ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு சரகத்திலும், நுண்ணறிவுப் பிரிவிலும் காவல் உதவி ஆணையராக மிக சிறப்பான முறையில் பணிபுரிந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் முக்கிய பாதுகாப்பு அலுவல்களை திறமையாக கையாண்டு உயர்அதிகாரிகளின் நன்மதிப்பை பெற்றுள்ளார்.




இவர் 1996-1997ஆம் ஆண்டில் பயிற்சியின் போது தங்கப்பதக்கமும்  மேலும், இவரது மேற்கண்ட மெச்சத்தகுந்த பணிகளைப் பாராட்டி, இவருக்கு உயர் அதிகாரிகளால் 80 வெகுமதிகள், 40க்கும் மேற்பட்ட நற்பதிவுகள் வழங்கப்பட்டுள்ளது. இவரது மெச்சத்தகுந்த பணிகளை பாராட்டி 2009- ஆம் ஆண்டில்  தமிழ்நாடு முதல்வரின் அண்ணா பதக்கமும், 2012- ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஆளுநரின் விஜிலென்ஸ் தங்கப்பதக்கமும், 2018- ஆம் ஆண்டில் மெச்சத்தகுந்த பணிக்காக குடியரசுத் தலைவர் பதக்கமும், 2019- ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் அத்திவரதர் பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு முதல்வர் பதக்கமும், 2019- ஆம் ஆண்டில் மத்திய உள்துறை அமைச்சகத்தால் உட்கிரிஸ்ட் சேவா பதக்கமும் இவரது சிறப்பான பணிக்கு வழங்கப்பட்டு உயர் அதிகாரிகளின் நன்மதிப்பையும், பாராட்டுகளையும் மற்றும் வெகுமதிகளையும் பெற்றுள்ளார்.



இவரது செயல்பாடுகள் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் காவல் துறையின் நன்மதிப்பை உயர்த்தும் வகையில் மிகவும் மெச்சத்தகுந்ததாகவும் இருந்துள்ளது.

ஆகையால் கு.ராமச்சந்திரன், முதல்வர் மற்றும் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், காவல் பயிற்சி பள்ளி, திருச்சிராப்பள்ளி முன்னர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை, நகர சிறப்பு பிரிவு-1, சென்னை அயல் பணி விருதுநகர் அவர்களது பணிச் சேவைக்கு 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியக் குடியரசு தலைவரால் 2026 ஆம் ஆண்டிற்குரிய தகைசால் பணிக்கான குடியரசு தலைவர் காவல்துறை பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.குடியரசுத் தலைவர் காவல்துறை பதக்கம் President's Police Medal தகைசால் பணிக்கான பதக்கம் President's Medal for Distinguished Service - PSM மிகச்சிறந்த மற்றும் நீண்ட கால சாதனை சேவைக்காக வழங்கப்படுகிறதுஅதேபோவ தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் 20 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவ்விருதுகளில் குடியரசு தலைவரின் தகைசால் பணிக்கான பதக்கம் 3 காவல் அதிகாரிகளுக்கும், மெச்சத்தக்க பணிக்கான பதக்கம் 17 காவல் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான பதக்கம் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்பி கு.ராமச்சந்திரன், சென்னை தலைமையிடத்து க்யூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் எஸ்பி ஜி.விஜய் ஆனந்த், மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் 9-ம் அணி உதவி தளவாய் சி.குமார் ஆகிய 3 அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...