தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் தவெக வெற்றி பெற்ற பின்னர் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள் ஏற்கனவே நல்ல பொறுப்பு அக்கட்சியில் வகித்து வந்த நிலையில் அதிலிருந்து விலகி தவெகவில் இணைந்து வருவது அதிகரிக்கும் நிலை,
சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி பக்கத்தில் ஆகஸ்ட் 2, 2026 அன்று தமிழக வெற்றிக் கழகம் ஙார்பில் பச்சேரி சி. ஆர். சுந்தர்ராஜன் ஏற்பாட்டில் மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் மாநாடு போல நடைபெற்றது. சிவகங்கை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மதகுபட்டியில் கனிமம் மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மேடையில் உரையாற்றியபோது, மதியம் உணவாக பிரியாணி வழங்கும் இடத்தில் கூடிய மக்கள் கூட்டம் அலைமோதியது
சிவகங்கையில் முதலில் தவெக சார்பாக நடந்த பிரம்மாண்ட அரசியல் நகர்வு! தவெகவில் 10,000 பேரை இணைக்க ரூபாய் . 2 கோடி செலவில் பிரம்மாண்ட மேடை தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி பலத்தையும் உறுப்பினர் எண்ணிக்கையையும் தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் வகையில், பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு, விழாவுக்காக முன்னாள் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளராக இருந்த பச்சேரி சி. ஆர்.சுந்தர்ராஜன், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே சிவகங்கை தொகுதி திமுக கூட்டணியில் ஒதுக்கப்படாததால் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் விலகியிருந்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமைதி காத்தவர், தற்போது தனது ஆதரவாளர்கள் மற்றும் மாற்றுக்கட்சியினருடன் இணைந்து தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைய முடிவெடுத்துள்ளார்.
இதற்காகக் சுமார் 10,000 பேரை ஒரே நேரத்தில் தவெகவில் இணைக்கும் பிரம்மாண்ட மாநாடு போன்று இந்த விழாவை நடத்தினார்
முன்னதாக தேர்தல் முடிந்த பின் முதல்வர் தலைமையில் இணைய நினைத்து காத்திருந்த நிலையில் கடந்த கால ரசிகர் மன்றம் கட்சியாக மாறிய போது வழி நடத்தும் பொதுச்செயலாளர் மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தான் கடந்த கால அமைச்சர்கள் இணைந்த நிலையில், அவரது தேதி கூட்டணி கட்சி காங்கிரஸில் இருந்து இணைவது விமர்சனம் பெறலாம் என்பதால் மாவட்ட அமைச்சர் என்ற முறையில் இந்த விழா திட்டமிட்டு நடந்தது, கடந்த ஜூலை மாதம் 19-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்த விழா சில நிர்வாகக் காரணங்களால் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது தலைமை நிர்வாகிகள் ஒப்புதலுடன் புதிய தேதியில் விழாவை நடத்த இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன வருகின்றன.தென் தமிழ்நாட்டில் முன்னால் முதல்வர்கள் செல்வி.ஜெ. ஜெயலலிதா மற்றும் மு. கருணாநிதி ஆகிய பிரபலங்கள் இல்லாத நிலையில் அந்த இடத்தை தற்போது முதல்வர் சி. ஜோசப் விஜய் பிடித்துக்கொண்டார் எனலாம், தவெகவின் அலை அதிகரித்து வரும் சூழலில், சிவகங்கையில் ஒரே நாளில் 10,000 பேர் கட்சியில் இணையவுள்ளது பிற அரசியல் கட்சிகளின் கவனம் பெற்றது
சிவகங்கையில் முன்னாள் காங்கிரஸ் மாநிலச் செயலாளரும், முன்னால் மாநிலத் தலைவர் மற்றும் மத்திய இணை அமைச்சர் கே. வி. தங்கபாலு ஆதரவாளருமாக அறியப்பட்ட பச்சேரி சி.ஆர்.சுந்தர்ராஜன் காங்கிரஸ் கட்சியில் விலகி இணைந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளில் இருந்து நிர்வாகிகளை இணைத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் சமீபத்தில் தெரிவித்திருந்திருந்தார், காரணம் பலம் பொருந்திய நபர்கள் காங்கிரஸ் கட்சியில் வெளியேறுவது, மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை பாதிக்கும்,தவெக இணைப்பு விழா மூலம் சிவகங்கை பகுதியில் அந்த கட்சியினர் மத்தியில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது,














கருத்துகள்