முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கர்நாடகாவில் மிருக வேட்டையை காரணமாக்கி வனத்துறை நடந்திய மனித வேட்டை

கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டம் ஹானூர் தாலுகா சாக்யா காப்புக்காடு


வனப்பகுதியில் 15 ஆகஸ்ட் 2026  சுதந்திரதினத்தன்று மான் வேட்டையில்



ஈடுபட்டதாகக் கூறி கர்நாடக மாநில வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்து கர்நாடகா மாநிலத்தில் நீண்ட காலமாக வசிக்கும் ஜகன்னாததொட்டி அந்தோணிசாமி (வயது 50), மரியமங்கலம் ஜான்ரோஸ் பீட்டர் (வயது 42), லாசர்தொட்டி      குமார் (வயது 33) ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும்       லாசர்தொட்டி கிராமம்   மகிமைதாஸ் (வயது 48) துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மைசூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.  இறந்தவர்கள் அனுமதியின்றி துப்பாக்கி மற்றும் மான் இறைச்சியுடன் வனப்பகுதியில் சுற்றித் திரிந்ததாகவும், சுயமதப்புக்காகவே சுட்டதாகவும் கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இறந்தவர்களின் உறவினர்கள் கூறும் போது காணாமல் போன மாடுகளைத் தேடி அவர்கள் காட்டிற்குச் சென்றனர் என்றும், வேட்டையாடவில்லை என்றும் வனத்துறையின் குற்றச்சாட்டு பொய் எனவும் மறுத்துள்ளனர்.


இச்சம்பவத்திற்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர், வனத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் வேட்டையில் ஈடுபட்டதாகவும் அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் கர்நாடக மாநில வனத்துறை அமைச்சர் இராமலிங்கா ரெட்டி  தெரிவித்துள்ளார்.


அதில், வனத்துறை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்ததாகவும் கர்நாடக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்பாக மாஜிஸ்டிரேட் விசாரணைக்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.



  தமிழ்நாட்டில் தி.மு.க  பா.ம.க  உள்ளிட்ட கட்சிகள் இந்த வழக்கை சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபாய் 1 கோடி இழப்பீடும், அரசு வேலையும் வழங்க  தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லையோரத்தில் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் ஹானூர் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க கொள்ளேகால் - மாதேஸ்வரன்மலை சாலையில் கர்நாடக மாநில ஆயுதப்படை (KSRP) காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தின் ஹானூர் அருகே உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயக் காப்புக்காடு ஷாக்யா வனப்பகுதியில் ஒரு குழுவினர் சட்டவிரோதமாக நுழைந்து நாட்டுத் துப்பாக்கிகளுடன் மான் வேட்டையில் ஈடுபட்டதாக வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது. ரோந்துப் பணியில் இருந்த வனத்துறை அதிகாரிகள் அவர்களைப் பிடிக்க முயன்றபோது, வேட்டைக் கும்பல் துப்பாக்கியால் தாக்கியதாகவும், இதில் வனத்துறை ஊழியர் ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்காப்பிற்காக வனத்துறையினர் திருப்பிச் சுட்டதில் (என்கவுன்டர்) மூவர் உயிரிழந்ததாக கர்நாடக வனத்துறை அமைச்சர் இராமலிங்கா ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திலிருந்து மான் இறைச்சி மற்றும் நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கொல்லப்பட்டவர்கள் வேட்டைக்காரர்களில்லை, அவர்கள் தங்களது காணாமல் போன நாட்டு மாடுகளை காடுகளில் தேடி இரவு நேரத்தில் வனப்பகுதிக்குச் சென்ற அப்பாவியான விவசாயிகள் என அவர்களது குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் மறுத்துள்ளனர். வனத்துறையினர் எந்தவொரு முன்னெச்சரிக்கையும் இன்றி உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கொடூரமாகச் சுட்டுக்கொன்று விட்டு, அதை மறைக்க வேட்டையாடியதாகப் பொய் வழக்குப் போடுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். இறந்த அந்தோணிசாமியின் மனைவி லூர்து மேரி, சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு (FIR) பதிவு செய்யக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இது தற்போது கர்நாடக நிலை ஆனால் ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதி தொகுதி சேஷாசலம் வனப்பகுதியில், ஏப்ரல் 7-2015 ஆம் தேதி செம்மரங்களை வெட்டிக் கடத்த முயன்றதாக தமிழ்நாட்டின் வடமாவட்ட கூலித் தொழிலாளிகள் 20 பேரை ஆந்திரப் பிரதேச மாநில காவல்துறை மூலம் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  செய்தி சேகரிப்புக்காக ஆந்திரப் பிரதேசத்தின் சேஷாசலம் ஏரியாவுக்குப் போன கேமராமேன்கள் பலரின் லென்சுகள் உடைக்கப்பட்டது  அந்தச் சம்பவத்தைக் கண்டித்து பெரிய அளவில் எதிர் வினையாற்றினர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சம்பவ இடத்துக்கே நேரில்போய் எதிர்ப்பைப்பதிவு செய்திருந்தார். செத்தது மொத்தமும்  ஏழைபாழைகள். 


இப்போது கர்நாடகா வனத்துறையால் கர்நாடகத் தமிழர்கள் மூன்றுபேர் குண்டடிபட்டு செத்துப் போயிருக்கிறார்கள். வனஉயிரினங்களை வேட்டையாடிய குற்றத்துக்காக சுட்டோம், செத்தனர் என்று ஃபைலை மூடியுள்ளது கர்நாடக மாநில அரசு. அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தத் தவறியது, ,தமிழ்நாட்டில் இருந்து எதிர்க்குரல் எழுந்ததா என்றால் இல்லை.

கர்நாடகா அரசுமீது தங்களுக்கு எந்தவொரு கோபமும் எப்போதும் எந்த நிலையிலும் இல்லை, இல்லை எனும் மனநிலை இது. 

என்ன குற்றம், குற்றத்தின் உண்மைத் தன்மை என்ன, வழக்கு, விசாரணை தண்டனை என்ற எதுவுமே இல்லையா? இதற்கு முன் கர்நாடக மாநில வனத்துறையால் இப்படி யாராவது சுடப்பட்டு செத்துப் போயிருக்கிறார்களா? ஏன் இப்படியான கேள்வி வருகிறது என்றால், ஆந்திரப்பிரதேசத்தின் சேஷாசல வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தான், செம்மரக் கடத்தல் தடுப்பு நடவடிக்கையாக ஆந்திரப்பரதேச காவல்துறை நடத்திய முதல் என் கவுன்ட்டர். இதுவரை ஆந்திரப் பிரதேச காவல்துறை குண்டுகளில் ஆந்திரக்காரர்கள் ஒருவர் கூட செத்ததில்லை. இப்போது கர்நாடகா மாநில வனத்துறை  இப்படி இறங்கியிருக்கிறது. வனத்துறைக்கே சட்டம் வழங்கிய எவ்வளவு ஃபவர் என்றால் கர்நாடகா அரசுக்கு இன்னும் எவ்வளவு ஃபவர் இருக்கும் என்பது தான் மக்கள் எழுவினா? எதற்கானதறகோ எச்சரிக்கையா இந்த துப்பாக்கி சூடு? ன்பதே நமக்குப் புரியவில்லை. இந்த நிலையில்.வனத்துறை அலுவலகங்களுக்கு தீ வைப்பு நடந்ததாகத் தகவல் துப்பாக்கிச் சூடு தகவலை அறிந்த இறந்தவர்களின் குடும்பத்தினரும், கிராம மக்களும் அதிர்ச்சியடைந்து தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோபமடைந்த சில மக்கள் ஷக்யா மற்றும் தோமையார்பாளையத்தில் உள்ள வனத்துறை அலுவலகங்களுக்குள் புகுந்து, அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்துச் சூறையாடினர்.போராட்டத்தின் ஒரு பகுதியாக, அங்குள்ள வனத்துறை அலுவலகத்திற்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். இதனால் வனத்துறை சொத்துக்கள் பெருமளவில் சேதமடைந்தன. சட்டம் அடிப்படையில் நீதி விசாரணை மூலம் தான் தீர்வு வரவேண்டும், மரத்திற்காகவும், மிருகங்களுக்காகவும் மனித உயிரை எடுக்க அதிகாரம் சட்டத்தின் வழி இவர்களுக்கு உண்டா எனபதே தற்போதய எழுவினா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...