மேற்கு வங்காள மாநில சட்டமன்ற முன்னாள் துணை சபாநாயகரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஆஷிஷ் பானர்ஜி, பிர்பூம் மாவட்டத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் காலமானார். நேற்று ஆகஸ்ட் 16, 2026 ஆம் தேதி அன்று அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இது தற்கொலை என சந்தேகிக்கப்படுகிறது. பிர்பூம் மாவட்டத்தின் ராம்பூர்ஹாத் தொகுதியில் இருந்து 5 முறை தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மம்தா பானர்ஜி அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை, விவசாயத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 2026 தற்போது நடந்த மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பா.ஜ.க வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இந்த நிலையில் அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், "அரசியலுக்கு வந்தது ஒரு தவறு" என்றும், தன் வாழ்நாளில் எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.



கருத்துகள்