முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தஞ்சாவூர் ஒரு சட்டவிரோதப் போராட்டமும் மூன்று குற்றங்களும்.- உண்மை அலசல்

தஞ்சாவூர் மாநகராட்சிச் சாலையில்


அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விசிக வின் ஃப்ளக்ஸ் பேனர்கள், நீதிமன்றம் வழங்கிய உத்தரவுப்படி மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. தமிழ்நாடு அரசின் கூட்டணிக் கட்சியாக ஆட்சியில் பங்கெடுத்துள்ள விசிகவினர், அவர்கள் ஆட்சிக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம் செயகின்றனர், இதுவே முரணாகும், எங்கள் கட்சியின் பேனரைக் கிழித்துவிட்டார்கள் என விசிகவினர் சாலைமறியல் செய்கிறார்கள். அதற்கு எப்போதுமே காவல்துறை அனுமதி கொடுக்க மாட்டார்கள், எனவே அனுமதி இல்லாமல் நடந்த அந்த மறியலைக் கலைக்கவே காவல்துறையினர் அங்கு வருகின்றனர், ஒரு இளைஞன்,சாலை மறியல் கூட்டத்தை விலக்கிக்கொண்டு வெளியேற பைக்கில் இருந்தபடியே முன்னேற  என்ன அவசரவேலையோ !  அல்லது மாற்று வழி இல்லையோ தெரியவில்லை!  அவன்  விளார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (வயது 26) மற்றும் திருக்கனூர்பட்டியைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 27)  மறியலுக்கு ஆதரவு தரப்பு, அந்த இளைஞனோடு ஏதோ வம்பாகப் பேச, பதிலுக்கு இளைஞனும் பேச,




மையமாக நுழைந்த  காவலர்களும் ஏதோ பேச. அந்த ஏதோ அது ஏதோ என்ற ஹம்மிங்கின் பின்னணி தான் எப்போதுமே F.I.R. ன் நேரமும் அங்கு மறைந்திருக்கும்.

அதன்பிறகு ஒரு  கூட்டத்தைக் களைக்க வந்த காவல்துறை எஸ்.எஸ்.ஐ யான அப்துல் ரஹீம் முன் அப்போது கையை நீட்டியும் குரலை உயர்த்தியும் பேசுகிறார், அந்த இளைஞர். பொது வெளியில் உடுப்பில் உள்ள காவலருக்கு கொஞ்சம் சறுக்கல் போல தெரிந்தாலும் எதிர்வினை அங்கே உண்டாகி விடும். அது நடந்தது. மன்னர் காலம் தொட்டு மக்கள் ஆட்சி வரை இதை நிலைதான், 

அந்த இளைஞனின் கன்னத்தில் ஓங்கி 

 ஒரு அறை விடுகிறார், காவல் அலுவலர் அவரிடம் வாங்கியதை அதே வேகத்தில் திருப்பிக் கொடுக்கிறான் அந்த இளைஞன். 

பின்னர் அங்கிருந்த மொத்தக் காவலரும் கும்பலாய் அந்த இளைஞனை அமுக்கிப் பிடித்துப் பிதுக்கி திமிறியவனை வாகனத்தில் திணிக்கிறார்கள்.

 நடந்தது இதுதான். இதில் யார் சரி, இதில் யார் தவறு என்பதை அவரவர் ஒரு கோணத்தில் பார்த்ததை விட நீதிமன்றத்தின் பார்வையில் தான் பார்க்க வேண்டும்,                                                         இந்த நிலையில்  17.08.2026 ஆம் தேதியில்  தஞ்சாவூர்மாவட்டக்   காவல்துறை அளித்த  மறுப்புச் செய்தியில் உள்ளபடி

'சாலை மறியலின் போது காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராறு குறித்த உண்மை நிலை  இன்று 17 8 2026 காலை 12 மணி அளவில் வி சி கட்சியை சேர்ந்த சுமார் 40 பேர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவ்வழியில் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. அப்போது, ஆகாஷ் (வயது 26) என்பவர் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்தபோது, தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார். இதனால், அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


வாக்குவாதம் மேலும் முற்றி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்புப் பணியில் இருந்த SSI 928 ரஹீம் அவர்கள் தலையிட்டு, ஆகாஷை அமைதிப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அப்போது, ஆகாஷ் போலீசாரை நோக்கி தொடர்ச்சியாக ஒருமையில் மரியாதையற்ற மற்றும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து வாக்குவாதத்தில் அந்த நபர் ஈடுபட்டதாலும் நிலைமை மேலும் மோசம் அடையாமல் கட்டுக்குள் கொண்டு வரவும் குறைந்தபட்ச பல பிரயோகத்தை SSI ரஹீம் பயன்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த நபர் உடனடியாக SSI ரஹீமை கன்னத்தில் அறைந்துள்ளார். உடனடியாக போலீசார் தலையிட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் அந்த நபரின் செயல் மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை  உருவாக்காமல் தடுக்கும் நோக்கத்திலேயே குறைந்தபட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும், ஆகாஷ் மீது ஏற்கனவே தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவரை தாக்கியது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வருகிறது. மேலும், சில மாதங்களுக்கு முன்பு அவர் பணிபுரியும் இடத்தில் தனது மேற்பார்வையாளரிடம் தகாத மற்றும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அவருடைய Supervisor மூலம் புகார் அளிக்கப்பட்டு, பின்னர் இருதரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது.

போலீசார் ஆகாஷை தேவையின்றி தாக்கியதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு மாறானது. அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மேலும் முற்றி சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மாறாமல் தடுப்பதே போலீசாரின் முதன்மையான நோக்கமாக இருந்தது. சம்பவத்தின் போது போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.                               இந்தச் சம்பவத்துக்கு பத்திரிகையாளர்கள் அல்லாத சமூக வலைத்தளங்களில் எழுதும் நபர்கள் சொந்தக்கதை அல்லது திரைக்கதையை முடிவு செய்கிறார்கள். அந்த பையன் முனைவர் ம. நடராஜன் ஊரான தஞ்சாவூர் விளார் பையன், 

நமக்கு ஒரு கேள்வியும் கோணமும் இதில் இருக்கிறது. யாரைக் கண்டித்து அல்லது எதிர்த்து விசிகவினரின் இந்த சாலைமறியலை நடத்தினர், அல்லது நடந்தது? நடப்பது என்னவே தவெக ஆட்சி, அந்தக் கூட்டணி- அமைச்சரவையில் விசிக இருக்கிறது. சொந்த ஆட்சியைக் கண்டித்தா இந்த மறியல்?  அந்தப் பையனின் ஆவேசம் ஒரு கேமரா வெளிச்சத்தில் நடந்த தாக்குதல் என்பதால் சிதைத்துத் துப்ப அவன் பாதிக்க அதில் வாய்ப்பில்லை, அதை இனி நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும் ஆனால் வழக்கால் அலையவிட்டு விடுவார்கள். செல்வாக்கும் பணமும் இருந்தால் மட்டுமே வழக்கை சுமூகமாக முடிக்க முடியும். ரிமாண்ட் செய்துவிட்டால், ஜாமீனில் வந்து பின் குற்றப்பத்திரிக்கை தாக்கலாகி கண்டிப்பா ஒரு நாலு வருடம் அலைய விட்டுவிடுவார்கள்..

அடிச்சா உடல் வலிமையால் திருப்பி அடிக்கவேண்டும் என்ற எண்ணத்தை கட்டுபடுத்தும் மனவலிமையே நம்மைத் தற்காக்கும். 1990 க்குப் பின் பிறந்த பிள்ளைகளில் 90 சதவீதம் பெற்றோர்களால் புத்தி சொல்லி கடடுப்பாடுகளுடன் பொது வெளியில் நடக்கும் பிள்ளைகள் இல்லை,இனி வரும் காலங்களில்,  இளைஞர்கள் பலத்தை விட புத்தியால் வெல்வதே சரியாக இருக்கும்.

வள்ளுவர் வாக்கின் படி   "தீயவை தீயபயத்தால் தீயவை தீங்கினும் அஞ்சப்படும்..." குறல் 202, கூறுகிறபடி 

தீயது செய்தோரை பொறுத்திருந்து வஞ்சம் தீர்ப்பதே தீரனுக்கு அழகு ஆனால் வீரன் விவேகத்தடன் கடந்து செல்லுதலே வழக்கு இல்லாமல் வாழ்க்கையை வளமாக்கும்.  தற்போது SSI- சிறப்பு உதவி ஆய்வாளர் அப்துல் ரஹீம் கன்னத்தில் அறைந்த ஆகாஷ் என்ற அந்த இளைஞர் கைது.அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு எனத் தகவல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...