குஜ்லியம்பாறை தாசில்தார் உத்தரவும், கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவும், கம்யூனிஸட்கள் எதிர்ப்பால் வாபஸானது
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா வருவாய் வட்டாட்சியராகப் பணிபுரிந்த
அய்யாசாமி அனுப்பிய சுற்றறிக்கையில், ”திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள நபர்களின் பெயர்; முகவரி ஆகியவற்றை சேகரித்து வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியரிடம் 18.08.2026 ஆம் தேதி மாலைக்குள் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து கிராம உதவியாளர்களும் வருவாய் ஆய்வாளர்களுக்கு உதவிட இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது, அறிக்கை அளிக்கத் தவறும் கிராம உதவியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என உத்தரவிட்டிருந்தார்.இந்தப் பகிரங்க சுற்றறிக்கையானது, கோட்டாநத்தம், பாளையம், கோவிலூர் வருவாய் ஆய்வாளர்கள்; தலைமையிடத்து துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர்; பழனி வருவாய் கோட்டாட்சியர்; திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வருவாய் வட்டாட்சியராகப் பணிபுரிந்த அய்யாசாமி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர் விவரங்களைச் சேகரிக்கக் கோரி பிறப்பித்த சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 18, 2026 அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குஜிலியம்பாறை வட்டத்திலுள்ள கிராமங்களில் அரசியல் கட்சிகளின் விவரங்களை அரசு அதிகாரி சேகரிக்க உத்தரவிட்டதற்கு அக் கட்சிகளின் சார்பாக கண்டனங்கள் எழுந்தன.அதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு வட்டாட்சியர் அய்யாசாமியை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டதுடன், விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.இந்தச் சுற்றறிக்கை தின்டுக்கல் மாவட்ட ஆட்சியர், பழனி வருவாய் கோட்டாட்சியருக்கும் தகவலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இதற்கிடையே இந்த விவகாரத்துக்கு மார்க்ஸிஸட் கம்யூனிஸ்ட் கடசி சார்ந்த திண்டுக்கல் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், சச்சிதானந்தம், மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர். கைரேகை சட்டம் அமலில் இருந்த காலத்தில் கூட அரசியல் இயக்கங்கள் தடை செய்யப்பட்ட காலத்தில் கூட இதுபோன்ற சுற்றறிக்கையை வட்டாட்சியர்கள் பிறப்பித்ததில்லை.
ஒரு தேசிய அரசியல் கட்சியின் விவரங்களைச் சேகரிக்க பகிரங்க சுற்றறிக்கை அனுப்பும் வானளாவிய அதிகாரம் குஜிலியம்பாறை வட்டாட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளதா அல்லது அதற்கு காரணம் யார் என கேள்வி எழுப்பப்பட்டது.தற்போது சுற்றறிக்கை வெளியிட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியரின் சுற்றறிக்கையை திரும்ப பெறப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் சென்னை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தில் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமைக்கு அய்யாசாமி வட்டாட்சியர் (பயிற்சி) பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த பிரச்சனையில் உடனடி தலையீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.அதே போல தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் போராட்டம் குறித்து சுற்றறிக்கை பின் வாபஸ் பெறப்பட்டது, அதில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அரசியல் போராட்டங்களில்
கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பிற அரசியல் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்க கல்வித் துறை, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது. தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநரகம் வெளியிட்ட சுற்றறிக்கையைத் தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்துள்ளது. சுற்றறிக்கையின் பின்னணி மற்றும் ரத்து விவரங்கள் ஆகஸ்ட் 17 சுற்றறிக்கை: இடதுசாரிகள் மற்றும் சி.ஜே.பி (CJP) அமைப்புகளின் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க பள்ளிக்கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
மாணவர்களின் உரிமைக்கு எதிரானது என்றும் ஜனநாயக முறைக்கு முரணானது என்றும் அரசியல் தலைவர்களும் மாணவர் அமைப்புகளும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, கல்லூரி கல்வி இணை இயக்குநர் பி.சிந்தியா செல்வி ஆகஸ்ட் 17 அன்று வெளியிடப்பட்ட அந்த முந்தைய உத்தரவு முழுமையாகப் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார்.












கருத்துகள்