முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் உரை

தமிழ்நாடு முதலமைச்சர் C. ஜோசப் விஜய், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் உரிமைகளைப் பேசியவர் ஆற்றிய உரையில்


  " தென் மாநிலங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 30 சதவீதத்திற்க்கும் அதிகமாகப் பங்களிக்கின்றன. எனவே, அவற்றுக்கு முன்னுரிமைச் சலுகை தேவையில்லை; மாறாக நிதி தன்னாட்சியை மதிக்கும் சமமான மற்றும் நியாயமான பகிர்வை மட்டுமே மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறோம், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, சிறந்த நிதி ஒழுக்கத்துடன் செயல்படும் மாநிலங்கள், வரவிருக்கும் நிதிக்குழுப் பகிர்வுகளில் பாதிக்கப்படக் கூடாது என வலியுறுத்தினார்.



தொகுதி மறுவரையறை மக்கள் தொகையைக் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தென் மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது. நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் எம்பிக்களின் எண்ணிக்கை குறையாத வண்ணம் மத்திய அரசு சட்டப்பூர்வமான உத்தரவாதத்தை வழங்க வேண்டும், நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள் . தமிழகத்தின் நிரூபிக்கப்பட்ட கல்வி முறையின்படி, MBBS, BDS மற்றும் ஆயுஷ் படிப்புகளுக்கான மாநில ஒதுக்கீட்டு இடங்களை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே நிரப்ப மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். 



காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவுகளையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் கர்நாடகா உரியக் காலத்தில் முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகளின்படி பாதுகாப்பு வழிமுறைகள் அமைய வேண்டும்.  மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், கீழ்மடை மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாகப் பேசினார். தென் மாநிலங்கள் அனைத்தும் இணைந்து ஒரே பொருளாதாரப் பிராந்தியமாகச் செயல்பட்டு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும். பெங்களூரு மெட்ரோ பாதையை ஓசூர் வரை நீட்டிப்பது போன்ற மாநில எல்லை கடந்த கூட்டு உள்கட்டமைப்புத் திட்டங்களைக் குறிப்பிட்டார்,  கடல்சார் பொருளாதாரத்தை பிராந்திய வளர்ச்சியின் மையப் புள்ளியாக மாற்ற வேண்டும் என உரைத்தார். 


இளைஞர்களின் எதிர்காலம்: இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவதைத் தடுக்க தென் மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.உளவுத்துறை ஒருங்கிணைப்பு: உள்நாட்டுப் பாதுகாப்பைப் பலப்படுத்த தென் மாநிலங்களின் உளவுத்துறைத் தலைவர்கள் தங்களுக்குள் நிகழ்நேரத் தகவல்களைப்  பகிர்ந்துகொண்டு செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்,  தென் மாநிலங்களின் தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, பாண்டிச்சேரி யூனியன் பிரதேச முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்கவில்லை.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரளா மாநில முதல்வர் சதீஷன், கர்நாடகா மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் பங்கேற்றனர்.தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்குப் பதில் தெலுங்கானா மாநிலத் துணை முதல்வர் மல்லு விக்ரமார்கா பங்கேற்றார்.


பாண்டிச்சேரி யூனியன் பிரதேச முதல்வர் ரங்கசாமி புறக்கணித்துள்ளார் இக்கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனை, நாடாமன்றத் தொகுதி மறுவரையறை பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.    2026 பாண்டிச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு வெற்றி பெற்று முதலமைச்சராக ரங்கசாமி


பதவியேற்றவருடன் அமைச்சர்களும் பதவியேற்ற நிலையில் 85 நாட்கள் கடந்த நிலையில் அவர்களுக்கு இதுவரை எந்தத் துறையும் ஒதுக்கப்படாமல் இருந்ததால் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை  என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டும் சூழல் . தொகுதி வளர்ச்சிப் பணிகள், துறை சார்ந்த நிர்வாக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி எதிர்கட்சிகள் அரசை கடுமையாக விமர்சித்தன.மேலும் அமைச்சர்களுக்கு உடனடியாக இலாகாக்கள் ஒதுக்கப்பட வேண்டும் என பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதனை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் ரங்கசாமி துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை நேரில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இந்தச் சந்திப்பில் அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு, 85 நாட்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. பின்னர் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு மீண்டும் உள்துறை ஒதுக்கப்பட்டது. அதே நேரத்தில் சபாநாயகர் விவகாரம் தொடர்பாக பாஜகவுக்கும் ரங்கசாமிக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணித்தாகத் தெரிகிறது 31-வது தென்மாநில முதல்வர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் இரண்டு நாட்கள் நடக்கும் நிகழ்வுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகிக்கிறார். இதில் தமிழ்நாடு , கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரம் மற்றும் புதுச்சேரி முதல்வர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

 புதுச்சேரியை பொறுத்தவரை மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசம்.தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்ற நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாநிலங்களுக்கு இடையேயான குழுச் செயலகம் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கூட்டத்தைத் தமிழ்நாடு மாநில அரசு நடத்துகிறது. நாட்டின் தென்பகுதியில் உள்ள உறுப்பு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் / நிர்வாகிகள், ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசங்களிலிருந்தும் தலா இரண்டு அமைச்சர்கள், மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள், பிற உயர் அதிகாரிகள், மத்திய அரசின் உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இந்த மண்டலக் குழுவில் அந்தந்த மாநிலத் தலைமைச் செயலாளர்கள் நிலையில் தலா ஒரு நிலைக்குழுவையும் அமைத்துள்ளது. மாநில அரசுகளால் முன்வைக்கப்படும் விவகாரங்கள், மண்டலக் குழுவால் அமைக்கப்பட்டுள்ள நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, ஆலோசிக்கப்படுகின்றன. எஞ்சிய விவகாரங்கள் மண்டலக் குழுவின் கூட்டத்தில் பரிசீலனைக்காக முன் வைக்கப்படுகின்றன. நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், “பாரதக் குழு” என்ற தொலைநோக்குப் பார்வையுடன், மண்டலக் குழுவில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகின்றன. வலுவான மாநிலங்களால் மட்டுமே உறுதியான வலிமையான நாட்டைக் கட்டமைக்க முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இந்த மண்டலக் குழு செயல்பட்டு வருகின்றன.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் அல்லது மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிப்பதற்கும், விவாதிப்பதற்கும், மண்டலக் குழுக்கள் ஒரு கட்டமைக்கப்பட்ட வழிமுறையை வழங்குகின்றன. இதன் மூலம் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு தளமாகவும் இவை செயல்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காண்பதற்கான ஒரு வலுவான தளமாக இத்தகைய மண்டலக் குழுக் கூட்டங்கள் அமைந்துள்ளன.இதில் கலந்து கொண்டு கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-

தண்ணீர் நம்மை ஒன்று சேர்க்க வேண்டும்; பிரித்து விடக்கூடாது. நதி நீர் பங்கீடு என்ற நிலையில் இருந்து நதிநீர் ஒத்துழைப்பு என்ற நிலைக்கு நகர வேண்டிய நேரம் இது. ஒத்துழைப்பு அடிப்படையில் நதிநீர் பிரச்சினைகளை அணுகவேண்டும். ஆறுகளுக்கு அரசியல் எல்லை தெரியாது. கர்நாடகா எப்போதும் பிற மாநிலங்களின் உரிமைகளை மதித்து செயல்படுகிறது.

கர்நாடகாவின் சட்டப்பூர்வ நீர்ப்பங்கை மதிக்க வேண்டும். நாங்கள் புகார் கூற வரவில்லை; இந்தியாவின் வளர்ச்சியில் பங்குதாரர்களாக வந்துள்ளோம். எங்களுக்குத் தேவை நியாயம் மட்டுமே. சமத்துவம், வெளிப்படைத் தன்மை, ஒத்துழைப்பு கர்நாடகாவின் கொள்கைகள். மேகதாது அணை கர்நாடகாவிற்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் முக்கிய திட்டம். உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள். ஒவ்வொரு துளிநீரும் தமிழ்நாடு, புதுச்சேரி விவசாயிகளுக்கும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...