முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீ த லீடர்ஸ் இயக்கத் தன்னார்வலர்களின் உழவாரப்பணிகள்

வீ த லீடர்ஸ் இயக்கம் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையால் தொடங்கப்பட்ட தமிழ்நாட்டில் 




அடித்தள மக்கள் தொடர்பு மற்றும் சமூக இயக்கம். இதன் பணி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலை மற்றும் கடற்கரை தூய்மைப் பணிகளை பல பகுதிகளில் நடத்துவது. எனினும், காரைக்குடியில் இந்த அமைப்பு சார்பில் தூய்மைப் பணி சிறப்பாக நடந்தது, திருச்செந்தூர், கடலூர், கடற்கரைப்பகுதி மதுரை வைகை ஆற்றுப் பகுதிகளிகளில் ஏற்கனவே தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இயக்கத்தின் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்தல்



மற்றும் குப்பைகளை உரிய இடத்தில் அகற்றுதல். இளைஞர்களைக் கொண்டு மரக்கன்றுகள் நடுதல் மற்றும் துப்புரவுப் பணிகள்.அடிமட்ட விழிப்புணர்வு மூலம் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் தூய்மை குறித்த உறுதிமொழிகள் மற்றும் பிரச்சாரங்களை காரைக்குடி மற்றும் சிவகங்கை நகரின் முக்கிய அடையாளங்களாக விளங்கும் அரண்மனை வாசல் போன்ற பொது இடங்கள், நீர்நிலைகளின் ஓரங்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பைகளை அகற்றும் பணிகளைத் தன்னார்வலர்கள் மேற்கொண்டனர்,






இந்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகம் நேரு யுவ கேந்திரா எனது பாரதம் சிவகங்கை, மற்றும் வீ தி லீடர்ஸ் 
 காரைக்குடி இணைந்து நடத்திய என் மண்  என் மக்கள் காரைக்குடி தூய்மை பணி. அய்யனார் கோவில் தண்ணீர் தொட்டி விநாயகர் கோவில் தெப்பக்குளம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் தூய்மைப் பனியை மேற் கொண்டனர்,






இது கடந்த காலங்களில் காலமான மூதாதையர்களுக்கு தர்ப்பணம் மற்றும் கிரிகை செய்யும் பகுதி இந்தக் குளத்தை சுற்றி முட்செடிகள் மற்றும் தீர்த்தத்திற்குள் பாசிப்படர்ந்து கிடந்தது. இதில் சில சமூக விரேதிகளின் தற்காலிக தங்குமிடமாக மாறி பொதுமக்கள் மற்றும் நடைப்பயிற்சி செய்த பலர் செல்ல அஞ்சிய நிலையில் இதனை நேற்று பசுமை காரைக்குடி , வீ த லீடர்ஸ் அமைப்பினர் அய்யனார்புரம் ஊரணி மற்றும் ஊரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கியிருந்த கழிவுகள், மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டு, மாநகராட்சி உதவியுடன் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.






மேலும், சிறுவர் பூங்கா எம்-Sand கல்தூசி மண் மூலம் சீரமைக்கப்பட்டு, ஊரணியைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. 

இந்த நிகழ்வில் ஆர்வத்துடனும் சமூக அக்கறையுடனும் கலந்து கொண்டு, தன்னார்வலர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது முள்செடி, சுற்றிலும் குப்பை பாசிகளை அகற்றி உழவாரப் பணி செய்து தீர்த்த குளத்தை புதுப்பித்தனர். இதில் குளத்தில் நீர் இருந்ததால் உட்ளே தண்ணீர் வற்றிய பின் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர், நிகழ்ச்சியில் வீ த லீடர்ஸ் அமைப்பை சேர்ந்த திருப்பத்தூர் ஆ.பி. சீ. அ. கலைக்கல்லூரி தாளாளர் என். ரமேஷ்வரன், காரைக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சோழன் கே. பழனிசாமி, காரைக்குடி பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் முருகு சரவணன், கார்த்திகேயன் பாலசுப்பிரமணியன், விநாயகம், சிவா, கிருஷ்ணா எலக்ட்ரிகலஸ் உரிமையாளர் , இரவுசேரி காசிராஜா, மகளிர் நிர்வாகிகள் வி த லீடர்ஸ் அமைப்புத் தொண்டர்கள், மற்றும் இயந்திரங்கள் வாகனங்கள் உதவியுடன் சுத்தம் செய்யும் பணியில் கலந்து கொண்டனர், மாநகராட்சி செம்ய வேண்டிய பணியை சரிவரச் செய்யாத நிலையில் இதை இந்த அமைப்பு சார்பில் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது, அதேபோல் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகில் தங்கச்சிமடம் ஏகாந்த ராமர் கோயில் எதிரே ருணவிமோசன தீர்த்த குளம் பழமையானது ஆதி காலத்திலிருந்தே பக்தர்கள் தீர்த்தத்தில் நீராடி ராமேஸ்வரம் கோயிலுக்குச் செல்வது வழக்கம். இதனை பசுமை ராமேஸ்வரம் அமைப்பினர் புதுப்பித்து பராமரித்து வந்த நிலையில்,


சமீப காலமாக தீர்த்த குளத்தை சுற்றி முட்செடிகள் மற்றும் தீர்த்தத்திற்குள் பாசிப்படர்ந்து கிடந்தது. இதனை நேற்று பசுமை ராமேஸ்வரம், வீ த லீடர்ஸ் அமைப்பினர் முள்செடி, பாசிகளை அகற்றி உழவாரப் பணி செய்து தீர்த்த குளத்தை புதுப்பித்தனர். இதில் வீ த லீடர்ஸ் அமைப்பை சேர்ந்த ராமேஸ்வரம் நகராட்சி கவுன்சிலர் சங்கர், ராமேஸ்வரம் கம்பன் கழக பொருளாளர் ராமு, பசுமை ராமேஸ்வரம் அமைப்பு நிர்வாகி சரஸ்வதியம்மா உட்பட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...