தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் யானைக்கு தடுப்பு அகழி அமைக்கும் பணியின் ஒப்பந்ததாரரிடம்
ரூபாய் 1 லட்சம் லஞ்சம் வாங்கிய சிவகிரி வனச்சரகர் கதிரவன் (வயது 51), ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பணம் பெற்ற கையுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகிரி மற்றும் புளியங்குடி மலைப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்க 8 கி.மீ. தொலைவிற்கு யானை தடுப்பு அகழி (Elephant Proof Trench) அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இப் பணிக்கான ஒப்பந்ததாரர் சென்னையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் எடுத்துச் செய்து வருகிறார். இதுவரை செய்யப்பட்ட ரூபாய் .18.45 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு தரவேண்டிய பில் தொகையில் கமிஷனாக ரூபாய் .3.69 லட்சம் தர வேண்டும் என வனச்சரகர் கதிரவன் வற்புறுத்தியுள்ளார். இதன் முதல் தவணையாக ரூபாய் . 1 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அவர் கட்டாயப்படுத்தியுள்ளார், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் சுரேஷ்குமார், இதுகுறித்து தென்காசி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் (DVAC) புகார் அளித்தார்.
அவர்கள் வழங்கிய அறிவுரைப்படி, பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய ரூபாய் . 1 லட்சத்தை சிவகிரியில் உள்ள கதிரவனின் வீட்டிற்குச் சென்று சுரேஷ்குமார் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான மறைந்திருந்து கண்காணித்த குழுவினர் கதிரவனை பணம் பெற்ற கையுடன் கைது செய்தனர்.
விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டார்.







கருத்துகள்