மாஞ்சோலை மற்றும் மேகமலை
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவு ‘தமிழ்நாட்டிற்கு ராணுவத்தை அனுப்புவோம். தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை!
என மாஞ்சோலை, மேகமலை அதை சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய மனு மற்றும் மாஞ்சோலையில் வசித்து வரும் மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யக்கோரி ஜான் கென்னடி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எனக் கேள்வி எழுப்பினர்.
தமிழ்நாடு அரசின் சமூக நீதி அமைச்சகம் தரப்பு வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வை நியமித்து அவர் ஆஜராகி, மேகமலை புலிகள் சரணாலய வனப்பகுதியில் 4600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், அங்கு பல ஏக்கர் நிலங்களில் இலவம்பஞ்சு மரம் பயிரிடப்பட்டுள்ளது.அந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவர்களில் சில குடும்பங்கள் பல தலைமுறையாக அந்தப் பகுதியிலேயே வசித்து வருபவர்கள், எனவே அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதன் பின்னர் அவர்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள்.
பழங்குடியினர் அல்லாமல் நூறாண்டுகளுக்கு மேலாக அங்கு ஆக்கிரமித்து வசித்து வருபவர்களுக்கு சில தளர்வுகள் தேவைப்படுகிறது அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இயங்கி வந்த சுற்றுலா விடுதிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன, ஆக்கிரமிப்பு உள்ள இடங்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான உச்ச நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது, எனவே அதற்காக மூன்று மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
அதற்கு நீதிபதிகள், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் உள்ள விடுதிகளை மூடினால் மட்டும் போதாது முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும். எந்த ஒரு ஆக்கிரமிப்பையும் வனப்பகுதியில் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர். அதைப்போல் இலவம்பஞ்சு மரம் பயிரிடப்பட்டுள்ள அந்த நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட வேண்டும் அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு இலவம்பஞ்சுத் தோட்டங்கள் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். ஏனெனில் இலவம் பஞ்சுத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக வேலையாட்களை குடி அமர்த்தும் நடவடிக்கையில் இருந்து தான் ஆக்கிரமிப்பு என்பது முதலில் தொடங்குகிறது. எனவே இந்த விஷயத்தில் எந்த ஒரு சலுகையும் காட்டக்கூடாது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி புலிகள் சரணாலயம் பகுதியிலிருக்கும் இந்தத் தோட்டங்கள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் இதில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது.
அதுபோல ரிசர்வ் வனப் பகுதிகளில் அதாவது காப்புக்காடு எந்தக் காரணம் கொண்டும் எவருக்கும் நிலத்துக்கான பட்டாவை வழங்கக் கூடாது. மேலும் ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், துணை ராணுவப்படையை அனுப்ப வேண்டியது வரும் என எச்சரித்தனர்.
அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பரமேஸ்வர், புலிகள் சரணாலயம் அமைந்துள்ள இந்த காட்டுப் பகுதிகளில் இன்னும் பல ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. பல ஒய்வு பெற்ற அதிகாரிகள் நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர். இது தொடர்பாக அந்த அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அளித்தும் எந்த ஒரு பதிலும் தருவதில்லை. ஆக்கிரமித்துள்ள நிலங்கள் தொடர்பாக ஒய்வு பெற்ற அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்ப வந்துள்ளன என சுட்டிக்காட்டினார்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள், மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். இலவம் பஞ்சு மரத் தோட்டங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும், ஏனெனில் ஆக்கிரமிப்புக்கான மிக முக்கிய காரணமானவர்களே அந்தத் தோட்ட உரிமையாளர்கள் தான் என திட்டவட்டமாக மீண்டும் தெரிவித்தனர். மேலும் நிலங்களை ஆக்கிரமித்துள்ள யாராக இருந்தாலும் அவர்களின் கட்டிடங்களுக்கான மின்சாரம், நீர் இணைப்பு உள்ளிட்டவத்தை துண்டியுங்கள் எனவும் அறிவுறுத்தினர். இதனை அடுத்து மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் அதை சுற்றிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை தொடர்பாக நிலை அறிக்கையை இரண்டு வார காலத்தில் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இந்த நிலையில் மேகமலை மக்களின் அடிப்படை உரிமைக்காக மாபெரும் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் சார்பாக 12. செப்டம்பர் 2026 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு : மதுரையில் மேகமலை மக்களின் உரிமைக்காக மதுரையில் அரசியல் கட்சிகள் சங்கமம்! என
மேகமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களின் அடிப்படை உரிமைகள், குடியிருப்பு உரிமை, வாழ்வாதார உரிமை, விவசாய உரிமை மற்றும் சுதந்திரமான வாழ்க்கை உரிமை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளாலும் நிர்வாக நடவடிக்கைகளாலும் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.
ஒருபுறம் வனப்பகுதி பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
மறுபுறம், பல ஆண்டுகளாக அப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களின் நில உரிமை, குடியிருப்பு பாதுகாப்பு, சாலை வசதி, கல்வி, மருத்துவம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் நீடித்து வருகின்றன.
தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த மக்களுக்கு பாதுகாப்பு எங்கே? மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது யாருடைய பொறுப்பு?
வனத்தை பாதுகாப்பதோடு, வனத்தை சார்ந்து வாழும் மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டாமா?
மேகமலை மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான சட்டபூர்வமான தீர்வு காண வேண்டும். மக்களை அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து அச்சுறுத்தும் எந்த நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மக்களையும் இயற்கையையும் பாதுகாப்போம்! இந்த முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் மேகமலை மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் எதிர்காலத்திற்கான, வாழ்வாதாரத்திற்கான, அடிப்படை உரிமைக்கான, நியாயத்திற்கான போராட்டம்! எனவே, அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து பொதுமக்களும் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு முழுமையான ஆதரவு அளித்து, பெருந்திரளாக கலந்து கொண்டு மேகமலை மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்குமாறு தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சிநிறுவனத் தலைவர் K.C. திருமாறன் ஜி அழைப்பு விடுத்துளளார். சட்டமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்த போதிலும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றும் வனத்துறை சட்டங்கள் தடுப்பது கடினம் மேலும் சுதந்திர இந்தியா வருவதற்கு முன் இந்த மாஞ்சோலை சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் ஜமீன் வரம்பில் உள்ள பகுதி சிலகாலம் முன் தேயிலை தோட்டக் கூலி விவசாயிகள் போராட்டம் மற்றும் துப்பாக்கிச் சூடு தாமிரபரணி ஆற்றை சிவப்பாக்கிய வரலாறு பழைய கதை, தற்போது ஆக்கிரமிப்பு மேகமலை மக்கள் அரசின் நல்ல தீர்வுக்காக காத்திருக்கும் நிலை,
ஸ்ரீ வில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் பிப்ரவரி 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உருவான தமிழ்நாட்டின் 5-வது மற்றும் இந்தியாவின் 51-வது புலிகள் காப்பகம். தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ள வனப்பகுதி சாம்பல் நிற ராட்சத அணில் சரணாலயம் மற்றும் மேகமலை வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள சுமார் 1,016 சதுர கிலோமீட்டரில் 1,01,000 ஹெக்டேர் மலை நிலப் பரப்பளவைக் கொண்டுள்ளது. கேரளாவின் பெரியார் புலிகள் காப்பகம் மற்றும் தமிழ்நாட்டின் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு முக்கிய வனப் பகுதியாக உள்ளது வைகை, சுருளியாறு மற்றும் சண்முகநதி போன்ற ஆறுகள் இங்கிருந்து தான் உற்பத்தியாகின்றன.விலங்குகள் மற்றும் தாவரங்கள்விலங்குகள்: புலிகள், யானைகள், சிறுத்தைகள், இந்தியக் காட்டெருமைகள், நீலகிரி வரையாடுகள் மற்றும் சாம்பல் நிற அணில்கள் பசுமை மாறாக் காடுகள், இலையுதிர் காடுகள் மற்றும் புல்வெளிகள் நிறைந்த பகுதி.
இந்தியாவில் காப்புக்காடுகளான Reserved Forests மற்றும் வனங்களை நிர்வகிக்க இந்திய வனச் சட்டம், 1927 எனும் Indian Forest Act, 1927 காடுகளின் பாதுகாப்பு, வனப் பொருட்களின் போக்குவரத்து மற்றும் வனக் குற்றங்களுக்கான தண்டனைகளை ஒழுங்குபடுத்துகிறது. காப்புக்காடுகளை உருவாக்கும் நடைமுறை அல்லது வனப் பாதுகாப்புச் சட்டம் (1980) ம் இணைகிறது அதோடு முக்கியமாக
இந்திய வன உரிமைச் சட்டம், 2006 எனும் Forest Rights Act - FRA என்பது காடுகளில் தலைமுறை தலைமுறையாக வாழும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகளின் சட்டப்பூர்வ உரிமைகளை அங்கீகரிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டமாகும். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்காலம் முதல் தொடர்ந்த வரலாற்று அநீதிகளைச் சரிசெய்வதே இச்சட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். இந்தச் சட்டம் பழங்குடி வனவவாசி மக்களுக்கு மட்டுமே ஆக்கிரமிப்பு செய்தவர்கள் என உச்சநீதிமன்றம் மேகமலை மக்கள் குறித்து கூறுவது இங்கு கவனிக்கத் தக்கது,



















கருத்துகள்