தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் 24.8.2026தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ், “அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்” திட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும்,
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் அரசால் கைவிடப்படும் என்றும், 'வெற்றிப் பயணம்' திட்டம் செயலாக்கம் குறித்தும் அறிவிப்புகளை வெளியிட்டார்.தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தற்போது துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கிய நிலையில், தற்போது முக்கியத் துறைகளின் கொள்கை விளக்கக் குறிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த ஆலோசனைகள் அவையில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படுகின்றன.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, மருத்துவம் - மக்கள் நல்வாழ்வு, நெடுஞ்சாலைகள், பொதுப்பணி, நீர்வளத் துறை மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல முக்கியத் துறைகளின் மீதான விவாதங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.அரசியல் காரசார விவாதங்கள்: தமிழக அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து அவையில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.பரந்தூரில் புதிய விமான நிலையம் அமையக்கூடாது என கூறியிருந்தேன்,
பரந்தூருக்கு பதில் புதிய விமான நிலையத்திற்கு வேறு இடம் தேவை -
பரந்தூருக்கு பதில் புதிய இடத்தில் விமான நிலையம் அமைக்க ஆலோசனை,
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கை கைவிடப்படுகிறது
விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்கு பாதிப்பு இல்லாமல் மாற்று இடத்தில் புதிய விமான நிலையம்.
புதிய விமான நிலையத்திற்கு ஒரு சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசீலனை..
புதிய விமான நிலையத்தில் இடம் இறுதி செய்யப்பட்ட பிறகு அறிவிக்கப்படும், மகளிருக்கு வெற்றிப்பயணம் கட்டணமில்லா பேருந்து சேவை
அக்டோபர் 2 ஆம் தேதி காந்தியடிகள் பிறந்த நாள் முதல் மகளிருக்கு வெற்றிப்பயணம் கட்டணமில்லா பேருந்து சேவை
மாநகர, நகர எக்ஸ்பிரஸ், LSS, டீலக்ஸ் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை
புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லா சேவை
மாவட்டங்களுக்கு இடையே புறநகர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை
மகளிருக்கு வெற்றிப்பயணம் கட்டணமில்லா பேருந்து சேவை ஆண்டுக்கு ரூபாய் .6000 கோடி செலவு தமிழ்நாட்டில் "அன்னபூரணி சூப்பர் 6" திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த இலவச சிலிண்டர் திட்டம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முதல் தமிழ்நாட்டில் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. பயனாளிகள் சிலிண்டரை வழக்கம் போல புக் செய்து வாங்க வேண்டும்.அதற்கான முழுத் தொகையையும் அரசே நேரடியாகப் பயனாளிகளின் வங்கி கணக்கில் (DBT முறை) வரவு வைக்கும். முதற்கட்டமாக, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்று தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்குப் பெரும் நிதி உதவியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் ஒதுக்கீடு உலகளாவிய போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, இந்த முதற்கட்ட 3 சிலிண்டர் திட்டத்திற்காகத் தமிழ்நாடு அரசு ஆண்டுக்குத் தோராயமாக ரூபாய் 4,000 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது



கருத்துகள்