அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் பதவிக்காலம் வரை பயன்படுத்த கார் முதலமைச்சர் அறிவிப்பு
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் பதவிக்காலம் வரை பயன்படுத்த கார் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவிப்பு
காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் இ எல் ஜோதிமணி கோரிக்கையை ஏற்றார் முதல்வர்.
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் அவர்கள் விரும்பும் நபர் ஒரு உதவியாளராக நியமனம் எனவும்
சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் வாகனப்படி மாதம் ரூபாய் 25, 000 லிருந்து உயர்த்தி ரூபாய் .75,000 ஆக வழங்கப்படும் எனவும்
சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் உதவியாளர் படி ரூபாய் .25,000 கூடுதலாக வழங்க நடவடிக்கை தவெக சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் பேசும் போது, “நான் கல்லூரி படிக்கும் போது காதல் தோல்வி வேலையில்ல்லை காருமில்லை.. இன்னைக்கு வேலையும் கொடுத்திருக்கிறார் தலைவர்.. காரும் கொடுத்திருக்கிறார்.. ரொம்ப ரொம்ப நன்றி.. ஏன்னா நான் டிரெயினில்தான் வருகிறேன். இங்கே உள்ளே ஆட்டோவில வருகிறேன்.. உள்ளே வரும் போது எல்லாம் பணியில் இருக்கிற காவலர்கள், அடையாளம் தெரியாமல் "நீங்க யார்? என கேட்பார்கள் ”, நான் எம்.எல்.ஏ.எனச் சொல்வேன்.. ஐடி கார்டு எல்லாம் எடுத்து காண்பிச்சாலும் நம்பமாட்டாங்க .." என்றார்.
தவெக சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது, முதல்வர் சி. ஜோசப் விஜய் பின்னால் திரும்பி அவர் பேசுவதை சிரித்தபடியே கவனித்துக் கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பேசிய தவெக சட்டமன்ற உறுப்பினர் சண்முகம், "கொடுக்கிற காரை இன்னோவா காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என பின்னால் இருக்கிற உறுப்பினர்கள் சொல்கின்றனர்" என பேச சபையில் முதல்வர் சி. ஜோசப் விஜய், சபாநாயகர் ஜேசிடிபிரபாகர் உட்பட அனைவரும் சிரித்தனர். உறுப்பினர் பணிக்கு கார் தேவைதான் ஆனால் இதில்
தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் கூறுவது போல சில சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் பணம் படைத்த நபர்கள் ஆவர். ஐந்து வருடம் பணிக்கு வாகனம் அதே உறுப்பினர் பின் வெற்றி பெற்றால் தொடரும் இல்லை எனில் அடுதது வரும் உறுப்பினர் பயன்படுத்துவார். இது சட்டமன்ற உறுப்பினருக்கு வழங்கும் வாகனவசதி ஆகும்.









கருத்துகள்