முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பறந்து போன பரந்தூர் விமான நிலையத் திட்டம் திமுகவின் ஊழல் திருட்டுக்கு தவெக வைத்த செக்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: திமுகவினரின் பல ஆயிரம் கோடி ரியல் எஸ்டேட் விற்பனை சதியை முறியடித்த தவெக அரசு - உண்மை நிலை 

திட்டம் வரும் முன் திட்டம் போட்டு ஏக்கர் 6 லட்சத்தில் நில உரிமையாளர்களிடம் கிரையம் வாங்கி வாங்கி அதை 3 கோடிக்கு பத்திரப்பதிவு செய்து கருப்புப் பனத்தை வெள்ளையாக்கி நடந்த PMLA சட்ட பண மோசடி ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் முயறச்சி தற்போது தடுக்கப்பட்டது.  'ஆர்கேடியா ஏரோ சிட்டி' முதல் 'ஸ்போர்ட்ஸ் சிட்டி' வரை  திமுக ஊழல் அமைச்சர்கள் கதறும் நிலை ஊழல் பணம் முடங்கியது. 

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகக் கைவிடுவதாக சட்டப்பேரவையில் அறிவித்தது ஒரு திமுக நடத்திய ஊழல் நோய்க்கு எதிரான ராஜ வைத்தியம், இது சாதாரண நிர்வாக முடிவல்ல; இது திமுகவின் பல்லாயிரம் கோடி குடும்ப ஊழல் சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தை அசைத்துப் பார்த்திருக்கும் ஒரு அரசியல் பூகம்பம், இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடம், திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் இதனைத் தமிழ்நாடு வளர்ச்சியின் 'கருப்பு நாள்' என்று குற்றச்சாட்டு வைக்கத் தொடங்கினர். ஆனால், உண்மையைச் சொல்லப்போனால், இது தமிழ்நாட்டுக்கோ  அதன் வளர்ச்சிக்கோ கருப்பு நாளல்ல; மாறாக, பரந்தூர் விவசாய நிலங்களை குறைந்த விலைக்கு வங்கி வளைத்துப்போட்டு பல்லாயிரம் கோடி லாபம் ஈட்டக் கனவு கண்ட டி.ஆர்.பி. ராஜாவின் '30 சதவீத பங்கு' மற்றும் திமுக முக்கியப் புள்ளிகளின் கருப்புப் பண முதலீடுகளுக்குத்தான் இது உண்மையான 'கருப்பு நாள்'.

தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' தரமான அரசியல் முடிவு

ஒரு அரசியல் தலைவராகத் தனது நம்பகத்தன்மையை நிரூபிக்க முதலமைச்சர் விஜய் ஆடியிருக்கும் மிகச்சிறப்பான கள ஆட்டமிது. விஜய் தனது அரசியல் பயணத்தின் முதல் களப் போராட்டத்தை முன்னெடுத்தது அனைவரும் பாராட்ட வேண்டிய முடிவு இதே காஞ்சிபுரம் பறந்தூர் மண்ணில்தான். "விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் அமைக்க விடமாட்டேன்" என்று தேர்தலுக்கு முன் ஏகனாபுரம் விவசாயிகளுக்கு அவர் கொடுத்த வாக்குறுதி, அவரது அரசியல் வாழ்வின் அஸ்திவாரமாக அமைந்தது. ஆட்சியில் அமர்ந்த பிறகு அதே திட்டத்தைத் தொடர்வது என்பது அரசியல் தற்கொலைக்குச் சமம் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். திமுகவைப் போல ஊழல் செய்து பகட்டுப் பேச்சுகளால் மக்களை ஏமாற்றாமல், தனது முதல் போராட்டக் களத்தின் கோரிக்கையை நிறைவேற்றியதன் மூலம், அவர் ஒரு தீர்க்கமான மக்கள் தலைவராக தற்போது உருவெடுத்துள்ளார். பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பாக வாழ்த்துக்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் வெறும் நிலப்பரப்பு மட்டுமல்ல; அது பல்லவர்கள் காலத்து நீர்மேலாண்மைக்குச் சான்றான விவசாயப் 'பொன்விளையும் பூமி'. பழைய செங்கல்பட்டு மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டம் ஆகவே 

 இங்கே அமைந்துள்ள ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் மூலமாக குருவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் மற்றும் வாழை சாகுபடி தடையின்றி நடக்கிறது. திட்டமிடப்பட்ட AAI வின் பிளான் படி பிரதான வெப்ரான் மற்றும் ரன்வே (Runway) ஒரு பிரம்மாண்டமான ஏரியின் மீதுதான் அமையவிருந்தது. இயற்கையைப் புரிந்துகொள்ளவும் முடியாது, இயற்கையோடு போராடவும் முடியாது என்பதை திமுக அரசு ஊழல் காரணமாக உணரத் தவறியது.



இந்தப் பகுதியில் உள்ள நீர்நிலைகளின் உபரி நீர் அடையாறு கால்வாய் வழியாகத்தான் சென்னையைக் கடந்து சென்று கடலில் கலக்கிறது. இந்த ஏரிகளை அழித்துக் கட்டுமானங்களை எழுப்பினால், 2015-ஆம் ஆண்டு சென்னை சந்தித்ததை விடப் பத்து மடங்கு பெரிய பெருவெள்ளம் பாதிக்கும் அபாயம் உருவாகும்.

சூழலியல் பாதிப்புகளை உறுதி செய்த மச்சேந்திரநாதன் ஐஏஎஸ் கமிட்டி அறிக்கையைத் தமிழ்நாடு மக்களிடமிருந்து திமுக அரசு திட்டமிட்டே மறைத்தது, அவர்களின் குற்ற உணர்ச்சியை இப்போது மக்கள் முன் அம்பலப்படுத்துகிறது.திமுகவின் கருப்புபபணம் பல்லாயிரம் கோடி 'ஏரோ சிட்டி' ரியல் எஸ்டேட் சதி


இவ்வளவு இயற்கை இடர்பாடுகள் இருந்தும் திமுக ஏன் இத்திட்டத்தில் பிடிவாதமாக இருந்தது என்பதற்கான ரகசியம் இதோ.

பிரம்மாண்ட நில மோசடி: 2021 ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்தது முதல், பரந்தூர் தான் விமான நிலையத்தின் இடமாகத் தேர்வு செய்யப்படும் என்ற இரகசியத் தகவலைப் பயன்படுத்தி திமுக பிரமுகர்கள் விவசய நில உரிமையாளர்கள் மூலம் நிலங்களை குறைந்த விலைக்கு வேட்டையாடினர். ஏக்கர் 6 முதல் 10 லட்சம் வரை விற்கப்பட்ட நிலங்கள், திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் 3 கோடி ரூபாய்க்கு விலை ஏற்றப்பட்டன.

ஆர்கேடியா ஏரோ சிட்டி எனும் Arcadia Aero City விமான நிலையத்தை ஒட்டி அமைக்கத் திட்டமிடப்பட்ட இந்த லேஅவுட்டில், திமுகவின் முன்னால் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு 30 சதவீதம் பங்கு இருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. இது அவரது அடுத்தடுத்த தலைமுறையினருக்கான சொத்துச் சேர்க்கையாகத் திட்டமிடப்பட்டது  தற்போதைய அந்திமக் காலம்: விமான நிலையத் திட்டம் ரத்தானதால் நிலத்தின் மதிப்பு வீழும் என்பதை உணர்ந்த ஊழல் வாதிகள் தற்போது ஆர்கேடியாவை 'ஸ்போர்ட்ஸ் சிட்டி' Sports City எனப் பெயர் மாற்றி விளம்பரம் செய்து மக்களை ஏமாற்ற முயற்சி நடப்பதாகத் தகவல் 

முனனாள் முதலவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் குடும்பத்தினருக்குச் சொந்தமான பண்ணை வீடு உளுந்தை  பகுதியில் இருப்பதும், அதற்கு அருகிலேயே அவர்களின் டிஎஸ் மினரல்ஸ் நிறுவனம் இருப்பதும் இத்திட்டத்தின் பின்னால் இருந்த தனிப்பட்ட நலன்களுக்குச் சான்றாகிறது. இந்த ஊழல் பணத்தை துபாய் லூலு மால் பங்குகள் வழியாக சர்வதேச அளவில் மாற்றவும் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தகவல் 

திட்டம் ரத்தானதால் திமுக அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்குத் துணை நின்ற ஊழல் ஐஏஎஸ் அதிகாரிகள் தற்போது நிலைகுலைந்து போயுள்ளனர்.


சில நில புரோக்கர்கள்: கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் இருந்துகொண்டு, நில அபகரிப்பிற்குத் துணை நின்ற சில அதிகாரிகள் தற்போது பல ஆயிரம் கோடி முடங்கிப்போன முதலீடுகள்  காரணமாகத் தவிக்கிறார்கள். இவர்கள் அதிகாரிகளாகச் செயல்படாமல் ரியல் எஸ்டேட் கார்டெலின் தரகர்களாகச் செயல்பட்டனர். தொழில் முதலீடு குறித்து முறையான வெள்ளை அறிக்கை  ஊழல் காரணமாக வெளியிடத் தயாரில்லாத திமுக அரசு, சட்டமன்றப்பேரவையில் ஒரு வெள்ளை பேப்பரை காட்டி மக்களை ஏமாற்ற முனைந்தது. அந்த ஏமாற்று வித்தைக்கு இந்தத் திட்டம் இப்போது ரத்தானது தான் ஒரு சரியான சவுக்கடி,

பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து என்பது ஊழல் கார்டெல்களுக்கு எதிராக ஏகனாபுரம் விவசாயிகள் பெற்ற மகத்தான வெற்றி. பல்லவர் கால ஏரிகளைக் காப்பாற்றியதன் மூலம் சென்னைக்கு வரவிருந்த ஒரு பேரழிவைத் தடுத்து நிறுத்திய பெருமை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யைச் சேரும்.


தமிழ்நாட்டிற்கு இரண்டாவது விமான நிலையம் தேவை ஆனால், அது ஊழல் முதலீடுகளின் மீதோ அல்லது விவசாயிகளை ஏமாற்றி வாங்கிய நிலம் இழப்பு கண்ணீரின் மீதோ அமையக்கூடாது. அரசு இனி, விவசாய நிலங்களைப் பாதிக்காத மாற்று இடங்களான பன்னூர், படாளம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி போன்ற பகுதிகளை ஆய்வு செய்து, வெளிப்படையான முறையில் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இதுவே தமிழ்நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும்.பரந்தூர் மற்றும் நெல்வாய் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களைச் சில திமுக கட்சி சார்ந்த தனியார் நிறுவனங்கள் மிகக் குறைந்த விலைக்கு வாங்கினர். ஏக்கர் 8.7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலங்களை, ஆட்சி அதிகாரம் மூலம் நகர் ஊரமைப்புத் துறை, பத்திரப்பதிவுத்துறை மற்றும் வருவாய் துறை, உள்ளாட்சித்துறைகளின் ஊழல் அலுவலர்கள் உதவியுடன் வீட்டுமனைகளாக மாற்றி, 50 சென்ட் அளவான அரை ஏக்கரின் நில உத்தேச வழிகாட்டி மதிப்பை 32.4 லட்சம் ரூபாயாகப் பதிவுத் துறையின் ஊழல் உயர் அதிகாரிகளின் துணையோடு சட்டவிரோதமாக உயர்த்தி இதன் மூலம் அரசு நிலத்தைக் கையகப்படுத்தும் போது சந்தை மதிப்பை விட பல மடங்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகையை அரசிடமிருந்தே பெறத் திட்டமிட்டனர்.



இதனால் அரசுக்கு சுமார் 165 கோடி ரூபாய் கூடுதல் செலவு மற்றும் இழப்பு ஏற்படும் சூழலும் உருவானது.  இதில் பிரகாஷ் சில்க்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ராகா அசோசியேட்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் அவர்களுக்குத் துணையாக இருந்த பதிவுத்துறை கூடுதல் ஐஜி கே.வி. சீனிவாசன் உள்ளிட்ட ஊழல் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது ஆனால் நடவடிக்கை இல்லை .விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு, சட்டப்பேரவையில் இது தொடர்பாகப் பெரும் விவாதம் வெடித்தது.திமுக மீதான குற்றச்சாட்டு: பரந்தூர் விமான நிலையத் திட்ட அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே, அப்போதைய ஆளுங்கட்சியான திமுக-வைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அதன் கூட்டணிக் காரர்கள் நூற்றுக்கணக்கான கோடிகளை முதலீடு செய்து பரந்தூரைச் சுற்றி பெருமளவில் நிலங்களை வாங்கியதாகப் தற்போதைய அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இத்திட்டத்தை ஒரு "ரியல் எஸ்டேட் ஸ்கேம்" என பகிரங்கமாகக் குறிப்பிட்டுள்ளார். விரிவான திட்ட அறிக்கையான DPR வருவதற்கு முன்பே குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் நிலங்களைக் குவித்து லாபம் பார்க்க முயன்றதாகக் கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த முன்னாள் திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு, நிலத் தேர்வு சென்னையின் புவியியல் அமைப்பின்படி தான் செய்யப்பட்டதெதன்றும், அரசியல் காரணங்களுக்காகத் திட்டம் கைவிடப்படுவது பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் மறுப்பு தெரிவித்தார்.  பரந்தூர் விமான நிலையத் திட்டம் அதிகாரப்பூர்வமாகக் கைவிடப்பட்டுள்ளதால், இவ்வாறு மோசடி முறையில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தி அரசிடம் ஏமாற்றிப் பணம் பெற நினைத்த அரசியல்வாதிகள் மற்றும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்களின் திட்டம் முறியடிக்கப்பட்டது.




கையகப்படுத்தப்பட்ட சுமார் 48 சதவீதம் நிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே வாங்கிய இழப்பீட்டுத் தொகையை திரும்பப் பெற்று நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று சிபிஐ மற்றும் சிபிஎம் போன்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போதைய அரசை வலியுறுத்துகின்றன.நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற சட்டம் 2013-ன் அடிப்படையில், குறிப்பிட்ட திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ அல்லது அந்தத் திட்டம் கைவிடப்பட்டாலோ, நிலத்தைச் சம்பந்தப்பட்ட விற்பனை செய்த விவசாயிகளிடமே திரும்ப பணம் பெற்று மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.



வேறு ஒரு திட்டத்திற்கு மாற்ற முடியாது. எனவே, வழங்க வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை,  ஆனால் அரசின் முடிவு இனிமேல் தான் தெரியும்.  பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து என சட்டமன்றத்தில் அறிவித்ததிலிருந்து கடந்த 36 மணி நேரமாக திமுக முக்கிய நிர்வாகிகள், சில கட்சி ஆதரவு ஊடகங்கள் , செய்தித்தாள்  பதிப்பாசிரியர்கள் , சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கட்சி சமூக ஊடகப் போராளிகள்  என திமுகவுக்கு ஆதரவாக அனைவரும் கொதிப்பது யாருக்காக ஏன்?

அதற்கு விடை:- ஒரு காலத்தில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சியில் அப்பள வியாபாரம் செய்த வேதமூர்த்தி  என்பவரின் மகனான திமுக முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் மருமகன் 

சபரீசன் முன்னாள் அமைச்சர்களின் பினாமிகளை ஊழல் வழககில் கைது செய்ய வேண்டும்.. பினாமிகளைக் கைது செய்தால் உண்மையானவர்கள் வெளியே ஓடி வருவார்கள்.. 

அமைச்சர் ஆதவ் பேச்சுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பும் - அமளியும் மக்களுக்கானதா அல்லவே தங்களது ஊழலுக்கானதகவே அறியலாம்,இதே பிரச்சினைதான் AIIMS தேர்விலும்,இடம் ஒதுக்குவதிலும் நடந்தது! அது இனி வெளிவரும்.ஆனால் பரந்தூர் நிலத்தை தொழில் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தத் தமிழ்நாடு அரசு முடிவு

90 சதவீதம் அல்ல, 48 சதவீதம் நிலம் மட்டுமே கையகப்படுத்தபபடடதாக அமைச்சர் தகவல்

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு, கையகப்படுத்தப்பட்ட 1,800 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தைத் தொழில் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழலுக்கோ அல்லது அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்தாத திட்டங்களுக்கு இந்த நிலம் பயன்படுத்தப்படும் என்று மாநிலத் தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா நேற்று தெரிவித்தார்.


சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர்

'நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம், 2013'-ன் கீழ் இது சாத்தியம் என்றும், இது வேலைவாய்ப்புகளையும் பொருளாதார வளர்ச்சியையும் உருவாக்கும் என்றும் கூறினார்.

இதற்கிடையில், அரசு எடுத்துள்ள இந்த முடிவு பல தசாப்தங்களாகக் கட்டமைக்கப்பட்ட மாநிலத்தின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும், அடர்த்தியான நகர்ப்பகுதியில் அமைந்துள்ள மீனம்பாக்கம் சென்னை சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்துவதன் சாத்தியக்கூறுகள் குறித்தும் கேள்விகளை எழுப்பின. 

தொழில்நுட்பச் சாத்தியக்கூறுகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடனான பலகட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் பல்வேறு இடங்களை ஆய்வு செய்த பின்னரே பரந்தூர் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சரும் சடடமன்ற உறுப்பினரமான தங்கம் தென்னரசு கூறினார். "அடுத்ததாகத் தேர்ந்தெடுக்கப்படும் இடமும் இதே போன்ற சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம்," என்றவர் 

பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகளை திமுக மிகைப்படுத்துவதாகவும், விமர்சனங்களுக்குப் பின்னால் சுயநல நோக்கங்கள் இருப்பதாகவும் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் குற்றம் சாட்டினார். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுவதற்கு முன்பே திமுகவினர் அப்பகுதிகளில் நிலங்களை வாங்கியதாகப் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டினார். 

இத்திட்டத்தில் கடுமையான முறைகேடுகள் உள்ளதாகக் கூறியவர், முந்தைய அரசின் முடிவுக்குப் பின்னால் ரியல் எஸ்டேட் நலன்கள் இருந்ததாகத் தெரிவித்தார்.

90 முதல் 95 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த கூற்றை மறுத்த நிர்மல்குமார், 48 சதவீதம் அல்லது 1,802 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். "இத்திட்டத்திற்கு மொத்தம் 5,846 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது; இதில் 3,774 ஏக்கர் பட்டா நிலமாகும், ஆனால் இதுவரை 1,802 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. 1,972 ஏக்கர் நிலம் அரசு நிலமாகக் காட்டப்பட்டிருந்தாலும், அதில் 1,558 ஏக்கர் நீர்நிலைகளாக உள்ளன," என்றார். ஏகனாபுரம், கரணி மற்றும் தண்டலம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், இத்திட்டத்திற்கு இன்னும் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

97 திட்டங்களுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அரசு சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் நேற்று கேள்விகளை எழுப்பின. நாகர்கோவில் தொகுதி திமுக சட்டமனற உறுப்பினர் எஸ். ஆஸ்டின் பேசுகையில், இத்திட்டங்கள் திமுகவின் முயற்சிகளின் தொடர்ச்சியே என்றும், சுமார் 80 சதவீத நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் முந்தைய ஆட்சியின் போதே மேற்கொள்ளப்பட்டவை  என்றும் குறிப்பிட்டார். இந்த நிலையில் நேற்று திட்டம் ரத்து செய்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் செயல் என்பது தற்போது அரசியல் ரீதியாக அவர் எடுத்த வாமனர் அவதாரம் 


முதல் அடியே பலமாக விழுகிற போது திரிவிக்ரமனாக மாறி மூன்றாவது அடி எங்கே விழும். இதுவே  தவெக அரசின் ஊழல் வாதிகளுக்கு  எதிராக விடும் எச்சரிக்கை 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...