அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிரந்தரத் துணை வேந்தர் நியமனம் வரை புதிய பொறுப்பு துணைவேந்தராக பேராசிரியர் ஜே. ஜெயகாந்தன் நியமனம்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிரந்தர துணை வேந்தர் நியமனம் வரை புதிய பொறுப்பு துணைவேந்தராக பேராசிரியர் ஜே. ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜி. ரவியின் பதவிக்காலம் மற்றும் ஓராண்டு பணி நீட்டிப்புக்காலம் ஆகஸ்ட் 21, 2026 ஆம் தேதியுடன் நிறைவடைந்ததை அடுத்து இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பு துணை வேந்தராக நியமனம் ஆன ஜே. ஜெயகாந்தன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழுவான Syndicate உறுப்பினராகவும், அறிவியல் புல முதன்மைப் பேராசிரியர் Dean of Science ஆகப் பணியாற்றுகிறார். மேலும், உயிரித் தகவலியல் எனும் Bioinformatics துறைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
கடந்த திமுக ஆட்சி முதல் தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநருக்கு இடையே நிலவும் துணைவேந்தர் தேர்வுக் குழு மற்றும் யூஜிசி தொடர்பான சட்டச் சிக்கல்களால், பல்கலைக்கழகத்தின் தினசரி நிர்வாக நடவடிக்கை பாதிக்கப்படாமல் இருக்க இந்த இடைக்கால ஏற்பாடு தற்போது செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விதிகளின்படி மூத்த பேராசிரியரான இவருக்கு இந்தக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, இந்த நியமனம் முறையான சிண்டிகேட் குழுவின் ஒப்புதல் இன்றி அவசரமாகச் செய்யப்பட்டதாகவும், பேராசிரியர் ஜெயகாந்தன் மீது கடந்த 2024 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) புகார் ஒன்று விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் கூறி பேராசிரியர்கள் சங்கத்தினர் சிலர் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், பல்கலைக்கழக சட்ட விதிகளுக்கு உட்பட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழகப் பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தற்போதைய பொறுப்பு துணைவேந்தராக பேராசிரியர் ஜே. ஜெயகாந்தன் நியமிக்கப்படுவதற்கு முன்பு துணைவேந்தராக இருந்த பேராசிரியர்களில் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்களில் முக்கியமமானவர்கள்
பேராசிரியர் ஜி. ரவி (2022 ஆம் ஆண்டு முதல் - 2026 ஆம் ஆண்டு வரை): ஆகஸ்ட் 2022-ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டு, ஓராண்டு பணிநீட்டிப்புடன் ஆகஸ்ட் 2026 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
அதற்கு முன் பேராசிரியர் என். ராஜேந்திரன் (2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ): இவரது பதவிக்காலம் ஜூன் 2021-ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. அடுத்ததாக பேராசிரியர் எஸ். சுப்பையா (2015 -ஆம் ண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ): ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் துறையின் பேராசிரியராக இருந்து துணைவேந்தராகப் பொறுப்பேற்றார் இவரது பதவிக்காலம் பல்கலைக்கழகத்தின் பொற்காலமாகும். முறையான அங்கீகாரம் பெற்றது
பல்கலைக்கழகம். அதற்கு முன் பேராசிரியர் எஸ். சுடலைமுத்து (2010 -ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை ): மூன்று ஆண்டுகள் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்,


_Radha_Thiagarajan_fvc.jpg)








கருத்துகள்