முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பழனி மடத்தின் சொத்து மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் மதுரை சிறையில் மரணம் மற்றொரு நபர் ஐசியுவில்

பழனி மடத்தின் சொத்து மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் மதுரை சிறையில் மரணம் .


பழனி துறவி பெயரில் உள்ள மடத்தின் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழப்பு 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை  திமுக ஆட்சிகாலத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழநி நிதிமன்றத்தில் அரசு குற்றவியல் வழக்கறிஞராக் பணியில் இருந்தவராவார், தற்போது பழனியில் ரூபாய் .100 கோடி மதிப்புள்ள மடத்தின் சொத்தில் நடந்த மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

3 நாட்கள் விசாரணைக்கு எடுத்த காவல் முடிந்து சிறைக்கு திரும்பிய சில மணிநேரங்களில் மாரடைப்பு ஏற்பட்டதாகத் தகவல், ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த மரணம் நிகழ்ந்து அவரைச் சார்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி அறக்கட்டளை மடத்திற்குச் சொந்தமான ரூபாய் .100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் எஸ். அன்வர்தீன் (வயது 65), மதுரை மத்திய சிறையில் நேற்று ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி இரவு உயிரிழந்துள்ளார். CB-CID  காவலில் 3 நாட்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர், வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த சில மணிநேரங்களில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், இரவு 10.40 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கு முன்னதாக, திண்டுக்கல் நீதித்துறை நீதிபதி அன்வர்தீன் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி அறக்கட்டளை மடத்திற்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் (தற்போதைய மதிப்பு ரூபாய் .100 கோடி), போலி ஆவணங்கள் மூலம் ரூபாய் .2 கோடிக்கு விற்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த நிலம், 1888-ம் ஆண்டு அறக்கட்டளை ஆவணத்தின் மூலம் மடத்திற்கு வழங்கப்பட்டதாகவும், அதனை விற்கவோ, மாற்றவோ கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது. இந்த புகாரின் பேரில், பழனி அடிவாரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு CB-CID-க்கு மாற்றப்பட்ட பின் ஜூலை 29-ஆம் தேதி, CB-CID காவல்துறையினர் இந்த வழக்கில் நான்கு பேரை கைது செய்தனர். கைதானவர்களில், நிலத்தை விற்றதாக கூறப்படும் விழுப்புரத்தைச் சேர்ந்த டி. முருகதாஸ் (வயது 56), நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் திருப்பூரைச் சேர்ந்த கே. வெள்ளைத்துறை (வயது 60) மற்றும் பழனியைச் சேர்ந்த டி. சேதுபதி, மற்றும் இந்த பரிவர்த்தனையை மேற்கொள்ள உதவியதாக கூறப்படும் பழனியைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ். அன்வர்தீன் (வயது 65) ஆகியோர் அடங்குவர். இந்த வழக்கில் பின்னர் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். அவர் தற்போது மருத்துவமனை ஐசியூ வில் உள்ளார் தற்போது இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அவர்களில் அன்வர்தீன், முருகதாஸ், சேதுபதி ஆகியோர் திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால், நீதிபதி பாக்கியராஜ்  இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், CB-CID-க்கு இவர்களை வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

 CB-CID காவல்துறை , ஆகஸ்ட் 6 முதல் 7 வரை அன்வர்தீனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இவர் ஏற்கனவே பக்கவாதம்  மற்றும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தார். சிறை யில் இருந்தபோதே அவருக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டும், சிறை மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டும் இருந்தார்.

3 நாட்கள் காவல் முடிந்ததும், வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் அன்வர்தீன் மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரது தொடர் சிகிச்சையின் ஒரு பகுதியாக, சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு 9.30 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், இரவு 10.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

வழக்கறிஞர் அன்வர்தீனின் மரணம், ஏற்கனவே சர்ச்சையில் உள்ள இந்த ரூபாய் .100 கோடி நில மோசடி வழக்கிற்கு மேலும் ஒரு சோக அத்தியாயத்தை சேர்த்துள்ளது. 65 வயதான, பக்கவாதம் மற்றும் நீரிழிவு போன்ற உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர் CB-CID-யின் விசாரணை முடிந்து சிறைக்கு திரும்பிய சில மணிநேரங்களில் அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இது, சிறையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்பதையோ அல்லது விசாரணையின் போது ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பு அவரது மரணத்திற்கு காரணமா என விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால், இந்த மரணம் குறித்து சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏனெனில், சிறையில் உள்ள குற்றவாளிகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்த அரசின் பொறுப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது.

அன்வர்தீனின் மரணம் குறித்து கரிமேடு காவ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பிரேதப் பரிசோதனை நடத்தப்படும். வழக்கில் CB-CID விசாரணை தொடரும். ஏற்கனவே பழனி நில மோசடி வழக்கில் CBI விசாரணை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு (PIL) தாக்கல் செய்து அது விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த மரணச் சம்பவம், அந்த மனுவிற்கு மேலும் பலத்தை சேர்க்கும். இந்த வழக்கில் கைதான மற்ற குற்றவாளிகள் தொடர்ந்து நீதித்துறை காவலில் இருப்பார்கள்.இந்த நிலையில் பழனி கோயில் அறக்கட்டளை மடத்தின் நிலத்தை முறைகேடாக பதிவு செய்த வழக்கில் கைதான வழக்கறிஞர் மதுரை சிறையில் மரணம் - மர்மங்கள் நிறைந்த இவ்வழக்கின் விசாரணையை  சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும் மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றம் சட்டப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உடல்நல குறைவால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் 

பழனி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பதிவு செய்த  வழக்கின்  விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்தி பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...