திபெத்தின் இமயமலைப் பகுதியில் உள்ள லெண்டே கோலா ஆற்றில்
ஈஷா அறக்கட்டளையின் S3 குழு என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த குழுவினர், ஜக்கி வாசுதேவின் ஈஷா மற்றும் அவரது குழு சாகா பகுதியில் சந்தித்ததாகவும், பின்னர் அவர்கள் கைரோங்கில் இறங்குவதற்காகப் புறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம்: 80 பேர் (34 ஆண்கள், 46 பெண்கள்) நாடுகள் வாரியாக: 22 அமெரிக்கா, 12 கனடா, 11 ஆஸ்திரேலியா, 9 இங்கிலாந்து, 4 ஜெர்மனி, 3 பிரான்ஸ், 3 நேபாளம், 2 நெதர்லாந்து, 2 நியூசிலாந்து, 2 சிங்கப்பூர், 2 ஸ்பெயின், தலா ஒருவர் பின்லாந்து, ஹங்கேரி, இஸ்ரேல், லிதுவேனியா, பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா
மற்றவர்கள்: 3 தன்னார்வலர்கள் மற்றும் ஒரு மருத்துவர்
ஆனால், அனைத்து தொலைப்பேசிகளும் அணைக்கப்பட்டுள்ளன, அனைத்து தகவல் தொடர்பு சேவைகளும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன, சாலைகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன
நேபாளத்தில்:165 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 579 பயணிகள் (466 வெளிநாட்டினர் மற்றும் 113 நேபாளிகள்) காணவில்லை. 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணவில்லை என்று நேபாள அரசு தெரிவித்துள்ளது.
மொத்த பாதிப்பு: 1,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்
திபெத்தில் பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட இந்த மின்னல் வெள்ளம், நேபாளத்தில் மட்டுமல்ல, இந்தியா உட்பட பல நாடுகளின் குடிமக்களையும் பாதித்துள்ளது. 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர் என்பது மிகவும் கவலைக்குரியது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது பல இந்துக்களின் வாழ்நாள் கனவு. இந்த புனித யாத்திரையில் ஈடுபட்டிருந்த 80 பேர் கொண்ட குழுவில், 34 பெண்கள் உட்பட பலர் இருந்துள்ளனர். 22 அமெரிக்கர்கள், 12 கனடியர்கள், 11 ஆஸ்திரேலியர்கள், 9 பிரித்தானியர்கள் என 19 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த குழுவில் இருந்தது குறிப்பிடத்தக்கது
மீட்புப் பணிகள் தீவிரமடையும் என
எதிர்பார்க்கப்படுகிறது. காணாமல் போன 80 பேரின் நிலை குறித்து அடுத்த 24 மணி நேரத்தில் முக்கிய தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த வெள்ளப் பெருக்கு, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறது.நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் உள்ள திமுரே மற்றும் சியாப்ருபெசி ஆகிய மலைக்கிராமங்கள் முற்றிலும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளப்பெருக்குக்கு முன் பின் .படங்கள் சேத நிலைமை குறித்து அறியலாம்.சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.சிவஞானம் நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ளதாகவும், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.(சீன செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்)
சீனாவின் சிசாங் (திபெத்) தன்னாட்சிப் பகுதியில் உள்ள கைரோங் (Gyirong) எல்லைத் துறைமுகப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, சீனா தனது தேசிய அளவிலான அவசரக்கால மீட்பு நடவடிக்கையை (Emergency Response) உடனடியாக அமல்படுத்தியுள்ளது. நேபாள எல்லையை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் சீனா பக்கமுள்ள எல்லைக்குச் செல்லும் சாலைகள், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியவர்களை மீட்கவும் துயர நிவாரணப் பொருட்களை வழங்கவும் சீன அரசு மீட்புக் குழுக்களைத் தீவிரமாக களமிறக்கியுள்ளது. எனத் தெரிவித்துள்ள போதிலும் சீன ஆக்கிரமிப்பு திபெத் பகுதியில் இருந்து நேபால் நாட்டில் நுழையும் வெள்ளம்.. இது மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் போல தெரியவில்லை.. ஏதோ ஏரி அல்லது அணை உடைத்தாததால் இவ்வளவு தண்ணீர் வருகிறது, நிலநடுக்கம் ஏற்பட்டு பனி கட்டி உருகி வெள்ளம் ஏற்பட்டதாக சொல்கின்றனர், ஆனால் வென்னப்பெருக்கு மூலம் தண்ணீர் வருவதை சீனா நேபாளத்திற்குத் தெரிவிக்கவில்லை, எச்சரிக்கவில்லை.. இதற்கு சீனாவின் தரப்பிலிருநது பதில் வரவில்லைதிபெத் எல்லையில் நேற்று ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 4.4 அல்லது 5.2 அலகுகளில் பதிவானதைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளப் பேரழிவில் சிக்கி 157 பேர் பலியாகி உள்ளனர். 133 இந்தியர்கள் உட்பட 750 பேரின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் நேபாளத்தில் நிலவிவரும் கடுமையான வெள்ளப்பெருக்கு சூழலில், ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா பவுண்டேஷனின் ‘சேக்ரட் வாக்ஸ்’ எனும் கைலாஷ் மானசரோவர் யாத்ரீகர்கள் மற்றும் தொண்டர்கள் மாயமானது குறித்து ஈஷா ஒருங்கிணைப்பாளர் மா கம்பீரா இந்தியா அரசு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளதில், இது மிகவும் எதிர்பாராத ஒரு சூழ்நிலை. ஏனெனில் அந்தக் குழுவினர் காத்மாண்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர், அவர்கள் சீனா குடிவரவு மையத்தில் இருந்தனர். நாங்கள் அவர்களிடம் கடைசியாகக் காலை 5:05 மணிக்குப் பேசியபோது, குழுவின் தலைவர் பிரவீண், நாங்கள் குடிவரவு மையத்தை அடைந்துவிட்டதாகவும், குடிவரவுப் பணியைத் தொடங்க உள்ளதாகவும் எங்களிடம் கூறினார். இதையடுத்து சுமார் 10 நிமிடங்களில் நாங்கள் அவர்களைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, இந்த ஒட்டுமொத்த துயரச் சம்பவமும் அந்த 10 நிமிடங்களுக்குள்தான் நடந்தது. இந்த மிகப்பெரிய துயரச் சம்பவத்திற்குப் பிறகு, முழுத் தொடர்பு அமைப்பும் துண்டிக்கப்பட்டதால், முழு குழுவுடனான தொடர்பை நாங்கள் முற்றிலும் இழந்தோம்.இதனால் நாங்கள் சில தகவல்களுக்காகக் காத்திருக்கிறோம். நேபாளப் பகுதியிலும் அனைத்துத் தொடர்பு அமைப்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தன. அவர்கள் சில ஹெலிகாப்டர்களை அனுப்பி சில தகவல்களைப் பெற முயற்சித்தார்கள் என நினைக்கிறேன். ஆனால், எங்களது மூன்று தொண்டர்கள் நிறுத்தப்பட்டிருந்த நேபாளப் பகுதி முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது.
இந்த சம்பவத்தில் மொத்தம் 80 பேர் பாதிக்கப்பட்டவர்கள். இருப்பினும், சீன அதிகாரிகளிடமிருந்து விரைவில், நாளை காலைக்குள் எங்களுக்கும் சில தகவல்கள் கிடைக்கும் என்று நாங்கள் இன்னும் நம்புகிறோம். மேலும், இந்த விவகாரம் குறித்து எங்களுக்கு ஏதேனும் நல்ல செய்தி கிடைக்கும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். என்றார். இதைத்தொடர்ந்து எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கு இருந்தார்கள்? என்ற கேள்விக்கு, “அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஐரோப்பாவின் பல்வேறு நாடுகள், இங்கிலாந்து மற்றும் சில ஆசிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 19 நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் எங்களிடம் இருந்தனர். அவர்களில் பலர் வெளிநாட்டினர் என்றாலும், அவர்கள் அனைவரும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.” என்றார்.
இதுகுறித்து சில தூதரகங்களைத் தொடர்புகொண்டுள்ளீர்களா? எனும் கேள்விக்கு, “இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள அனைத்து 19 தூதரகங்களையும் நாங்கள் தொடர்புகொண்டுள்ளோம். நாங்கள் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். எங்களை எப்படி ஆதரிப்பது மற்றும் சில தகவல்களைப் பெறுவது எப்படி என்பது குறித்தும் அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.ஆனால், இந்தத் துயரச் சம்பவம் மிகவும் தொலைதூரப் பகுதியில், மிகப் பெரிய அளவில் நடந்ததால், தகவல்கள் வெளியாவதற்கு மிகவும் தாமதமாகிறது என்று நினைக்கிறேன்” என்றார். தொடரந்து கடந்த 20 ஆண்டுகளாக இந்த யாத்திரைகளை நடத்தி வருகிறீர்கள், இது போன்ற ஒரு துயரத்தை அல்லது இது போன்ற ஒரு சம்பவத்தை நீங்கள் இதற்கு முன்பு எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, “இந்த அளவுக்கு பெரிய அளவில் இல்லை, சிறிய அளவிலான சம்பவங்கள் நடந்துள்ளது. அது நிர்வகிக்கக்கூடியவை. ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் நிலச்சரிவு சீரமைக்கப்படும், அல்லது நீங்கள் எங்காவது ஒரு அரை மணி நேரம் சிக்கிக்கொண்டு பிறகு நகர்ந்துவிடுவீர்கள்.
ஆனால் இந்த அளவுக்கு பெரிய அளவில் இல்லை. இது எங்கள் அனைவருக்குமே மிகவும் புதியது. தற்போது நாங்கள் அனைத்து குடும்பங்களையும் தொடர்பு கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பியது மட்டுமல்லாமல், அவர்களை நேரில் தொடர்பு கொள்ளவும் விரும்புகிறோம்.
குடும்பங்களுக்கு இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது, என்றாலும், இந்த மக்களுக்கும் என்ன நடந்தது என்பது குறித்து எங்களுக்கு உறுதியான மற்றும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் கிடைக்கும் வரை நாங்கள் எந்த முடிவுக்கும் வர முடியாது.
இருப்பினும், நாங்கள் குடும்பங்களைத் தொடர்புகொண்டு வருகிறோம், எங்களுக்கு தெரிந்த தகவல்களை அவர்களுக்குத் தெரிவித்து வருகிறோம், மேலும் தகவல் கிடைக்கும்போது அவர்களுக்குத் தெரிவிப்போம். என்றார்.யானைப்பாதை, எறும்புகளின் பாதை, காட்டாற்று வெள்ளம் வரும் பாதை என்றுமே மாறாது தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீரைத் தேடி, ஒரு காட்டிலிருந்து மற்றொரு காட்டுப் பகுதிக்குத் தொடர்ந்து பயணிக்கும் பாரம்பரியமான வழித்தடம் 'யானை வலசைப் பாதை' அதே போல் காட்டாற்றில் வெள்ளம் வரும் பாதை என்பது அதிகப்படியான மழைநீர் அல்லது ஆற்று நீர் தனது இயல்பான கரைகளை மீறிப் பாய்ந்து செல்லும் இயற்கை அல்லது அதிகமானால் செயற்கையான வழித்தடமாகும். அதேபோல எறும்புகள் உணவைத் தேடிச் செல்லும்போது பெரோமோன் எனும் ஒரு வகையான வேதிப்பொருளை நிலத்தில் விட்டுச் செல்கின்றன. இதைப் பின்பற்றியே மற்ற எறும்புகள் வரிசையாக ஒரே பாதையில் பயணம் செய்கின்றன.இந்தப் பாதையில் வாசனை மறைந்தால் அல்லது தடைபட்டால் எறும்புகளால் வழி கண்டுபிடிக்க முடியாது. ஆகவே ஆக்கிரமிப்பாளர்கள் அதை உணராமல் நட்சத்திர விடுதிகளாக காங்கிரீட் கட்டிடங்கள் கட்டி பாதையை மறைத்து விபத்தை எதிர்கொள்கிறார்கள் ஆனால் இயற்கை தனது நிலத்தை மீட்க நீதிமன்றம் மூலம் வழக்கு போராட்டங்கள் சட்டம் என்று அலைவதில்லை.
ஒரே ஒரு நிகழ்வை மட்டும் நிகழ்த்தி தனக்கே உரித்தான பாதையை மீட்டெடுத்து விடுகிறது.
அப்படி ஒரு நிகழ்வு தான் நேபாளத்தில், இயற்கையின் ஒவ்வொரு அணுவிலும் உறைந்திருப்பவனே இறைவனே என்பதை திருமந்திரத்தில் திருமூலர் வெகு அழகாகவே விவரித்திருப்பார். அதேபோல இயற்கை ஈசன் தான் கையிலாயத்தில் பொன்னார் மேனியன், நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள நதிக்கரைகளில் கட்டிடங்கள் கட்டுவதை ஒழுங்குபடுத்தவும் ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் இயற்றப்பட்ட முந்தைய கூடுதல் விதியை நேபாள உச்ச நீதிமன்றம் தற்போது மாற்றி அமைத்துள்ளது. நதிக்கரைகளில் கூடுதலாக 20 மீட்டர் இடைவெளி விட வேண்டும் என்ற முந்தைய உத்தரவை உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வு ரத்து செய்தது. இதன் மூலம் காத்மாண்டு மாநகராட்சி (KMC) நதிக்கரை அருகில் உள்ள தனியார் நிலங்களில் கட்டுமானத் தடைகளை நீக்கியது. 2008 முதல் 2009 வரை இருந்த அமைச்சரவை நிர்ணயித்த பழைய நதிக்கரை விதிகளே தொடரும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.நேபாளத்தில் நதிகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், அவற்றின் கரைகளில் சட்டவிரோத கட்டிட ஆக்கிரமிப்புகளைத் தடுக்கவும் தேசிய சிவில் சட்டம் எனும் National Civil Code, 2074, கட்டிட விதிமுறைகள் மற்றும் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புகள் வலுவான சட்டக் கட்டமைப்பை வழங்குகின்றன.நீர் வழித்தடங்களை மூடி கட்டிடங்கள் கட்டுவது மற்றும் கழிவுநீரை நேரடியாக நதிகளில் கலப்பது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது இருந்தும் நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் உள்ள திமுரே மற்றும் சியாப்ருபெசி ஆகிய மலைக்கிராமங்கள் முற்றிலும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளப்பெருக்குக்கு முன் பின் .படங்கள் சேத நிலைமையைக் குறித்து அறியலாம். அதேபோல் இந்தியாவில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.சிவஞானம் நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ளதாகவும், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.(சீன செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்)
சீனாவின் சிசாங் (திபெத்) தன்னாட்சிப் பகுதியில் உள்ள கைரோங் (Gyirong) எல்லைத் துறைமுகப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, சீனா தனது தேசிய அளவிலான அவசரக்கால மீட்பு நடவடிக்கையை உடனடியாக அமல்படுத்தியுள்ளது. நேபாள எல்லையை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் சீனா பக்கமுள்ள எல்லைக்குச் செல்லும் சாலைகள், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியவர்களை மீட்கவும் துயர நிவாரணப் பொருட்களை வழங்கவும் சீன அரசு மீட்புக் குழுக்களைத் தீவிரமாக களமிறக்கியுள்ளது. எனத் தெரிவித்துள்ள போதிலும் சீன ஆக்கிரமிப்பு திபெத் பகுதியில் இருந்து நேபால் நாட்டில் நுழையும் வெள்ளம்.. இது மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் போல தெரியவில்லை. பூமி அதிர்வுகள் இருந்த போதிலும் ஏதோ ஏரி அல்லது அணை உடைத்தாததால் இவ்வளவு தண்ணீர் வருகிறது, நிலநடுக்கம் ஏற்பட்டு பனி கட்டி உருகி வென்னப்பெருக்கு மூலம் தண்ணீர் வருவதை சீனா நேபாளத்திற்குத் தெரிவிக்கவில்லை, எச்சரிக்கவில்லை.. இதற்கு சீனாவின் தரப்பிலிருநது பதில் வரவில்லை, ஆகவே ஜீவநதிகள் உள்ள இந்தியாவில் நதிகள் மற்றும் நீர்நிலைகள் நிர்வாகம் முக்கியமாக மாநிலப் பட்டியலிலும் (Entry 17), பொதுவான நதிநீர் பகிர்வு நடுவர் மன்றங்கள் மற்றும் மத்தியச் சட்டங்களின் கீழும் நிர்வகிக்கப்படுகிறது.
அரசியலமைப்புப் பிரிவு Article 262: மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பகிர்வு மற்றும் தாவாக்களைத் தீர்க்க நாடாளுமன்றத்திற்குச் சட்டம் இயற்றும் முழு அதிகாரத்தை வழங்குகிறது.மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிணக்குகள் சட்டம், 1956 (Inter-State River Water Disputes Act, 1956): இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பயன்பாடு, பகிர்வு ஆகியவற்றில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க தீர்ப்பாயம் (Tribunal) அமைக்க வழிவகை செய்கிறது.நதி வாரியங்கள் சட்டம், 1956 (River Boards Act, 1956): மாநிலங்களுக்கு இடையேயான நதிகள் மற்றும் நதிப் பள்ளத்தாக்குகளின் மேம்பாட்டுக்காக நதி வாரியங்களை அமைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 (Water Prevention and Control of Pollution Act, 1974): நாட்டின் நீர்நிலைகள் மற்றும் நதிகளில் மாசைக் கட்டுப்படுத்தவும், நீரின் தூய்மையைப் பேணவும் உருவாக்கப்பட்ட முக்கியச் சட்டமாகும். நிர்வாக அதிகாரங்கள்மாநிலப் பட்டியல் (Entry 17): நீர் விநியோகம், பாசனம், கால்வாய்கள், நீர்தேக்கங்கள் போன்ற உள்ளூர் நீர் மேலாண்மைப் பணிகள் மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டவை. மத்தியப் பட்டியல் (Entry 56): பொது நலன் கருதி மாநிலங்களுக்கு இடையேயான நதிகள் மற்றும் நதிப் பள்ளத்தாக்குகளை ஒழுங்குபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. இந்தியாவின் நதிகள் மற்றும் நீர்நிலைகள் மீது கட்டப்படும் கட்டிடங்களால் தீவிரமான ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளன. இது இயற்கை நீரோட்டத்தை தடுத்து பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் சுற்றுச்சூழல் அழிவை உருவாக்குகிறது. சென்னையின் அடையாறு, ஐதராபாத்தின் மூசி நதி, ஹுசைன் சாகர், மும்பையில் மிதி நதி போன்ற பெருநகரங்களில் நதிக்கரைகள் மற்றும் நீர்நிலைகள் மீட்க முடியாத அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தனியார் மட்டுமின்றி பல அரசு அலுவலகங்களும், பொதுக் கட்டிடங்களும் நீர்நிலைப் புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ளன. நதிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடம் சுருங்குவதால் சாதாரண மழைக்குக் கூட பெருவெள்ளம் ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. நீதிமன்ற நடவடிக்கைகள்உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்றம் உட்பட நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும், பாதுகாக்கவும் தொடர்ந்து கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றன. அதேபோல் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து அரசுத் துறைகளிடம் தொடர்ச்சியாக அறிக்கைகளைக் கோரி வருகிறது. இந்தியாவில் ஆறுகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் போன்ற நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், அவற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மத்திய மற்றும் மாநில அளவிலான சட்டங்கள், விசேஷ அரசாணைகள் மற்றும் கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.
நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு எதிராக உள்ள தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம், 2007 (Tamil Nadu Protection of Tanks and Eviction of Encroachment Act, 2007): பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து, எவ்வித பாரபட்சமுமின்றி அகற்ற இச்சட்டம் முழு அதிகாரம் வழங்குகிறது.தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டம், 1905 (Tamil Nadu Land Encroachment Act, 1905): நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பவர்களை சுருக்கமான நடைமுறைகள் மூலம் வெளியேற்ற இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 (Environment Protection Act, 1986): தேசிய அளவில் நீர்நிலைகளின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கவும், ஆக்கிரமிப்பால் ஏற்படும் இயற்கைச் சீரழிவுகளைத் தடுக்கவும் இச்சட்டம் மத்திய அரசால் பயன்படுத்தப்படுகிறது.அரசாணை எண்: 540 (G.O. Ms. No. 540): சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பிறப்பிக்கப்பட்ட மிக முக்கியமான அரசாணையாகும். குளம், குட்டை, ஏரி மற்றும் கால்வாய் போன்ற நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை எளிய முறையில், பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் 60 நாட்களுக்குள் அகற்ற இவ்வாணை வழிவகை செய்கிறது. ஆனால் ஊழல் லஞ்சம் லாவண்யம் காரணமாக அகற்ற மீண்டும் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை அரசாணை (நிலை) எண்: 41 (G.O. Ms. No. 41): நீர்நிலைகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு நிலங்களின் வகைப்பாட்டை மாற்றுவதற்கும், அங்கு பட்டா வழங்குவதற்கும் கடுமையான தடைகளை விதிக்கும் அரசாணை. நீதிமன்ற விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகள்: இந்தியாவில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் வருவாய்த்துறை ஆவணங்களின் அடிப்படையில் எல்லை நிர்ணயம் செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகளின்படி, நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எக்காரணம் கொண்டும் மாற்றுப் பட்டாவோ அல்லது வரன்முறையோ செய்யக் கூடாது. ஏழை அல்லது நிலமற்றவர்கள் என்ற அடிப்படையிலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அனுமதிக்கப்பட மாட்டாது.பத்திரப்பதிவு மற்றும் மின் இணைப்புத் தடை: வருவாய்த்துறை ஆவணங்களில் 'நீர்நிலை' என வகைப்படுத்தப்பட்ட நிலங்களை பத்திரப்பதிவு செய்யக் கூடாது. மேலும், ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு மின்சாரம், குடிநீர் போன்ற எவ்வித உள்ளாட்சி அமைப்புகளின் சேவைகளும் வழங்கப்படக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் நீர்நிலைகளில் தான் அரசு மற்றும் தனியார் ஆக்கிரமிப்புகள் தொடர்கிறது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 48A மற்றும் 51A(g)-ன்படி, காடுகள், ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது அரசின் கடமை மற்றும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமையாகும். அது தான் இது போன்ற நேபாளத்தில் நடந்த வெள்ளப்பெருக்கு போல் நடந்தாலும் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.டெல்லி செல்லும் 4 தமிழ்நாடு அமைச்சர்கள்
நேபாளத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணியை மத்திய அரசுடன் இணைந்து ஒருங்கிணைக்கவும் கண்காணிக்கவும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோர் முதல்வர் உத்தரவுப் படி டெல்லி செல்கின்றனர் மேலும் நேபாளம் சென்ற மூவர் குறித்த தகவல் இல்லை என தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு
நேபாளத்திற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட தேனியைச் சேர்ந்த செல்வம், அவரது மனைவி |சித்ராதேவி, தாயார் சரஸ்வதி ஆகியோர் குறித்து, எந்த விதமான தகவலும் இல்லை என அவர்களது உறவினர்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
இவர்கள் குரோம்பேட்டையைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் நேபாளம் சென்றவர்கள் ஆவர்மேலும்
குரோம்பேட்டை தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கைலாஷ் யாத்ரை சென்ற 49 பேரின் நிலைமை குறித்து தகவல் இல்லை என உறவினர்கள் அச்சம்..!
நேற்று காலை வரை திபெத்தில் இருந்து உறவினர்களை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அதன்பின் தற்போது வரை யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனத் தகவல் மேலும் பாதுகாப்பாக இருக்கிறோம்
எங்களது கையிலாய யாத்திரையின் 2வது நாள் பயணத்தின் போது தான் நேபாள வெள்ளம் குறித்து கேள்விப்பட்டோம்
நாங்கள் 148 தமிழர்கள் 2 வெளிநாட்டவர் என 150 பேர் இருக்கிறோம் சிவபெருமானின் பேரருள், பெருங்கருணையால் நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம் என வழிபாட்டுக் காணொளி வெளியிட்டு தேசமங்கையர்கரசி, ஆன்மிக சொற்பொழிவாளர் தகவல்
வளர்ச்சி, வருமானம், வசதி வாய்ப்புகள்.. போன்ற கவர்ச்சிகரமான சொல்லாடல்களால் இயற்கையை அழிக்கும் கார்ப்பரேட்களின் பேராசை நோக்கத்தை மறைக்கலாம். ஆனால், இயற்கையிடம் மனிதனின் தந்திரோபாயங்கள் அனைத்தும் தோற்கும் என்பதற்கு நேபாளப் பெருவெள்ளமே சாட்சியாகும் !
எங்கே பேரழகு உள்ளதோ, அங்கே பேரழிவும் மறைந்திருக்கும் என்பது இதயத்தை கொள்ளை கொள்ளும் இமயமலையை அணிகலனாகக் கொண்ட நேபாள நாட்டில் ஏற்பட்ட பெருவெள்ளம் நிருபித்தது. ஆனால், இந்தப் பேரழிவுக்கு பேராசைபிடித்த ஆட்சியாளர்களும், அதை வியாபாரம் ஆக்கும் கார்ப்பரேட்களும் கைகோர்த்து இயற்கையை சூறையாடியுள்ளதைத் தானே மறைக்கிறார்கள்; ஏழைகளால் நெருங்கவே முடியாத
பெருவணிகமயமாகிப் போன ஆன்மீகச் சுற்றுலா, அந்த வணிக நோக்கங்களுக்காக மலையைக் குடைந்து போடப்படும் நீண்ட நெடிய சாலைகள், குறுக்கு வழிக்கான சுரங்க வழிப்பாதைகள், மலையில் இருந்து கீழ் நோக்கிப் பாயும் இயற்கையான ஆறுகளை தடுத்து ஏற்படுத்தப்பட்ட ஏகப்பட்ட நீர் மின் நிலையங்கள் எல்லாமே தற்போது இயற்கை உருக்குலைந்துள்ளது,
ஆன்மீகச் சுற்றுலா பெருவணிகமானதன் விளைவாக ஆறுகளின் படுகைகளிலும், வெள்ளம் பாயும் சமவெளிகளிலும், மலை முகட்டிலும் விதிகளை மீறிய ஸ்டார் அந்தஸ்து கொண்ட ரிசார்ட்டுகளும், வணிகக் கட்டிடங்களும் எழுப்பப்படுகின்றன. இதனால் தான் ஆற்று நீர் இயற்கையான நீரோட்டத்தில் இருந்து மாறுபட்டு கட்டுமானங்களை உருக்குலைக்கின்றன.
இந்த இயற்கை எந்த அளவுக்கு வணிக நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கு இங்கு எல்லையோர சாலைகளில் ஓடிக் கொண்டிருந்த 200-க்கும் மேற்பட்ட லாரிகள், டிரக்குகளின் நடமாட்டங்களே சாட்சியாகும் . அவை அனைத்தையும் இயற்கை தூக்கி எறிந்து சிதைத்துள்ளது.
கார்ப்பரேட்களின் நாசகாரத் திட்டங்களின் விளைவே சுற்றுச்சூழல் அழிவுக்கு காரணமாகி இந்த பெருவெள்ளத்தின் தாக்கத்தை பேரழிவாக்கிவிட்டுள்ளது
அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்டுள்ள தற்போதய தகவல்களின்படி நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட இந்த வரலாறு காணாத பேரழிவிற்கு இயற்கையான காலநிலை மாற்றத்தோடு செல்வாக்கான மனிதர்களின் பேராசையும் காரணமாகின்றன.
பேரழிவை உருவாக்கியது, பேராசைத் திட்டங்களே காரணம் !

































































கருத்துகள்